மகாராஷ்டிராவில் சிலிண்டர் வெடித்து 14 பேருக்கு பலத்த காயம்..!

மகாராஷ்டிராவில் சிலிண்டர் வெடித்து 14 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை நகரின் தாராவியில் இந்த சிலிண்டர் விபத்து ஏற்பட்டுள்ளது. சிலிண்டர் வெடித்ததில் மொத்தம் 14 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.  இது குறித்து தெரிவித்த மும்பை மாநகராட்சி, காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள சியான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளது.

மேலும், இந்த விபத்து குறித்த காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இந்த சிலிண்டர் விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.