70 ஆண்டுகளுக்கு பின் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி..!

70 ஆண்டுகளுக்கு பின் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டுள்ளார்.  பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2 நாள் பயணமாக சென்னைக்கு வருகை புரிந்துள்ளார். நேற்று சென்னை வந்த அவர், செஸ் ஒலிம்பியாட் விழாவில் கலந்துகொண்டார். இதனை தொடர்ந்து தற்போது பிரதமர் மோடி அண்ணா பல்கலைக்கழக 42-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து தலைமை விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். இந்த விழாவில் 69 மாணவர்களுக்கு தங்க பதக்கம் மற்றும் சான்றிதழை வழங்கவுள்ளார். 70 ஆண்டுகளுக்கு … Read more

அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு புறப்பட்டார் பிரதமர் மோடி..!

பிரதமர் மோடி அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக புறப்பட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2 நாள் பயணமாக சென்னைக்கு வருகை புரிந்துள்ளார். நேற்று சென்னை வந்த அவர், செஸ் ஒலிம்பியாட் விழாவில் கலந்துகொண்டார். இதனை தொடர்ந்து தற்போது பிரதமர் மோடி அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக புறப்பட்டுள்ளார். பிரதமர் அவர்கள் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள உள்ள நிலையில், 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், இந்த விழாவில், தமிழக … Read more

பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு..!

பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், 481 பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி வளாக பொறியியல் கல்லூரி தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் மாணவர்கள் அதிகம் விரும்பக் கூடிய கல்லூரிகள் என்ற அடிப்படையில் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

#Breaking:பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு!

481 பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.தரவரிசைப் பட்டியலின்படி,சென்னை கிண்டி,குரோம்பேட்டை பொறியியல் கல்லூரிகள் முதல் இரு இடத்தை பிடித்துள்ளன. இதனைத் தொடர்ந்து,பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை பார்த்து கல்லூரிகளை தேர்வு செய்யலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மேலும்,பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலைக் காண https://www.annauniv.edu/pdf/COLLEGE%20RANKING%20BASED%20ON%20PERCEPTION.pdf இங்கே க்ளிக் செய்யவும்.

#Breaking:225 BE கல்லூரிகளுக்கு திடீர் நோட்டீஸ்;மாணவர் சேர்க்கைக்கும் அனுமதி இல்லை – அண்ணா.பல்.கழகம் எச்சரிக்கை!

தமிழகத்தில் உள்ள 225 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.அதில்,தகுதியான ஆசிரியர்கள் மற்றும் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது குறித்து கல்லூரிகள் இரண்டு வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என அண்ணா பல்.கழகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி,உரிய விளக்கம் தராத கல்லூரிகளுக்கு அங்கீகார நீட்டிப்பு இல்லை என்றும்,மாணவர் சேர்க்கைக்கும் அனுமதி வழங்கப்படாது எனவும் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் தங்களது கட்டுப்பாட்டின்கீழ் உள்ள 476 பொறியியல் கல்லூரிகளை ஆய்வு செய்த பிறகு அதில் 225 கல்லூரிகளுக்கு இத்தகைய உத்தரவை அண்ணா … Read more

போலி E – Mail – அண்ணா பல்கலைக்கழகம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலைக்கழகத்தில் இடம் இருப்பதாக கூறி முன் பணம் கேட்டு வரும் இ-மெயில்கள் போலியானவை என்று அண்ணா பல்கலைக்கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான முன்பதிவு ஜூன் 20 முதல் ஆன்லைனில் தொடங்க உள்ளது. மேலும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும், அசல் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவும் ஜூலை 19ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை குறித்த தவறான தகவல் பரவி வருகிறது. அதன்படி அண்ணா பல்கலைக்கழகத்தில் … Read more

சான்றிதழ் கட்டணத்தை 10 மடங்கு உயர்த்திய அண்ணா பல்கலைக்கழகம்…!

அண்ணா பல்கலைக்கழகம் தொலைந்துபோன Grade / Mark Sheet-ஐ மீண்டும் பெற ரூ.300-ஆக இருந்த கட்டணம் ரூ.3,000-ஆகவும், Degree Certificate-க்கு கட்டணம் ரூ.3,000-ல் இருந்து ரூ.5,000 ஆகவும் உயர்த்தி உள்ளது.  கிரேடு, மதிப்பெண் சான்றிதழ் தொலைந்து போனால், புதிய சான்று பெறுவதற்கான கட்டணத்தை அண்ணா பல்கலைக்கழகம் 10 மடங்கு உயர்த்தியுள்ளது. அதனபடி, தொலைந்துபோன Grade / Mark Sheet-ஐ மீண்டும் பெற ரூ.300-ஆக இருந்த கட்டணம் ரூ.3,000-ஆகவும், Degree Certificate-க்கு கட்டணம் ரூ.3,000-ல் இருந்து ரூ.5,000 ஆகவும் … Read more

10,000 மாணவர்களுக்கு அப்சென்ட் – அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி

கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் மார்ச் 14-ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய பி.இ, பி.டெக் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியில் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் காலை 9 மணி அளவில் தேர்வு எழுத தொடங்கி மதியம் 12:30 மணியளவில் சமர்ப்பிக்க வேண்டும் என்பது விதிமுறை. ஆனால் ஒன்றரை மணி நேரம் கூடுதலாகவும் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த நேரம் எதற்காக என்றால் ஆன்லைன் தேர்வு எழுதும் மாணவர்கள் விடைதாள்களை பதிவேற்றம் செய்வதற்காக நேரம் ஒதுக்கப்பட்டது. மாணவர்களுக்கு … Read more

#Breaking:25 ஆண்டுகளுக்கு பிறகு அண்ணா பல்.கழகத்தின் பாடத்திட்டம் மாற்றம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!

அண்ணா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படவுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.மேலும்,தேசிய கல்விக் கொள்கைக்கு பதிலாக மாநில கல்விக் கொள்கையை உருவாக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் பொன்முடி அவர்கள் அறிவித்துள்ளார். இது தொடர்பாக,அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில்: “25 ஆண்டுகளுக்கு பிறகு அண்ணா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டம் மாற்றப்படவுள்ளது.தேசிய கல்விக் கொள்கைக்கு பதிலாக மாநில கல்விக் கொள்கையை உருவாக்க குழு அமைக்கப்பட்டுள்ளது”,என்று தெரிவித்துள்ளார். மேலும்,உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய தமிழக மாணவர்கள் உயர்கல்வி பயில அனைத்து உதவிகளையும் தமிழக … Read more

பொறியியல் செமஸ்டர் தேர்வு – இணையத்தில் பதிவு செய்யலாம்!

பொறியியல் மாணவர்களுக்கான ஆன்லைன் செமஸ்டர் தேர்வுக்கு இணையத்தளத்தில் பதிவு செய்யலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு. தமிழகத்தில் கொரோனா பாதுகாப்பு மையங்களாக செயல்படும் கல்லூரிகள் தவிர்த்து, மற்ற அனைத்து அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / தொழிற்பயிற்சி மற்றும் பயிற்சி நிலையங்கள் நிலையான கொரோனா வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டியிருந்தது. இதன்பின், கல்லூரிகள் பிப்ரவரி 1-ல் திறந்தாலும், ஏற்கனவே அறிவித்தபடி செமஸ்டர் … Read more