இன்னும் பிஞ்சு போன செருப்பை விடலையா.? சர்ச்சையில் சிக்கிய அண்ணாமலை.!

BJP State President K Annamalai

Annamalai : ஸ்ரீபெரும்பதூர் தொகுதியில் அண்ணாமலை பிரச்சாரம் செய்யும் போது இந்தி எதிர்ப்பு பற்றி தவறாக பேசியதாக அவர் மீது விமர்சனம் எழுந்துள்ளது. மக்களவை தேர்தல் தமிழகத்தில் நெருங்கி வருவதால், தேர்தல் பிரச்சாரங்கள் தமிழகமெங்கும் களைகட்ட ஆரம்பித்துள்ளன. அரசியல் தலைவர்கள் சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். பல்வேறு இடங்களில் அரசியல் தலைவர்கள் மற்ற கட்சிகள் பற்றி காரசார விமர்சனங்ளை முன்வைத்து வருகிறார்கள் ஸ்ரீபெரும்புதூரில், பாஜக கூட்டணி சார்பாக தமாகா வேட்பாளர் வேணுகோபால் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து இன்று … Read more

ஆரத்தி எடுத்த பெண்ணிற்கு பணம்: அண்ணாமலை விளக்கம்

Annamalai: ஆரத்தி எடுத்த பெண்ணிற்கு பணம் கொடுத்ததாக வீடியோ பரவிய விவகாரம் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம். மக்களவை தேர்தல் ஓட்டுப்பதிவுக்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில் தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் களைகட்டியுள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில், கோவையில் தேர்தல் பிரசாரத்தின்போது ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு தமிழக பா.ஜ.க. தலைவரும், கோவை தொகுதி பாஜக வேட்பாளருமான அண்ணாமலை மறைத்து வைத்து பணம் கொடுப்பது … Read more

ஆரத்திக்கு பணம் கொடுத்தாரா அண்ணாமலை.? தேர்தல் அலுவலகம் விசாரணை.! 

BJP State President Annamalai

Annamalai : பிரச்சாரத்தின் போது வாக்காளர் ஒருவருக்கு அண்ணாமலை பணம் கொடுத்ததாக வெளியான வீடியோ குறித்து தேர்தல் அலுவலர் விசாரணை நடத்த உள்ளார். தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெற இன்னும் 3 வார காலமே உள்ளதால் அரசியல் கட்சி தலைவர்கள் வெகு தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  அவர்கள் மக்களை நேரடியாக சந்திக்கும்போது வாக்காளர்களிடம் பணம் கொடுப்பது போன்ற ஏதேனும் வீடியோ வெளியாகி விடுகிறது. பிறகு அதன் உண்மை தன்மையை தேர்தல் அலுவலர் ஆய்வு செய்து … Read more

அண்ணாமலை வேட்புமனு செல்லாது என அறிவிக்க கோரிக்கை!

annamalai

Annamalai : தேர்தல் விதிகளுக்கு மாறாக அண்ணாமலை, நீதிமன்ற  முத்திரை தாளில் பிராமண பத்திரம் தாக்கல் செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில் 39 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவு பெற்ற நிலையில், இன்று காலை முதல் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. அப்போது, பல்வேறு வேட்புமனுக்களை ஏற்கப்பட்ட நிலையில், சில மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. இதில் ஒருசில வேட்புமனுக்கள் நிறுத்தியும் வைக்கப்பட்டது. இந்த சூழலில் கோவை தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று வேட்புமனு … Read more

திருக்குறள் விவகாரம்.! பிரதமர் செய்வது நடிப்பு.. நாடகம்… அதிமுக முன்னாள் அமைச்சர் விளாசல்.!

PM Modi

CV Shanmugam : திருக்குறளை ஏன் தேசிய நூலாக பிரதமர் அறிவிக்கவில்லை என சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார் . திண்டிவனத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் அதிமுக பிரச்சார கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் உரையாற்றினார். அவர் பேசுகையில் பிரதமர் மோடி பற்றியும், திருக்குறள் பற்றியும் பல்வேறு கருத்துக்களையும், விமர்சனங்களையும் முன்வைத்தார். அவர் பேசுகையில், 10 வருடமாக மத்தியில் பாஜக ஆட்சி இருக்கிறது. நரேந்திர மோடி பிரதமராக இருக்கிறார். இதனால் அவர்தான் மகிழ்ச்சியாக இருக்கிறார். மக்கள் மகிழ்ச்சியாக … Read more

என் அம்மாவை நேரில் பார்த்து 2 மாசம் ஆச்சு.. அண்ணாமலை வருத்தம்.! 

BJP State President Annamalai

Annamalai : அரசியலில் விடுமுறை எடுக்காமல் இருக்கிறேன். என் அம்மாவை பார்த்து 2 மாசம் ஆயிடிச்சு -அண்ணாமலை. தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் தலைவர்கள் வெகு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இன்று திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பாஜக தொண்டர்கள் கலந்து கொண்ட செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக மாநில தலைவரும், கோவை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளருமான அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், அரசியல் கட்சியுடன் சண்டை போடுவதற்காக … Read more

1000 ரூபாய் உரிமை தொகை 1500 ஆக தரப்படும்.. அண்ணாமலை உறுதி.!

Coimbatore BJP Candidate Annamalai

Annamalai : மகளிர் உரிமை தொகை 1000 ரூபாயில் இருந்து 1500 ரூபாயாக உயர்த்தி தரப்படும் என கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை கூறினார். தமிழகத்தில் மக்களவை தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ள நிலையில், நேற்று கோவையில் கட்சி கூட்டத்தில் பேசிய பாஜக வேட்பாளரும், மாநில தலைவருமான அண்ணாமலை மகளிர் உரிமை தொகை பற்றியும் திமுக ஆட்சி பற்றியும் பல்வேறு கருத்துகளை தெரிவித்தார். அவர் கூறுகையில், இந்த முறை 400 எம்பிக்களுக்கு மேல் பாஜக ஜெயிக்கும் போது, … Read more

திமுக vs அதிமுக தான்.. பாஜக ஒண்ணுமேயில்லை.. எஸ்.பி.வேலுமணி அதிரடி.!

BJP State Leader Annamalai - ADMK Ex Minister SP Velumani

Election2024 : கோவையில் போட்டி திமுகவுக்கும் அதிமுகவுக்கும் தான் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பிரச்சாரம் செய்தார். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் ஒரு மாத காலதிற்குள் காலஅவகாசம் உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளன. கடந்த முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வென்ற தொகுதியான கோவையில் இந்த முறை திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்படாமல் திமுகவே நேரடியாக களமிறங்கியதற்கு காரணம் என்னவென்று பலரும் யோசிக்கவே, தாடாலடியாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை … Read more

Election Breaking : பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு…

PMK Leader Anbumani Ramadoss

Election2024 : பாஜக தலையிலான தேசிய ஜனநாயக கூட்டனியில் (NDA) தமிழகத்தில் இருந்து முக்கிய அங்கம் வகிக்கும் கட்சியாக பாமக உள்ளது. தமிழகத்தில் பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருந்தன. தற்போது அந்த 10 தொகுதிகளில் 9 மக்களவை தொகுதிக்கான வேட்பாளர் பட்டியலை அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ளார். அதன்படி வெளியான பாமக வேட்பாளர் பட்டியல் விவரங்கள் இதோ…. திண்டுக்கல் – கவிஞர் ம.திலகபாமா. அரக்கோணம் – வழக்கறிஞர் கே.பாலு, பி.காம்., பி.எல். … Read more

தமிழக பாஜக வேட்பாளர் பட்டியல் : கோவையில் அண்ணாமலை… சென்னையில் தமிழிசை…

Annmalai - Tamilisai soundarajan

Election2024 : மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக தமிழகத்தின் 20 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. மேலும் கூடுதலாக நான்கு தொகுதிகளில் கூட்டணி கட்சிகளுக்கு தாமரை சின்னத்தில் போட்டியிட வாய்ப்பளித்துள்ளது. இதில், முதற்கட்ட பாஜக வேட்பாளர் பட்டியலை பாஜக தலைமை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். சென்னை தெற்கு மக்களவைத் தொகுதியில் முன்னாள் பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் … Read more