டெல்லி விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக நடிகை டாப்ஸி ட்வீட்!

டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்திற்கு பிரபல ஹாலிவுட் மற்றும் பாலிவுட் நடிகர்கள் ஆதரவு தெரிவித்துவரும் நிலையில் நடிகை டாப்ஸியும் தனது ஆதரவை ட்விட்டர் பதிவு மூலமாக தெரிவித்துள்ளார். இரண்டு மாதங்களுக்கு மேலாக டெல்லியில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்கள் அண்மையில் கலவரமாகவும் மாறியது. இந்நிலையில் தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டேதான் இருக்கின்றனர். விவசாயிகளின் … Read more

16 வயது பழங்குடியின சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த 6 ஆண்கள் கைது!

16 வயது சிறுமியை ஒரே நேரத்தில் பலாத்காரம் செய்து கொலை செய்த 6 ஆண்கள் சத்தீஸ்கரில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போதைய காலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து விட்டது. மேலும் சிறுமி என்று கூட பாராமல் பலர் பலாத்காரம் செய்யக்கடிய சம்பவமும் அரங்கேறி வருகிறது. இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்திலும் இதுபோன்ற சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. 16 வயது மட்டுமே ஆகக்கூடிய பழங்குடியின சிறுமி ஒருவரை 6 ஆண்கள் சேர்ந்து பலாத்காரம் செய்து கற்களால் அடித்து … Read more

கேரள முதல்வர் நம்பகத்தன்மையை இழந்துவிட்டார் – பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா பேச்சு!

கேரளாவின் முதல்வர் பினராயி விஜயன் நம்பகத்தன்மையை இழந்து விட்டதாகவும் விசாரணை முடிவில் பல அமைச்சர்கள் சிக்குவார்கள் எனவும் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா அவர்கள் தங்க கடத்தல் குறித்து பேசியுள்ளார். கேரளா அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக நடைபெற்ற தங்க கடத்தல் குறித்து கேரள மாநிலத்தில் இரண்டு நாள் பயணமாக சென்றுள்ள பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி நட்டா அவர்கள் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், முதல்வர் அலுவலகத்தில் நடந்த … Read more

மாஸ்டர் படம் பார்க்க மலேசியாவிலிருந்து சென்னை வந்து ஒரு தியேட்டர் முழுவதையும் புக் செய்த தீவிர ரசிகை!

விஜய் மீது கொண்டுள்ள அளவுக்கதிகமான அன்பினால் மலேசியாவில் உள்ள அவரது ரசிகை ஒருவர் சென்னையில் உள்ள ஒரு தியேட்டர் முழுவதையும் புக் செய்து மலேசியாவிலிருந்து தனது குடும்பத்தினர் முழுவதையும் கூட்டி வந்து படம் பார்த்து சென்றுள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் அவருக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து வெளியாகிய தமிழ் திரைப்படம் தான் மாஸ்டர். இந்த படம் அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விமர்சன ரீதியாக சில … Read more

மறைந்த மனைவியை கணவன் கண் முன் கொண்டுவந்து மகிழ்வித்த விர்சுவல் ரியாலிட்டி!

தென்கொரியாவை சேர்ந்த குழு உயிரிழந்த பெண்மணி ஒருவரை மீண்டும் விர்சுவல் ரியாலிட்டி மூலமாக கற்பனை உலகில் கொண்டுவந்து அவரது கணவரை நடனமாடி மகிழ்விக்க செய்துள்ளது. முன்பு காலத்தில் எல்லாம் உயிரிழந்தவர்களின் நினைவுகளுடன் வாடிய குடும்பங்கள், அவர்களின் புகைப்படங்கள் ஏதாவது ஒன்றோ இரண்டோ கிடைத்தால் அதை பார்த்து ஏங்குபவர்களையும் தான் நாம் கண்டு வருத்தப்பட்டு இருப்போம். ஆனால் தற்பொழுது ஒருவர் உயிரிழந்து விட்டால் அவரது நினைவாக அவரது பல்வேறு வீடியோக்கள் சமூக வலைதள புகைப்படங்கள் என அனைத்தும் கையிலேயே … Read more

400 ரூபாயை கடனாக வாங்கிவிட்டு திருப்பி தராததால் நண்பன் அடித்து கொலை!

தன்னிடம் கடனாக நண்பன் வாங்கிய 400 ரூபாயை திருப்பி தராமல் விட்டதால் அடித்து கொலை செய்த நபர் கைது. தற்போதைய காலகட்டத்தில் உறவினர்கள் கடன் வாங்கி விட்டு திருப்பி தர முடியாவிட்டாலும், அதை சகித்து கொண்டு அவர்களின் நிலையை புரிந்து விலகி செல்பவர்களை விட எப்படியேனும் திருப்பி தா எனும் உறவுகள் தான் அதிகம் உள்ளது. ஆனால், நண்பர்களுக்குள் பணத்திற்க்காக அவ்வாறெல்லாம் அடித்து கொள்ளமாட்டார்கள் என்று தான் நினைப்போம். மஹாராஷ்டிரா மாநிலத்தில் நண்பனை நண்பனே கடன் வாங்கிய … Read more

தித்திக்கும் சுவையில் ரசமலாய் வீட்டிலேயே செய்வது எப்படி?

வீட்டிலேயே ரசகுல்லா செய்வது போல அட்டகாசமாக ரசமலாய் ஈஸியாக எப்படி செய்வது என்பது பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் பால் சர்க்கரை குங்குமப்பூ உப்பு ஏலக்காய் எலுமிச்சை பழம் செய்முறை முதலில் பாலை ஒரு சட்டியில் எடுத்துக்கொண்டு நன்றாக காய்ச்சவும், கொதித்து வந்ததும் எலுமிச்சை பழம் 2 டீஸ்பூன் அல்லது வினிகர் விட்டு வைத்து எடுத்துக் கொள்ளவும். பின் பாலடைக்கட்டிகளாக திரண்டுள்ளவற்றை ஒரு வடிகட்டியில் வடித்து லேசாக குளிர்ந்த நீரையும் அதன் மீது ஊற்றி வடித்து எடுத்து … Read more

5 மொழிகளில் மாஸாக வெளியாகிய சிம்புவின் மாநாடு டீசர்!

இன்று சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்திருந்த மாநாடு படத்திற்கான டீசர் ஏ ஆர் ரகுமான் அவர்களால் தமிழில் வெளியிடப்பட்டுள்ளது. வெங்கட்பிரபு அவர்களின் இயக்கத்திலும் சுரேஷ் காமாட்சி அவர்களின் தயாரிப்பிலும் உருவாகி வரக்கூடிய சிம்புவின் புதிய திரைப்படம் தான் மாநாடு. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர், எஸ் ஜே சூர்யா, மகேந்திரன், டேனியல் பாலாஜி, பிரேம்ஜி, அரவிந்த், ஆகாஷ் ஆகிய பிரபலங்கள் படத்தில் இணைந்து நடிக்கின்றனர். அரசியலை மையப்படுத்தி … Read more

விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக சமூக ஆர்வலர் கிரேட்டா மற்றும் பாப் பாடகி ரிஹானா!

டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு சர்வதேச சமூக ஆர்வலர் கிரேட்டா மற்றும் அமெரிக்க பாப் பாடகி ரிஹானா ஆகியோர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். டெல்லியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வபோது கலவரங்களாக மாறி வரும் இந்த போராட்டங்களுக்கு தற்போது பலரும் தங்களது ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளில் இணைய சேவை துண்டிக்க படும் … Read more

பத்தாம் வகுப்பு தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட 11 வயது சிறுவன்!

சத்தீஸ்கரில் 11 வயது மட்டுமே ஆகக்கூடிய ஐந்தாம் வகுப்பு படிக்க கூடிய சிறுவன் தற்பொழுது நடைபெற்று வரும் கல்வி ஆண்டிறகான பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளாராம். ஆயிரத்தில் ஒருவருக்கு அதிர்ஷ்டம் அடிப்பதுபோல அறிவு கூர்மை அதிகம் இருக்கிறது என்று சோதிக்கப்பட்ட சில மாணவர்கள் தங்களது தகுதியையும் மீதி அதற்கு முந்தய வகுப்புகளை படிக்கக் கூடிய வாய்ப்புகளை சில சமயங்களில் பெற்றிருப்பதை கேள்விப்பட்டிருப்போம். அதேபோல சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள துர்க் எனும் மாவட்டத்தை சேர்ந்த 11 வயது … Read more