தித்திக்கும் சுவையில் ரசமலாய் வீட்டிலேயே செய்வது எப்படி?

வீட்டிலேயே ரசகுல்லா செய்வது போல அட்டகாசமாக ரசமலாய் ஈஸியாக எப்படி செய்வது என்பது பார்க்கலாம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்

  • பால்
  • சர்க்கரை
  • குங்குமப்பூ
  • உப்பு
  • ஏலக்காய்
  • எலுமிச்சை பழம்

செய்முறை

முதலில் பாலை ஒரு சட்டியில் எடுத்துக்கொண்டு நன்றாக காய்ச்சவும், கொதித்து வந்ததும் எலுமிச்சை பழம் 2 டீஸ்பூன் அல்லது வினிகர் விட்டு வைத்து எடுத்துக் கொள்ளவும். பின் பாலடைக்கட்டிகளாக திரண்டுள்ளவற்றை ஒரு வடிகட்டியில் வடித்து லேசாக குளிர்ந்த நீரையும் அதன் மீது ஊற்றி வடித்து எடுத்து வைத்துக்கொள்ளவும். நன்றாக நீரைப் பிழிந்து விட்டு 5 நிமிடம் ஊறவைக்கவும். அதன்பின் கைகளால் நன்றாக பிசைந்து சிறு சிறு வடைகளாக தட்டி அதை நசுக்கி தட்டை வடிவத்தில் செய்து வைத்துக் கொள்ளவும்.

அதன் பின் மற்றொரு சட்டியில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து பாகு தயாரிக்கவும், பாகு நன்கு கொதித்து வந்ததும் தட்டி வைத்துள்ள ரசமலாய்களை அதனுள் போட்டு நன்றாக கொதிக்க விடவும். நாம் தட்டி எடுத்ததை விட இரண்டு மூன்று மடங்கு பெரியதாக மாறும். அதன் பின் மற்றொரு சட்டியில் பாலை எடுத்துக் நன்கு கொதிக்க வைத்து அதில் லேசாக குங்கும பூ சேர்த்து மஞ்சள் நிறத்தில் வந்ததும் நாம் ஏற்கனவே சர்க்கரை பாகில் போட்டு உள்ள ரசமலாய்களை  கைகளால் மெல்ல அழுத்தி பிழிந்து பிழிந்து பால் கலவையில் சேர்க்கவும். 20 நிமிடம் ஊற வைத்து எடுத்து சாப்பிட்டால் அட்டகாசமான ரசமலாய் வீட்டிலேயே தயார்.

author avatar
Rebekal