மாஸ்டர் படம் பார்க்க மலேசியாவிலிருந்து சென்னை வந்து ஒரு தியேட்டர் முழுவதையும் புக் செய்த தீவிர ரசிகை!

மாஸ்டர் படம் பார்க்க மலேசியாவிலிருந்து சென்னை வந்து ஒரு தியேட்டர் முழுவதையும் புக் செய்த தீவிர ரசிகை!

Default Image

விஜய் மீது கொண்டுள்ள அளவுக்கதிகமான அன்பினால் மலேசியாவில் உள்ள அவரது ரசிகை ஒருவர் சென்னையில் உள்ள ஒரு தியேட்டர் முழுவதையும் புக் செய்து மலேசியாவிலிருந்து தனது குடும்பத்தினர் முழுவதையும் கூட்டி வந்து படம் பார்த்து சென்றுள்ளார்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் அவருக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து வெளியாகிய தமிழ் திரைப்படம் தான் மாஸ்டர். இந்த படம் அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விமர்சன ரீதியாக சில எதிர்மறை கருத்துக்களை பெற்றாலும் வசூல் ரீதியாக படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்றுதான் கூறியாக வேண்டும். மேலும் விஜய் ரசிகர்கள் படத்தை பார்ப்பதற்காக மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் மலேசியாவில் உள்ள ஆஷ்லினா எனும் ஒரு விஜய்யின் தீவிர ரசிகை ஒருவர் மாஸ்டர் படத்தை பார்க்க வேண்டும் என்பதற்காக மலேசியாவில் இருந்து சென்னைக்கு வர முயற்சிக்கிறார். ஒரு முறை வந்தும் இருக்காய் கிடைக்காமல் சென்றுள்ளார்.

பலமுறை இவரது முயற்சிகள் வீணாக சென்றாலும் தற்பொழுது அவர் நீண்ட முயற்சிக்கு பின்பதாக அண்ணா சாலையில் உள்ள ஒரு திரையரங்கில் ஒட்டுமொத்த இருக்கைகளையும் முன்பதிவு செய்துள்ளார். அதன்பின் அவருக்கு 150 இருக்கைகள் கொண்ட அந்த தியேட்டர் முழுவதும் புக்கிங் செய்யப்பட்டதை அடுத்து தனது உறவினர்கள் நண்பர்கள் அனைவரையும் அழைத்து வந்து சென்னையில் உள்ள அண்ணா சாலையில் தியேட்டரில் படம் பார்த்து படுஜோராக விசிலடித்து போட்டோ எடுத்து தனது இணையதள பக்கங்களில் எல்லாம் பதிவிட்டுள்ளார். மாஸ்டர் படம் பார்ப்பதற்காக மலேசியாவில் இருந்து வந்தது மட்டுமல்லாமல் ஒரு முழு தியேட்டரையும் புக் செய்து குடும்பத்தினருடன் வந்து சென்ற இப் பெண்மணியின் செயல் பலரையும் வியப்படையச் செய்துள்ளது.

Join our channel google news Youtube