#JustNow : நாடு முழுவதும் நாளை டிஜிட்டல் நாணயம் அறிமுகம் – ரிசர்வ் வங்கி

நாடு முழுவதும் சோதனை முறையில் நாளை டிஜிட்டல் நாணயம் அறிமுகம். நாடு முழுவதும் சோதனை முறையில் நாளை டிஜிட்டல் நாணயம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ரிசர்வ் வாங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, பாரத் ஸ்டேட் வங்கி, பேங்க் ஆப் பரோடா, உள்ளிட்ட 9 வங்கிகள் மூலம் டிஜிட்டல் நாணயம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்று செயல்படும் விடியா அரசு – ஈபிஎஸ்

2021 – 2022-ம் ஆண்டு பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தைக் கூட வாங்கித் தர இயலாத கையாலாகாத விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து ஈபிஎஸ் அறிக்கை.  2021 – 2022-ம் ஆண்டு பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தைக் கூட வாங்கித் தர இயலாத கையாலாகாத விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாக ஈபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். எங்கும் ஊழல் எதிலும் ஊழல் … Read more

சூர்யகுமாரின் வீக்னஸை கண்டுபிடிப்பது ரொம்ப கஷ்டம்- முன்னாள் நியூசிலாந்து வீரர்

சூர்யகுமாரின் வீக்னஸ் என்னவென்று கண்டுபிடிப்பது ரொம்பவே கடினம் என்று ஸ்டீபன் பிளெமிங் கூறியுள்ளார். டி-20 உலகக்கோப்பை போட்டியின் சூப்பர்-12 போட்டியில் நேற்று நடைபெற்ற இந்தியா-தென் ஆப்பிரிக்கா ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்திய அணியில் சூரியகுமார் யாதவ் மட்டும் நிலைத்து நின்று விளையாடி 68 ரன்கள் குவித்திருந்தார். இந்த நிலையில் நேற்றைய போட்டிக்கு பிறகு முன்னாள் நியூசிலாந்து கேப்டன் ஸ்டீபன் பிளெமிங், இந்திய வீரர் சூரியகுமார் பற்றி தனது கருத்தை தெரிவித்துள்ளார். வேகம் மற்றும் … Read more

விசிக சார்பில் நாளை ஆர்ப்பாட்டம்..!

விசிக சார்பில் நாளை சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.  விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள் தலைமையில், நாளை சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்டை நடத்திய துப்பாக்கிச்சூடு, இந்தி திணிப்பு மற்றும் மாநில உரிமைகள் பறிப்பு ஆகியவற்றைக் கண்டித்து, சைதையில் நாளை மாலை 3.00 மணியளவில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. நாளை நவம்பர்-01 மொழிவழி தேசிய உரிமைநாள். சைதையில் நாளை மாலை 3.00 மணியளவில் மாபெரும் ஆர்ப்பாட்டம். தமிழக மீனவர்கள்மீது … Read more

ஆளுநர் தமிழிசையின் காலில் விழுந்து கெஞ்சிய சிறை கைதிகள்…!

புதுச்சேரி காலாபட்டு மத்திய சிறையில் ஆய்வுசெய்த ஆளுநர் தமிழிசை காலில் விழுந்து கெஞ்சிய கைதிகள்.  புதுச்சேரி காலாபட்டு மத்திய சிறையில் ஆளுநர் தமிழிசை ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த சிறை கைதிகள், 20 ஆண்டுகளுக்கும் மேலாக தாங்கள் சிறையில் இருப்பதாகவும், விடுதலை செய்யுங்கள் எனக் கூறியும் காலில் விழுந்து கெஞ்சி உள்ளனர். இதனையடுத்து ஆளுநர் தமிழிசை, கோரிக்கையை ஆலோசிப்பதாக உறுதி கொடுத்தார். தமிழிசை காலில் விழுந்த கைதிகளை போலீசார் தூக்கி விட்டனர்.

நாம் தமிழர் கட்சி சார்பில் நாளை மாபெரும் இந்தி எதிர்ப்பு பேரணி..!

நாளை நாம் தமிழர் கட்சி சார்பில் மாபெரும் இந்தி எதிர்ப்பு பேரணி நடைபெறவுள்ளது.  இதுகுறித்து சீமான் அவர்கள் வெளியிட்டுள்ள என் உயிரோடு கலந்து வாழ்கின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்! நாளை நவம்பர் 01 – ‘தமிழ்நாடு நாள் அன்று, சென்னை எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டுத்திடலில் நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு இணைந்து முன்னெடுக்கும் மாபெரும் இந்தி எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்பதற்காக வருகை தரவிருக்கும் உங்கள் அனைவரையும் நேரில் சந்திக்க பெரும் ஆர்வத்துடனும், மகிழ்ச்சியுடனும் காத்திருக்கின்றேன். … Read more

#T20 World Cup 2022: தனியாக போராடிய லோர்கன் டக்கர், அயர்லாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா.!

டி-20 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலிய அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தியது. எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் அயர்லாந்து அணிகள் விளையாடியது. டாஸ் வென்ற அயர்லாந்து அணி கேப்டன் ஆஸ்திரேலிய அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தார். இதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் பின்ச் 63 ரன்களும், ஸ்டோனிஸ் 35  ரன்களும் குவித்தனர். … Read more

தி.மு.க.,வும் அ.தி.மு.க.,வும் அண்ணன் – தம்பி மாதிரி – அமைச்சர் கே.என்.நேரு

அதிமுக இருக்கும் இடத்தை பிடித்து விட வேண்டும் என்பதற்காக அவர்களை ஒன்று சேர விடாமல் பாஜக செயல்பட்டு வருகிறது என கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.  திருச்சி மத்திய மாவட்ட திமுக செயல் வீரர்கள் கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், வரும் 4-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி வருகிறார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும். சிறிய தவறுகளை கூட, பாஜக சேர்ந்தவர்கள் ஊதி … Read more

நன்கொடை வசூலித்தல் சட்டப்படி குற்றம் – சென்னை உயர் நீதிமன்றம்

கல்வி நிறுவனங்களில் நன்கொடை வசூலித்தல் தண்டனைக்குரிய குற்றமாகும் என சென்னை உயர்நீதி மன்றம் கூறியுள்ளது. அறக்கட்டளைகள் மூலம் மாணவர்களுக்கு வசூலித்த நன்கொடைகளுக்கு வரி செலுத்தவேண்டும் என்ற வருமான வரித்துறையின் உத்தரவுக்கு எதிராக கல்வி நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், நன்கொடைகள் வசூலிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் அவ்வாறு நன்கொடைகள் வசூலிப்பதை நிறுத்த அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். மேலும் நன்கொடை வசூலிக்கும் கல்வி நிறுவனங்கள் குறித்த தகவல் தெரிவிக்க ஒரு இணையதளம் ஏற்படுத்த … Read more

அண்ணாமலை மத்திய பா.ஜ.க. அரசால் அனுப்பப்பட்டுள்ள ஸ்லீப்பர் செல்லா…? – கே.எஸ்.அழகிரி

அண்ணாமலை அவர்கள் தமிழக பா.ஜ.க. தலைவரா? இல்லை மத்திய பா.ஜ.க. அரசால் அனுப்பப்பட்டுள்ள ஸ்லீப்பர் செல்-ஆ என்கிற சந்தேகம் வருகிறது என கே.எஸ்.அழகிரி ட்வீட்.  தமிழக காவல்துறை அறிவாலயத்தை காக்கும் துறையாக செயல்படுவதாக, தமிழக காவல்துறையிடம் பல கேள்விகளை எழுப்பி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், அண்ணாமலையின் அறிக்கை குறித்து கே.எஸ்.அழகிரி விமர்சித்து ட்விட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘தமிழக காவல்துறையை கேள்வி எழுப்பும் வகையில் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையை … Read more