சூர்யகுமாரின் வீக்னஸை கண்டுபிடிப்பது ரொம்ப கஷ்டம்- முன்னாள் நியூசிலாந்து வீரர்

சூர்யகுமாரின் வீக்னஸ் என்னவென்று கண்டுபிடிப்பது ரொம்பவே கடினம் என்று ஸ்டீபன் பிளெமிங் கூறியுள்ளார்.

டி-20 உலகக்கோப்பை போட்டியின் சூப்பர்-12 போட்டியில் நேற்று நடைபெற்ற இந்தியா-தென் ஆப்பிரிக்கா ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்திய அணியில் சூரியகுமார் யாதவ் மட்டும் நிலைத்து நின்று விளையாடி 68 ரன்கள் குவித்திருந்தார்.

இந்த நிலையில் நேற்றைய போட்டிக்கு பிறகு முன்னாள் நியூசிலாந்து கேப்டன் ஸ்டீபன் பிளெமிங், இந்திய வீரர் சூரியகுமார் பற்றி தனது கருத்தை தெரிவித்துள்ளார். வேகம் மற்றும் பௌன்சுக்கு சாதகமான பெர்த் மைதானத்தில் ரோஹித், ராகுல், கோலி ஆகியோர் ரன்கள் அடிக்க திணறிய போது இந்தியாவின் 133 ரன்களில் சூரியகுமார் மட்டும் தனியாக 68 ரன்கள் அடித்தார்.

அவரது ஆக்ரோஷமான ஆட்டத்திறன் மற்றும் நேர்மறையான எண்ணம் இதன்மூலம் சூரியகுமார் தனது பேட்டிங்கில் வித்யாசமான ஷாட்களை அடித்து எதிரணியை கலங்கடித்து வருகிறார், இதனால் அவரது வீக்னஸ் எதுவென்பதை கண்டுபிடிப்பது மிகக்கடினம் என்று பிளெமிங் புகழ்ந்துள்ளார்.

மேலும் மற்றொரு தென் ஆப்பிரிக்க வீரரான டு பிளெஸ்ஸியும், சூர்யகுமாரைப் புகழ்ந்து தள்ளியுள்ளார். டி-20 களில் சூரியகுமார் அற்புதமான விளையாட்டை வெளிப்படுத்தி வருகிறார். அவரது ஆட்டத்திறன் மற்றும் டெக்னிக் மூலம் பந்துகளை மைதானத்தின் அனைத்து திசைகளிலும் அடித்து வருகிறார்.

அவருக்கு எப்போது பெரிய ஷாட்களை அடிக்க வேண்டும் என தெரிகிறது என்றும் இளைஞர்கள் சூர்யகுமாரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் டு பிளெஸ்ஸி மேலும் கூறியுள்ளார்.

author avatar
Muthu Kumar

Leave a Comment