தஞ்சாவூரில் தொடங்கிய ஜல்லிக்கட்டு..! 650 காளைகள் , 450 காளையர்கள் பங்கேற்பு…!

தஞ்சை மாவட்டத்தில் உள்ள நாஞ்சிக்கோட்டையில் 15 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வீரர்களுக்கும், காளைகளுக்கு எந்தவித காயமும் ஏற்படாமல் இருக்க வாடிவாசலில் இருந்து 100 மீட்டர் தூரம் வரை 1 அடிக்கு தென்னை நார்கள் போடப்பட்டு உள்ளது. அதேபோல் காளைகள், பார்வையாளர் இருக்கும் பகுதிக்கு சென்றுவிடாமல் இருக்க இரும்பு கம்பிகள், கட்டைகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது . முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.இந்த ஜல்லிக்கட்டில் 650 காளைகள் … Read more

நேர்மையை நோக்கி யார் பயணிக்கிறார்களோ அவர்கள் நிச்சயம் இணைவார்கள் – கமல்ஹாசன் பேச்சு

திமுக, அதிமுக அல்லாத கட்சிகளோடு கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக நம்புகிறேன் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார். பின்னர் அமையும் கூட்டணி தங்கள் தலைமையில் அமைய வேண்டும் என விரும்புவதாகவும், ஆனால் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் எட்டப்படும் உடன்பாடுகளை பொறுத்து கூட்டணி அமையும் எனவும் குறிப்பிட்டார். இதையடுத்து ரஜினிகாந்துடன் கூட்டணி வைப்பீர்களா என்ற கேள்விக்கு, தமிழகத்தின் மேம்பாடு என்ற அடிப்படையில் தாங்கள் இருவரும் ஒன்றான கருத்துகளை தெரிவித்தோம் என்றும் நேர்மையை நோக்கி யார் … Read more

குடிநீர் நிறுவனங்களின் வேலை நிறுத்தம் தொடரும் – கூட்டத்தில் முடிவு..!

சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் சுமார் 420 ஆலைகள் சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுக்கின்றனர். இதனால் அனுமதியின்றி செயல்படும் குடிநீர் உற்பத்தி ஆலைகளை மூட தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஓன்று தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அனுமதியின்றி செயல்படும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக கடலூரில் அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மாவட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அரசின் … Read more

எம்.எல்.ஏ காத்தவராயன் உடலுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

மறைந்த எம்.எல்.ஏ காத்தவராயன் உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.  வேலூர் குடியாத்தம் தொகுதி திமுக எம்எல்ஏ காத்தவராயன் உடல்நலக்குறைவால் காலமானார். இவர் கடந்த ஆண்டு மே மாதம் தமிழகத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் குடியாத்தம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவாக தேர்வானார். இந்நிலையில் இன்று பேர்ணாம்பட்டில் மறைந்த குடியாத்தம் எம்.எல்.ஏ காத்தவராயன் உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார். 

திமுக கார்ப்பரேட் கட்சி அதிமுக மக்களுக்கான கட்சி – உணவுத்துறை அமைச்சர் பேச்சு

திருவாரூரில் நடைபெற்ற மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக் கூட்டத்தில் பேசிய உணவுத்துறை அமைச்சர் காமராஜ், அப்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்ன அறிவிப்பை வெளியிட போகிறார் என்ற பதட்டத்திலே மு.க.ஸ்டாலின் இருப்பதாக விமர்சித்தார். பின்னர் திமுக கட்சி பிரசாந்த் கிஷோர் தலைமையில் இயங்குகிற கார்ப்பரேட் கட்சி என்றும், அதிமுக மக்களுக்கான கட்சி என்றும் தெரிவித்தார்.

ரத்தாகிறதா 100 யூனிட் மின்சாரம் வழங்கும் திட்டம் ? அமைச்சர் தங்கமணி விளக்கம்

போதிய அளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருவதால் தமிழகத்தில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று  அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார் .மேலும் தமிழகத்தில் 100 யூனிட் மின்சாரம் எக்காரணம் கொண்டும் ரத்து செய்யப்படமாட்டாது என்று உறுதியாக தெரிவித்துள்ளார். 

சொதப்பல் ஆட்டம்..! 242 ரன்னில் ஆல் அவுட் ..! இந்திய அணிக்கு என்ன ஆச்சு..?

இந்திய அணி , நியூஸிலாந்து அணிக்கு எதிரான 2 -வது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள ஹாக்லி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீசத் தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து இறங்கிய இந்திய அணி முதல் போட்டியை போல இரண்டாவது போட்டியிலும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் இந்திய அணி 63 ஒவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 242 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.இந்திய அணியில் பிருத்வி ஷா,  புஜாரா, ஹனுமா … Read more

எதிர்கட்சிகளை விமர்சனம் செய்த அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்.!

மதுரையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் கூட்டத்தில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார், ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக ஆட்சி முடிந்துவிடும் என சிலர் எண்ணிய நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக சிறப்பான ஆட்சி நடைபெற்றுவருவதாக தெரிவித்தார். இதை பொறுக்க முடியாமல் திமுக உட்பட எதிர்கட்சிகள் அமைதியின்மையை ஏற்படுத்துவதாக விமர்ச்சித்துள்ளார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசியக்கோப்பையில் இந்தியா, பாகிஸ்தானும் கண்டிப்பாக விளையாடும் கங்குலி..!

கொல்கத்தாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய பிசிசிஐ தலைவர் கங்குலி. துபாயில் நடைபெறும் ஆசியக்கோப்பை போட்டியில் இந்தியாவும் ,பாகிஸ்தானும் கண்டிப்பாக விளையாடும் என கூறினர். மேலும் பாகிஸ்தானுடன் , இந்தியா பொதுவான நாட்டில் விளையாடுவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என கூறினார்.  

ரஜினிகாந்துடன் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அபூபக்கர் திடீர் சந்திப்பு

சென்னை போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்துடன் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அபூபக்கர் நேரில்  சந்தித்துள்ளார் .குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு இருப்பதாக ரஜினியிடம் அபூபக்கர் விளக்கம் அளித்து வருகிறார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.