தமிழ் ராக்கர்ஸில் வெளியான பொன்மகள் வந்தாள்.!

ஓடிடி தளங்களில் வெளியிடப்படும் திரைப்படங்களை அவ்வாறு கண்டுபிடிக்கும் வசதியும் இல்லை என்பதை சினிமாத்துறைக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2 டி என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அறிமுக இயக்குனரான ஜே. ஜே. பிரட்ரிக் இயக்கும் திரைப்படம் பொன்மகள் வந்தாள். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஜோதிகா வழக்கறிஞராக நடித்துள்ளார். மேலும் பாக்கியராஜ், பிரதாப் போத்தன், பார்த்திபன், தியாகராஜன், பாண்டியராஜன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த … Read more

பிகில் படத்தையும் விட்டு வைக்கலையா? தொடரும் தமிழ் ராக்கர்ஸின் அட்டூழியம்!

இயக்குனர் அட்லீ இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். இப்படம் பெண்கள் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில், தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். இப்படம் நேற்று வெளியாகி உள்ள நிலையில், மக்கள் மத்தியில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. இந்நிலையில், பிகில் திரைப்படம் வெளியிடப்பட்டு சில மணி நேரத்திலேயே, இப்படம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் ராக்கர்ஸின் இந்த செயல் படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சவாலை சாதித்து சர்கார் படத்தை இணையத்தில் வெளியிட்டது தமிழ்ராக்கர்ஸ்..!! அதிர்ச்சியில் படக்குழு…!!!

நடிகர் விஜய்,நடிகை கீர்த்தி சுரேஷ் AR முருகதாய் இயக்கத்தில் சன்பீக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி இன்று வெளியானது சர்கார்.இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று விட்டதாக சினிமா வட்டார தகவல்கள் பறந்து வருகின்றன.இந்நிலையில் நாங்கள் படத்தை இணையத்தில் வெளியிடுவோம் என்று அறை கூவல் விடுத்த தமிழ்ராக்கேஸ் தற்போது சர்கார் படத்தை இணையத்தில் வெளியிட்டிருப்பது படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. படத்தை இணையத்தில் வெளியிட நிரந்தரத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.ஆனால் சர்கார் படத்தை ஹெச்டி பிரிண்டாக … Read more

இந்திய சினிமாவையே அச்சுறுத்தும் அட்மின்கள் !

தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவையே அச்சுறுத்தும் ஒரு விஷம் தான் இந்த பைரசி. இதற்கு பல தளங்கள் இருந்தாலும் தமிழ் ராக்கர்ஸ் தான் மிக முக்கியமாக உள்ளது. இதை தடுக்க பலமுறை முயற்சி செய்தும் தோல்வி தான், இதன் அட்மின்களை மட்டும் தான் கைது செய்ய முடிகின்றதே தவிர, இதை நடத்துபவரை கைது செய்ய முடியவில்லை. இந்நிலையில் இதுக்குறித்து சில ஹாக்கர்களே கூறும் போது ‘தமிழ் ராக்கர்ஸை எங்களால் முழுவதுமாக கட்டுப்படுத்த முடியாது. ஏனெனில் அவர்கள் தங்கள் … Read more

பிரபல இணையதள அட்மின்கள் கைது !

தற்போது நமக்கு கிடைத்த தகவலின் படி தமிழ் ராக்கர்ஸ் அட்மின் 4 பேரை கைது செய்துள்ளார்களாம். இவர்கள் 4 பேரும் விழுப்புரத்தை சார்ந்தவர்கள், கேரளா போலிஸாரின் அதிரடியில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என கூறப்படுகின்றது. தமிழ் சினிமாவையே மிகவும் அச்சுறுத்தியது பைரசி தான். அதிலும் தமிழ் ராக்கர்ஸ் என்ற தளம் பல தயாரிப்பாளர் வயிற்றில் நெருப்பை தான் கட்டியது. இந்நிலையில் தமிழ் ராக்கர்ஸை எப்படியும் கண்டுப்பிடித்தே தீருவேன் என்று விஷால் சபதம் எடுத்தார்.   ஏனெனில் தற்போதெல்லாம் … Read more

"என் படத்தை ஆன்லைனில் போட, தமிழ் ராக்கர்ஸுக்கு நான் அனுமதி தருகிறேன்!" -மிஷ்கின் அதிரடி

இயக்குநர் ராம், பூர்ணா ஆகியோருடன் இணைந்து மிஷ்கின் நடித்து, எழுதி, தயாரிக்கும் படம் ‘சவரக்கத்தி’. இந்தப் படத்தை மிஷ்கினின் உதவி இயக்குநரும் சகோதரருமான ஜி.ஆர்.ஆதித்யா இயக்கியிருக்கிறார். ‘பிசாசு’, ‘துப்பறிவாளன்’ படங்களுக்கு இசையமைத்த அரோல் கொரேலி இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடந்தது. அப்பொழுது பேசிய மிஷ்கின், ” இந்த படத்தை திரையுலகில் தான் பார்க்கவேண்டும் என்று நான் கூறமாட்டேன்.அவரவர் தங்கள் வேலையை நியாயமாகப் பார்ப்போம். இந்த படத்தை தமிழ் ராக்கர்ஸில் போட நான் அனுமதி தருகிறேன்” என்று கூறியுள்ளார். https://www.youtube.com/watch?v=yoxjUAI1oX4

சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’ படம் இணையத்தில் வெளியிடப்படும்-மிரட்டும் தமிழ் ராக்கர்ஸ்

  நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை நயன்தாரா நடிப்பில் இன்று வெளியாகியுள்ள படம் ‘வேலைக்காரன்’. இப்படத்தினை “இணையத்தில் வெளியிட வேண்டாம், வேலைக்காரன் நல்லவன். தாமதமாக வெளியிட வேண்டும்” என்று இயக்குனர் மோகன் ராஜா அண்மையில் தமிழ் ராக்கர்ஸிற்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். எனினும், இப்படத்தை இன்று இணையத்தில் வெளியிடுவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் அறிவித்துள்ளனர். இதுமட்டுமின்றி இன்று இரவு 7 மணிக்கு நடிகர் சந்தானத்தின் சக்க போடு போடு ராஜா படத்தையும் இணையத்தில் வெளியிடப் போவதாக அறிவித்துள்ளனர். இந்த செய்தியால் … Read more