சவாலை சாதித்து சர்கார் படத்தை இணையத்தில் வெளியிட்டது தமிழ்ராக்கர்ஸ்..!! அதிர்ச்சியில் படக்குழு…!!!

நடிகர் விஜய்,நடிகை கீர்த்தி சுரேஷ் AR முருகதாய் இயக்கத்தில் சன்பீக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி இன்று வெளியானது சர்கார்.இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று விட்டதாக சினிமா வட்டார தகவல்கள் பறந்து வருகின்றன.இந்நிலையில் நாங்கள் படத்தை இணையத்தில் வெளியிடுவோம் என்று அறை கூவல் விடுத்த தமிழ்ராக்கேஸ் தற்போது சர்கார் படத்தை இணையத்தில் வெளியிட்டிருப்பது படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Related image

படத்தை இணையத்தில் வெளியிட நிரந்தரத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.ஆனால் சர்கார் படத்தை ஹெச்டி பிரிண்டாக இணையத்தில் வெளியிடுவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் என்ற பெயரில் இயங்கும் ட்விட்டர் பக்கம் ஒன்றில் பதிவிடப்பட்டிருந்தது.

Image result for sarkar tamilrockers

இந்த தமிழ் ராக்கர்ஸின் சவாலை முறியடிப்போம் என்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டது.

திரையரங்கில் வெளியாகும் திரைப்படங்களை யாராவது வீடியோ கேமராவிலோ அல்லது மொபைல்போனிலோ படம் எடுக்கிறார்களா என்று ஒவ்வொரு திரையரங்கிலும் கண்காணிக்க வேண்டும் என்று அந்தந்த திரையரங்க உரிமையாளர்கள்  ஆட்களை ஏற்பாடு செய்ய வேண்டுமென்று முடிவெடுத்து அதனை  நடைமுறைப்படுத்தி வரும் இந்நிலையில்  இதற்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம் என்று சொல்வது போல தமிழ் ராக்கர்ஸின் செயல் நிகழ்ந்துள்ளது.

Image result for SARKAR

சர்கார் படம் இன்று அதிகாலை 4 மணியளிவில் திரையரங்குகளில் வெளியானது.படம் வெளியான சில மணி நேரங்களிலேயே தமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படத்தை வெளியிட்டு  படக்குழுவினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.ஆனால் படத்தை இணையத்தில் வெளியிட நிரந்தரத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment