தமிழ் ராக்கர்ஸில் வெளியான பொன்மகள் வந்தாள்.!

ஓடிடி தளங்களில் வெளியிடப்படும் திரைப்படங்களை அவ்வாறு கண்டுபிடிக்கும் வசதியும் இல்லை என்பதை சினிமாத்துறைக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2 டி என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அறிமுக இயக்குனரான ஜே. ஜே. பிரட்ரிக் இயக்கும் திரைப்படம் பொன்மகள் வந்தாள். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஜோதிகா வழக்கறிஞராக நடித்துள்ளார். மேலும் பாக்கியராஜ், பிரதாப் போத்தன், பார்த்திபன், தியாகராஜன், பாண்டியராஜன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.பல்வேறு பிரச்சனைகளை கடந்து இன்று காலை படம் ஓடிடியில் வெளியாகியது.

இந்த நிலையில் பொன்மகள் வந்தாள் படம் ஓடிடியில் வெளியாகிய சில மணி நேரங்களில் தமிழ் ராக்கர்ஸ் என்ற இணையதளத்தில் வெளியானது அமேசான் பிரேமில் வெளியான அதே தரத்தில் இந்த பொன்மகள் வந்தால் திரைப்படம்  தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளத்தில் வெளியாகி பலரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக திரையரங்குகளில் வெளியாகும் படங்களை மொபைலில் படம் எடுத்ததை தான் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிடுவார்கள்.

இந்த நிலையில் மொபைலில் பதிவு செய்தாலும், அதனை எந்த தியேட்டரில் பதிவு செய்தது என்பதை  கண்டுபிடிக்கும் தொழில்நுட்ப வசதி இருந்து வரும் இந்த சூழ்நிலையில் OTT  தளங்களில் வெளியிடப்படும் திரைப்படங்களை அவ்வாறு கண்டுபிடிக்கும் வசதியும் இல்லை என்பதை சினிமாத்துறைக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.