சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’ படம் இணையத்தில் வெளியிடப்படும்-மிரட்டும் தமிழ் ராக்கர்ஸ்

 

நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை நயன்தாரா நடிப்பில் இன்று வெளியாகியுள்ள படம் ‘வேலைக்காரன்’. இப்படத்தினை “இணையத்தில் வெளியிட வேண்டாம், வேலைக்காரன் நல்லவன். தாமதமாக வெளியிட வேண்டும்” என்று இயக்குனர் மோகன் ராஜா அண்மையில் தமிழ் ராக்கர்ஸிற்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். எனினும், இப்படத்தை இன்று இணையத்தில் வெளியிடுவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் அறிவித்துள்ளனர். இதுமட்டுமின்றி இன்று இரவு 7 மணிக்கு நடிகர் சந்தானத்தின் சக்க போடு போடு ராஜா படத்தையும் இணையத்தில் வெளியிடப் போவதாக அறிவித்துள்ளனர். இந்த செய்தியால் வேலைக்காரன் படக்குழு வருத்தத்தில் உள்ளது. தொடர்ந்து தமிழ் ராக்கர்ஸ் பிரபலங்களின் படம் வெளியாகும் போதெல்லாம் மிரட்டல் விடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

source:dinasuvadu.com

author avatar
Dinasuvadu desk

Leave a Comment