2 தவணை கோவிஷீல்டு தடுப்பூசிகளை ஒரே நேரத்தில் செலுத்தப்பட்ட இளைஞர்..!

மங்களூரு இளைஞருக்கு ஒரே நேரத்தில் இரண்டு தவணை கோவிஷீல்டு தடுப்பூசிகள் தவறுதலாக செலுத்தப்பட்டுள்ளது. கடந்த புதன் கிழமை அன்று கர்நாடக மாநிலத்தை சேர்ந்த தட்சிணகன்னடா மாவட்டத்தில் உள்ள தக்கலட்கா கிராமத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டுள்ளது. மிகப்பெரிய அளவில் நடந்த இந்த கொரோனா தடுப்பூசி முகாமில் ஏராளமான மக்கள் பங்கு பெற்றுள்ளனர். இங்கு இருந்த கூட்ட நெரிசலில், கே.பி. அருண் என்ற 19 வயது இளைஞருக்கு முதல் கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டு செலுத்தியுள்ளனர். பின்னர் அதே அறையிலேயே … Read more

கர்நாடக மாநிலத்தில் 1,217 பேருக்கு கொரோனா..!

கர்நாடக மாநிலத்தில் இன்று கொரோனா வைரசால் 1,217 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,217 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29,49,445 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் இன்று மட்டும் 25 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37,318 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 1,198 பேர் குணமடைந்த நிலையில், இதுவரையில் 28,93,715 பேர் சிகிச்சை … Read more

#Breaking:தமிழகத்திற்கு உடனடியாக 30.6 டிஎம்சி நீர் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு….!

தமிழகத்திற்கு உடனடியாக 30.6 டிஎம்சி நீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேகதாது அணை பிரச்சனை தொடர்பாக காவிரி நதிநீர்  மேலாண்மை ஆணையத்தின் 13 வது ஆலோசனைக்கூட்டம்,நீண்ட நாட்களுக்கு பிறகு நேரடியாக இன்று டெல்லியில்  நடைபெற்று வருகிறது. காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம், மத்திய நீர்வள ஆணையர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் டெல்லி சேவா பவனில் நடைபெற்று வருகிறது.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகம் சார்பில் பொதுப் பணித்துறை செயலாளரும், கூடுதல் … Read more

கர்நாடக மாணவி பாலியல் வன்கொடுமை – தமிழகத்தை சேர்ந்த 5 பேர் கைது.!

கர்நாடகாவின் மைசூரில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தமிழகத்தை சேர்ந்த 5 பேர் கைது. கர்நாடக மாநிலம், மைசூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயது மாணவி ஒருவர் படித்து வருகிறார். கடந்த 24ம் தேதி, மைசூரு லலித்ரிபுரா பகுதியில் உள்ள திப்பையனகெரே வனப் பகுதியிலிருந்து தன்னுடன் படிக்கும் மாணவருடன் சாமுண்டி மலைக்கு சென்றுள்ளார். அப்போது, அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல், அந்த மாணவரைத் தாக்கிவிட்டு, … Read more

செப்டம்பர் 1 முதல் கர்நாடகாவில் தினமும் 5 லட்சம் தடுப்பூசி செலுத்த திட்டம் – கர்நாடக முதல்வர்!

வருகின்ற செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் கர்நாடகாவில் தினமும் 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் செலுத்த திட்டமிட்டுள்ளதாக முதல்வர் பசவராஜ் பொம்மை அவர்கள் தெரிவித்துள்ளார்.  நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களிலும் கொரோனாவை ஒழிப்பதற்கான தீவிரமான பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக பல மாநிலங்களில் தடுப்பூசி போடும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்திலும் கொரோனாவை ஒழிக்க அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை அவர்கள் பல்வேறு நடவடிக்கைகளை … Read more

மேகதாது விவகாரம்: மத்திய அமைச்சரை சந்தித்தார் கர்நாடக முதல்வர்!

மேகதாது அணை தொடர்பாக மத்திய நீர்வளத் துறை அமைச்சருடன் கர்நாடக முதலான்ச்சர் பசவராஜ் பொம்மை சந்திப்பு. கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவாத்தை டெல்லியில் சந்தித்து மேகதாது உள்ளிட்ட கர்நாடகத்தின் நீர் வளம் திட்டங்கள் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் மேற்கொண்டும், கர்நாடக முதல்வர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

NEP:இந்தியாவிலேயே முதல் மாநிலமாக கர்நாடகாவில் தேசிய கல்விக்கொள்கை அமல் – தொடங்கி வைத்த அமைச்சர் தர்மேந்திர பிரதான் …!

இந்தியாவிலேயே முதல் மாநிலமாக கர்நாடகாவில் நடப்பு ஆண்டில் தேசிய கல்வி கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. பெங்களூருவில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.இதில்,மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் காணொலி வாயிலாகவும்,கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, கர்நாடக உயர் கல்வித் துறை அமைச்சர் அஷ்வத் நாராயண், தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்துவதற்கான நிபுணர் குழுவை சேர்ந்த நிபுணர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். அதன்பின்னர்,இந்தியாவிலேயே முதல் மாநிலமாக கர்நாடகாவில் நடப்பு கல்வி ஆண்டில் தேசிய கல்விக் … Read more

கர்நாடகாவில் இன்று 9 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் தொடக்கம்…!

கர்நாடகாவில் இன்று 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டுள்ளது.  கொரோனா பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களிலும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையிலேயே உள்ளது. சில மாநிலங்களில் அவ்வப்போது திறக்கப்பட்டாலும், மீண்டும் கொரோனா வைரஸ் அதிகம் பரவத் தொடங்கியதும் பள்ளிகள் மூடப்பட்டு வந்தது. இந்நிலையில் கர்நாடகாவில் தற்போது 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. … Read more

கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான செலவை கர்நாடக அரசே ஏற்கும் – கர்நாடக முதல்வர்!

கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பிந்தைய செலவை கர்நாடக அரசே ஏற்கும் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை அவர்கள் தெரிவித்துள்ளார்.  கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக வாட்டி வதைத்து வரும் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. இந்நிலையில், கொரோனா இரண்டாம் அலையின் போது இந்தியாவில் பலர் கருப்பு பூஞ்சைத் தொற்றால் பாதிக்கப்பட்டனர். தற்பொழுதும் பல்வேறு மாநிலங்களிலும் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்ட பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று … Read more

‘ஒரு நாள் சிறை கைதி திட்டம்’ – கர்நாடக சிறைத்துறை அதிரடி…!

குற்றம் செய்யாதவர்கள் சிறை அனுபவத்தை பெறுவதற்காக, கர்நாடகா சிறைத்துறை ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது.  பொதுவாக குற்றம் செய்தவர்கள் தான் சிறையில் அடைக்கப்பட்டு, தண்டனை பெறுவர். ஆனால், குற்றம் செய்யாதவர்கள் சிறை அனுபவத்தை பெறுவதற்காக, கர்நாடகா சிறைத்துறை ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது. அதன்படி, சிறைவாழ்வு குறித்து அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்காக கர்நாடகா சிறைத்துறை, ‘ஒரு நாள் சிறை கைதி திட்டம்’ என்ற திட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளது. இத்திட்டப்படி, சிறை அனுபவத்தை … Read more