7500 பேர் பங்கேற்கும் பிரமாண்ட இளைஞர் திருவிழா.! கர்நாடகாவில் பிரதமர் மோடி பங்கேற்பு.!

வரும் ஜனவரி 12ஆம் தேதி இளைஞர் தினத்தை முன்னிட்டு கர்நாடகாவில் பிரமாண்டமான இளைஞர் திருவிழா நடைபெற உள்ளது. அதில் பிரதமர் மோடி கலந்துகொள்ள உள்ளார்.  வரும் ஜனவரி 12ஆம் தேதி விவேகானந்தர் பிறந்தநாளான ஆண்டு ஆண்டு தோறும் இளைஞர்கள் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த இளைஞர் தினம் கர்நாடக மாநிலம் ஹுப்பள்ளி மற்றும் தார்வாட் எனும் இரட்டை நகரங்களில் தேசிய இளைஞர் திருவிழாவாக கொண்டாடப்படஉள்ளது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி கலந்து … Read more

தமிழகத்திற்கு எதிராக கர்நாடகா தீர்மானம் நிறைவேற்ற முடிவு..?

மேகதாது அணைக்கு எதிராக தமிழகம் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில் அதற்க்கு கண்டனம் தெரிவித்து கர்நாடகா பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற முடிவு. மேகதாது அணை விவகாரம் தீவிரமடைந்து வரும் நிலையில் இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தனி தீர்மானத்தை நேற்று முன்மொழிந்தார். இதற்கு அனைவரும் ஒப்புதல் அளிக்கவே சட்டப்பேரவையில் இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதற்கிடையில், கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை  தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழக சட்டசபையில் மேகதாது அணை திட்டத்திற்கு எதிராக … Read more

இந்தியா வந்தடைந்த உக்ரைனில் கொல்லப்பட்ட நவீன் உடல்: விமான நிலையத்தில் அஞ்சலி செலுத்திய முதல்வர் ..!

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் நடந்து 25 நாட்கள் கடந்துவிட்டன. இதுவரை இரு நாடுகளுக்கும் இடையே எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. இதற்கிடையில், ரஷ்ய-உக்ரைன் போரில் கொல்லப்பட்ட கர்நாடக மாணவர் நவீன் சேகரப்பா ஞானகோதரின் உடல் இன்று காலை இந்தியா வந்தது. நவீன் உயிரிழப்பு:  ஹவேரி மாவட்டத்தைச் சேர்ந்த நவீன் என்பவர் மார்ச் 1ஆம் தேதி உக்ரைனின் கார்கிவ் நகரில் உயிரிழந்தார். 21 வயதான நவீன் உக்ரைனில் உள்ள கார்கிவ் தேசிய மருத்துவ பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ் படித்து வந்தார். உணவுக்காக … Read more

ஹிஜாப் விவகாரம்:நீதிபதிகளுக்கு “ஒய்” பிரிவு பாதுகாப்பு – முதல்வர் அறிவிப்பு!

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரக் கூடாது என ஒரு கல்லூரியில் அனுமதி மறுக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து,கர்நாடகாவில் பல மாவட்டங்களில் முஸ்லீம் மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து வரக் கூடாது என மேலும் சில கல்வி நிறுவனங்கள் தெரிவித்தன. முஸ்லிம் மாணவிகள் போராட்டம்: இதனையடுத்து,ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்ததை எதிர்த்து முஸ்லிம் மாணவிகள் போராட்டம் நடத்தினர்.முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்துவந்தால் நாங்கள் காவித்துண்டு அணிந்து வருவோம் என … Read more

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் – முதல்வர் அறிவிப்பு ..!

கர்நாடகாவில் டிஜே போன்ற எந்த சிறப்பு நிகழ்ச்சியும் இன்றி 50% இருக்கை வசதி கொண்டு கிளப்புகள் மற்றும் உணவகங்களில் புத்தாண்டு கொண்டாட அனுமதி நாடு முழுவதும் அதிகரித்து வரும் ஓமைக்ரான் வைரஸை கருத்தில் கொண்டு வரும் புத்தாண்டு பொதுக்கொண்டாட்டத்திற்கு கர்நாடக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, 50% இருக்கைகள் கொண்ட கிளப்புகள் மற்றும் உணவகங்களில் எந்த சிறப்பு நிகழ்ச்சியும் இல்லாமல் கொண்டாட மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. கொண்டாட்ட இடங்களில் அனைவருக்கும் முழு தடுப்பூசி போடுவது … Read more

10 ஆண்டுகள் சிறை…கட்டாய மதமாற்ற தடை சட்ட மசோதா டிச.20 ஆம் தேதி தாக்கல்!

‘கட்டாய மதமாற்றத்துக்கு’ 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் கட்டாய மதமாற்ற தடை சட்ட மசோதா கர்நாடகாவில் வருகின்ற டிச.20 ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடகாவில் பட்டியலினத்தவர்கள்(எஸ்சி, எஸ்டி) மற்றும் ஏழை எளிய மக்கள் அதிக அளவில் மதமாற்றம் செய்யப்படுவதாக தொடர்ந்து புகார் எழுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில்,கர்நாடகாவில் மதமாற்ற தடை சட்ட மசோதா அமைச்சரவை ஒப்புதல் பெற்று வருகின்ற டிச.20 ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி,கர்நாடகாவில் மத மாற்றத்தைத் … Read more

ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான செய்தியறிந்து வேதனையடைந்தேன்-பசவராஜ் பொம்மை..!

பிபின் ராவத் பயணித்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன் எனகர்நாடக முதலமைச்சர் தெரிவித்தார்.  சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து ராணுவ ஹெலிஹாப்டர் வெலிங்கடனுக்கு சென்ற போது மோசமான வானிலை(மேகமூட்டம்) காரணமாக காட்டேரி என்ற பகுதி அருகில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டரில் முப்படைகளின் தளபதியாக பிபின் ராவத் , அவரது மனைவி உட்பட 14 பேர் பயணித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும், அதில் பயணம் செய்தவர்களின் முழுமையான விபரம் தெரிவிக்கப்படவில்லை. இதுவரை இந்த விபத்தில் … Read more

பெங்களூருவில் சாலைப் பணிகளுக்காக ரூ.20,060 கோடி செலவு..!

கடந்த 5 ஆண்டுகளில் பெங்களூருவில் சாலைப் பணிகளுக்காக 20,060 கோடி ரூபாயை மாநில அரசு செலவிட்டுள்ளது. பெங்களூருவில் பெய்து வரும் கனமழையைத் தொடர்ந்து வாகன ஓட்டிகள் நீரில் மூழ்கிய சாங்கி சாலை வழியாகச் செல்கின்றனர். இந்நிலையில், பெங்களூரு முன்னாள் மேயர் ரமேஷின் கேள்விக்கு முதலமைச்சர் பசவராஜ் பதிலத்துள்ளார். அதில், நகரத்தின் ஒவ்வொரு சாலைக்கும் எவ்வளவு செலவு செய்யப்பட்டது. எத்தனை முறை குழிகள் நிரப்பப்பட்டது. இந்த திட்டத்தை எடுத்த ஒப்பந்தக்காரர்கள், சாலைகளை பராமரிப்பதை கண்காணிக்க பொறுப்பான அதிகாரிகள் போன்றவற்றை தணிக்கை … Read more

அரசு பள்ளிகளுக்கு சுமார் 5,000 ஆசிரியர்களை நியமிப்பதாக அறிவிப்பு..!

நடப்பு கல்வியாண்டில் அரசு பள்ளிகளுக்கு சுமார் ஐயாயிரம் ஆசிரியர்களை நியமிப்பதாக முதல்வர் பசவராஜா பொம்மை ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார். நேற்று தொடக்க மற்றும் இடைநிலைக் கல்வித் துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆசிரியர் தின நிகழ்ச்சியில் பேசிய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. இதனால், நடப்பு கல்வியாண்டில் அரசு பள்ளிகளுக்கு சுமார் ஐயாயிரம் ஆசிரியர்களை நியமிப்பதாக தெரிவித்தார். கல்வி அமைச்சரின் வேண்டுகோளின் பேரில், நடப்பு கல்வியாண்டில் சுமார் ஐயாயிரம் ஆசிரியர்களை நியமிக்க அரசு … Read more

நதிகள் இணைப்பு வழக்கில் இடையீட்டு மனு – கர்நாடகா முடிவு..!

தென்னிந்திய நதிகளை இணைப்பு வழக்கில் தங்களையும் மனுதாரராக இணைக்க இடையீட்டு மனு தாக்கல் செய்ய கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. பெங்களூரு குடிநீருக்காகவும், மின்சாரம் உற்பத்திக்காகவும் மேகதாதுவில் அணை  கட்டுவதாக கர்நாடகா கூறுகிறது. ஆனால், அணை கட்ட கூடாது என தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கிறது. அதை மீறி அணை கட்டியே தீருவோம் என கர்நாடகா அரசு உள்ளது. இதற்கிடையில், இரண்டு நாள் பயணமாக நேற்று டில்லி சென்ற முதல்வர் பசவராஜ் பொம்மை ஜல்சக்தி துறை அமைச்சர் … Read more