#Breaking:மேகதாது விவகாரம்;அனைத்துக் கட்சி குழு இன்று டெல்லிக்கு திடீர் பயணம்!

காவிரியில் மேகதாது அணையை கட்டுவதற்கு கர்நாடகா அரசு தொடர்ந்து முயன்று வரும் நிலையில்,உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் மேகதாது அணை குறித்து காவிரி மேலாண்மைக் கூட்டத்தில் விவாதிக்கக் கூடாது என்று பிரதமர் மோடிக்கு அண்மையில் முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். இதற்கிடையில்,தஞ்சை கல்லணையில் ஆய்வு செய்தபின்னர் காவிரி மேலாண்மை ஆணையத்தின் குழு தலைவர் ஹல்தர் செய்தியாளர்களிடம் கூறுகையில்:”மேகதாது உள்ளிட்ட அணை விவகாரங்கள் குறித்து விவாதிக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு முழு அதிகாரம் இருக்கிறது.வரும் 23-ஆம் … Read more

#Breaking:மேகதாது அணையை கட்ட விடமாட்டோம் – முதல்வர் ஸ்டாலின் உறுதி!

காவிரியில் மேகதாது அணையை கட்டுவதற்கு கர்நாடகா அரசு தொடர்ந்து முயன்று வரும் நிலையில்,உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் மேகதாது அணை குறித்து காவிரி மேலாண்மைக் கூட்டத்தில் விவாதிக்கக் கூடாது என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். இந்த வேளையில்,தஞ்சை கல்லணையில் நேற்று ஆய்வு செய்தபின்னர் காவிரி மேலாண்மை ஆணையத்தின் குழு தலைவர் ஹல்தர் செய்தியாளர்களிடம் கூறுகையில்:”மேகதாது உள்ளிட்ட அணை விவகாரங்கள் குறித்து விவாதிக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு முழு அதிகாரம் இருக்கிறது.வரும் … Read more

மேகதாது குறித்து ஜூன் 23ம் தேதி விவாதிப்போம் – காவிரி ஆணையம்

மேகதாது குறித்து ஜூன் 23ம் தேதி காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் விவாதிப்போம் என அதன் தலைவர் ஹல்தர் அறிவிப்பு. தஞ்சை கல்லணையில் ஆய்வு செய்தபின் செய்தியாளர்களிடம் பேசிய காவிரி மேலாண்மை ஆணையத்தின் குழு தலைவர் ஹல்தர், மேகதாது உள்ளிட்ட அணை விவகாரங்கள் குறித்து விவாதிக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு முழு அதிகாரம் இருக்கிறது. வரும் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள ஆணையத்தின் கூட்டத்தில், அனைத்து விவகாரங்களுக்கு விவாதிக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும், காவிரி மேலாண்மை … Read more

மேகதாது அணை; உரிமைகளை காக்க உறுதியான நடவடிக்கை – அமைச்சர் துரைமுருகன்

மேகதாதுவில் புதிய அணை கட்டும் திட்ட அறிக்கை பற்றி விவாதிக்கக் கூடாது என ஆணையிட வேண்டி உச்சநீதிமன்றத்தில் இன்று தமிழக அரசு புதிய மனு. மேகதாது அணை விவகாரத்தில் விவாசாயிகள் மற்றும் மக்களின் நலன்களையும், உரிமைகளையும் காக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த ஆண்டு பிரதமரை சந்தித்தபோது காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை கைவிட கர்நாடக … Read more

#BREAKING: மேகதாது – தமிழகத்திற்கு எதிராக கர்நாடகாவில் தீர்மானம்!

தமிழக அரசின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம். மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக சட்டப்பேரவை தீர்மானத்திற்கு எதிராக கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளார். எது நடந்தாலும் மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என கர்நாடக உறுதியாக உள்ளது. அதேபோல மேகதாதுவில் அணை கட்டவிடாமல் எப்படியும் தடுப்போம் என தமிழக அரசும் உறுதியாக இருக்கிறது. இந்த … Read more

மேகதாது விவகாரம்: மத்திய அமைச்சரை சந்தித்தார் கர்நாடக முதல்வர்!

மேகதாது அணை தொடர்பாக மத்திய நீர்வளத் துறை அமைச்சருடன் கர்நாடக முதலான்ச்சர் பசவராஜ் பொம்மை சந்திப்பு. கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவாத்தை டெல்லியில் சந்தித்து மேகதாது உள்ளிட்ட கர்நாடகத்தின் நீர் வளம் திட்டங்கள் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் மேற்கொண்டும், கர்நாடக முதல்வர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

மேகதாது அணை கட்டப்படக்கூடாது என்பதே அதிமுகவின் நிலைப்பாடு – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

கர்நாடகாவில் மேகதாது அணை கட்டப்படக்கூடாது என்பதே அதிமுகவின் நிலைப்பாடு என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். கர்நாடக மேகதாது அணை தொடர்பாக இன்று அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த கூட்டத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, மதிமுக, விசிக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட 13 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த அனைத்து கட்சி கூட்ட ஆலோசனையில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பை பிரதிபலிக்கும் … Read more

#Breaking: மேகதாது அணை: 12ல் அனைத்துக்கட்சி கூட்டம் – முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு!!

மேகதாது அணை பிரச்சனை தொடர்பாக வரும் 12 ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என்றும் முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் தொடர்பாக, சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழக முதலமைச்சர், பிரதமர் மோடியை நேரில் சந்தித்து மேகதாது அணை பிரச்சினை குறித்து தமிழ்நாட்டின் நிலைபாட்டை விளக்கி, நமது மாநில … Read more

மேகதாது அணை: தமிழக அரசுக்கு, தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தல்!!

மேகதாதுவில் அணை கட்டாமல் தடுக்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்படும் என்றும் தமிழ் மக்களின் நலன் கருதி மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவுக்கு மத்திய அரசு அனுமதி தரக்கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல் இல்லாமல், மேகதாதுவில் அணை கட்டுவதற்கு முன்பாகவே, தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுத்து … Read more