கர்நாடக மாநிலத்தில் 1,217 பேருக்கு கொரோனா..!

கர்நாடக மாநிலத்தில் இன்று கொரோனா வைரசால் 1,217 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,217 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29,49,445 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் இன்று மட்டும் 25 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37,318 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 1,198 பேர் குணமடைந்த நிலையில், இதுவரையில் 28,93,715 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் தற்போது கொரோனாவுக்கு 18,386 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று கர்நாடக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.