ரூ495 கோடி மதிப்பீட்டில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை அமைக்கும் பணி மேற்கொள்ளப்படும்-முதலமைச்சர் பழனிசாமி

நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள், பொதுப்பணித்துறைகளில்   புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் பழனிசாமி. அவர் வெளியிட்ட அறிவிப்பில்,நெல்லை, சேலம், விழுப்புரம் மாவட்டங்களில் ரூ137 கோடியில் புதிதாக நீர்த்தேக்கம், ஏரி கசிவுநீர் குட்டைகள் அமைக்கப்படும். கரூர் மாவட்டம் நஞ்சை புகலூரில் ரூ495 கோடி மதிப்பீட்டில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை அமைக்கும் பணி மேற்கொள்ளப்படும்.சென்னை ராஜீவ்காந்தி சாலையில் உள்ள டைடல் பார்க் சந்திப்பில் ரூ110 கோடி மதிப்பீட்டில் இரண்டு “U” வடிவில் மேம்பாலங்கள் கட்டப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.

ஜெயலலிதாவை விட மேலானவர் தற்போதைய முதல்வர் – அமைச்சர் தங்கமணி !

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விட தற்போதைய முதல்வர் மேலானவர் என்றும், அவர் சாதாரணமாக இருப்பதை கண்டு யாரும் எளிதாய் நினைக்க வேண்டாம் என்று மின்சாரத்துறை தங்கமணி தெரிவித்துள்ளார். சட்ட சபையில் மின்சாரத்துறை மானிய கோரிக்கையின் பொது இதனை தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி உயர் மின் கோபுரம் கீழ் நின்றால் உடலில் மின்சாரம் பாயும் என்று கூறி பொய் பிரச்சாரம் செய்ததாக  குறிப்பிட்டு பேசிய அமைச்சர், அவர் நின்றது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட … Read more

பாதிக்கப்பட்ட மக்காச்சோளத்திற்கு ரூ 186 கோடி நிவாரணம் வழங்கப்படும் – முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

மக்காச்சோளத்திற்கு ரூ 186 கோடி நிவாரணம் வழங்கப்படும் என்று  முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இன்று  தமிழக சட்டப்பேரவை நடைபெற்று வருகிறது. பேரவையில் விதி 110-ன் கீழ் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்புகளை வெளியிட்டார்.அதில்,அமெரிக்க படைப்புழு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்காச்சோளத்திற்கு ரூ 186 கோடி நிவாரணம் வழங்கப்படும். இறவை பயிர் – ஹெக்டேருக்கு ரூ 13500, மானாவாரிப் பயிர் – ஹெக்டேருக்கு ரூ 7410 வழங்கப்படும் என்று  முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ரத்தினசபாபதி முதலமைச்சர் பழனிசாமியுடன் சந்திப்பு

அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ரத்தினசபாபதி முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்துள்ளர். ரத்தினசபாபதி உள்ளிட்ட 3 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.இந்த நிலையில் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ரத்தினசபாபதி முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்துள்ளர்.  தினகரன் ஆதரவாளர் என கருதப்பட்ட ரத்தினசபாபதி முதலமைச்சரை தலைமை செயலகத்தில் சந்தித்தார்.

28-ம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் -அதிமுக தலைமை அறிவிப்பு

வரும் 28-ம் தேதி காலை 11.30 மணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்  நடைபெறும்  என்று அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அதிமுக தலைமை  வெளியிட்டுள்ள அறிக்கையில்,சென்னை  ராயப்பேட்டையில்  தலைமை அலுவலகத்தில் வரும் 28-ம் தேதி காலை 11.30 மணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் . முதலமைச்சர், துணை முதலமைச்சர் தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் தொடர்பாக ஆலோசனை நடைபெற உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடிநீர் தட்டுப்பாடு : முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.இந்த  கூட்டத்தில் அமைச்சர்கள் வேலுமணி, உதயகுமார் மற்றும் துறை செயலாளர்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

88 திமுக எம்.எல்.ஏக்களில் இதுவரை ஒருவர் கூட மக்கள் பிரச்சனைக்காக என்னிடம் மனு அளித்ததில்லை-முதலமைச்சர் பழனிசாமி

88 திமுக எம்.எல்.ஏக்களில் இதுவரை ஒருவர் கூட மக்கள் பிரச்சனைக்காக என்னிடம் மனு அளித்ததில்லை  என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். ஒட்டபிடாரத்தில் முதலமைச்சர் பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார்.அப்போது அவர் பேசுகையில்,  88 திமுக எம்.எல்.ஏக்களில் இதுவரை ஒருவர் கூட மக்கள் பிரச்சனைக்காக என்னிடம் மனு அளித்ததில்லை .ஒட்டபிடாரம் ஊராட்சி தரம் உயர்த்தி பேரூராட்சியாக அறிவிக்கப்படும்.எங்களை பற்றி குறை சொல்லியே ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார், திமுக ஆட்சியில் செய்த திட்டங்களை கூறி ஸ்டாலினால் வாக்கு சேகரிக்க முடியாது என்று … Read more

காவிரிக்காக மக்களவையில் திமுக ஒருநாள் கூட போராடவில்லை – முதலமைச்சர் பழனிச்சாமி

காவிரிக்காக மக்களவையில் திமுக ஒருநாள் கூட போராடவில்லை என்று முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். கரூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் தம்பிதுரையை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தார். அப்போது முதலமைச்சர் பழனிச்சாமி பேசுகையில்,காவிரிக்காக மக்களவையில் திமுக ஒருநாள் கூட போராடவில்லை. காவிரியை பாலைவனமாக்க காங்கிரஸ் கட்சியினர் முயற்சிக்கின்றனர். மேகதாது அணை கட்டப்படும் என ராகுல் கூறியதற்கு ஸ்டாலின் என்ன பதில் கூறப்போகிறார்? என்று முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

ரூ.6000 வழங்கும் திட்டத்தை தொடக்கி வைக்க இன்று  பியூஷ் கோயல் சென்னை வருகிறார்-தமிழிசை 

சென்னையில் முதல்வர் பழனிசாமியுடன் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சந்திப்பு நடைபெற்றது. விவசாயிகளுக்கு ரூ.6000 வழங்கும் திட்டத்தை தொடக்கி வைக்க இன்று  பியூஷ் கோயல் சென்னை வருகிறார் என்று  தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்  தெரிவித்துள்ளார்.  சென்னையில்  முதல்வர் பழனிசாமியுடன் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சந்திப்பு நடைபெற்றது.அதிமுக கூட்டணியில் தேமுதிகவின் நிலை பற்றி அறிய முதல்வரை தமிழிசை சந்தித்தார். இதன் பின்னர்  தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில், விவசாயிகளுக்கு ரூ.6000 வழங்கும் திட்டத்தை தொடக்கி வைக்க இன்று  … Read more

மேத்யூ சாமுவேல் மீது ரூ.1.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு முதலமைச்சர் பழனிச்சாமி வழக்கு

தெகல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் மீது ரூ.1.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு முதலமைச்சர் பழனிச்சாமி  சென்னை  உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.