சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கு எதிரான வழக்கு : தொடர்ந்த வழக்கை 3 பேரும் வாபஸ் பெற்றனர்

தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதாக  அதிமுக கொறடா சபாநாயகரிடம் அளித்த புகாரின் அடிப்படையில், கள்ளக்குறிச்சி பிரபு, விருத்தாசலம் கலைச்செல்வன், அறந்தாங்கி ரத்தினசபாபதி ஆகிய 3 எம்.எல். ஏக்களுக்கும் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். இதனால் சபாநாயகர் தனபால்  அனுப்பிய நோட்டீஸுக்கு எதிராக எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த நிலையில் சபாநாயகர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்தில்  அதிமுக எம்எல்ஏக்கள் பிரபு, கலைசெல்வன், ரத்தினசபாபதி   உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை 3 பேரும் வாபஸ் பெற்றனர்.

இன்று முதல் அதிமுகவில் தொடர்ந்து செயல்படுவேன்-சட்டமன்ற உறுப்பினர் ரத்தினசபாபதி

இன்று முதல் அதிமுகவில் தொடர்ந்து செயல்படுவேன் என்று சட்டமன்ற உறுப்பினர் ரத்தினசபாபதி  தெரிவித்துள்ளார். ரத்தினசபாபதி உள்ளிட்ட 3 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.இன்று  அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ரத்தினசபாபதி முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்தார். தினகரன் ஆதரவாளர் என கருதப்பட்ட ரத்தினசபாபதி முதலமைச்சரை தலைமை செயலகத்தில் சந்தித்தார்.பின்னர் சபாநாயகர் தனபாலை சந்தித்தார். முதல்வர், சபாநாயகரை சந்தித்தபின்  சட்டமன்ற உறுப்பினர் ரத்தினசபாபதி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், தடுமாறிப்போய் இருந்த என்னை மீண்டும் அதிமுகவில் இணைத்த பெருமை அமைச்சர் விஜயபாஸ்கரைத்தான் சேரும். … Read more

அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ரத்தினசபாபதி முதலமைச்சர் பழனிசாமியுடன் சந்திப்பு

அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ரத்தினசபாபதி முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்துள்ளர். ரத்தினசபாபதி உள்ளிட்ட 3 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.இந்த நிலையில் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ரத்தினசபாபதி முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்துள்ளர்.  தினகரன் ஆதரவாளர் என கருதப்பட்ட ரத்தினசபாபதி முதலமைச்சரை தலைமை செயலகத்தில் சந்தித்தார்.

கட்சிக்கோ, ஆட்சிக்கோ எதிராக எந்த செயலிலும் ஈடுபடவில்லை-எம்எல்ஏ ரத்தினசபாபதி

கட்சிக்கோ, ஆட்சிக்கோ எதிராக எந்த செயலிலும் ஈடுபடவில்லை என்று எம்எல்ஏ ரத்தினசபாபதி தெரிவித்துள்ளார். சபாநாயகர் தனபால்  அனுப்பிய நோட்டீஸுக்கு எதிராக எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இதை விசாரித்த உச்சநீதிமன்றம் 3 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் அளித்த நோட்டீஸுக்கு இடைக்காலத் தடைவிதித்து உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் இது தொடர்பாக எம்எல்ஏ ரத்தினசபாபதி கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,நாங்கள் ஆட்சிக்கு உறுதுணையாக தான் இருந்திருக்கிறோமே தவிர, கட்சிக்கோ, ஆட்சிக்கோ எதிராக எந்த செயலிலும் ஈடுபடவில்லை. எங்கள் மீது இந்த … Read more