சென்னை புரசைவாக்கத்தில் மாஞ்சா நூல் தயாரித்து, விற்பனை செய்த 2 பேர் கைது!

போலீசார் , சென்னை புரசைவாக்கத்தில் மாஞ்சா நூல் தயாரித்து, விற்பனை செய்த 2 பேரை  கைது செய்துள்ளனர். புரசைவாக்கம் சாலை மாநகர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் விஜய் ஆகியோர் மாஞ்சா நூல் தயாரித்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, அங்கு சென்ற போலீசார், இருவரையும் கைது செய்ததுடன், மாஞ்சா நூல் தயாரிக்க பயன்படுத்திய எந்திரம் மற்றும் மூலப்பொருட்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

கோவையில் இந்து முன்ணி போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதையடுத்து பொதுமக்கள் எதிர்ப்பு போராட்டம்..!

பொதுமக்கள்,கோவையில் இந்து முன்ணி போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதையடுத்து  எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவையில் விஸ்வ இந்து பரிஷத் ரதயாத்திரை விவகாரத்தில் இந்து முன்னணியினரும், எஸ்.டி.பி.ஐ கட்சியினரும் ஒருவரை ஒருவர் தரக்குறைவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக இரு தரப்பினரும் அளித்த புகாரில் பேரில் போலீசார் இரு தரப்பு நிர்வாகிகளையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இந்து முன்னணி நிர்வாகிகளைல் விடுவிக்கக் கோரி கோவை துடியலூரில் சாலைமறியல்  நடைபெற்றது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் வாகனங்கள் நீண்ட … Read more

சுதந்திரப்போராட்ட வீரர் சுக்தேவின் குடும்பத்தினர் தியாகி அந்தஸ்து கொடுக்கப்படாததால் உண்ணாவிரதம்!

சுக்தேவ் குடும்பத்தினர் , பகத்சிங், ராஜ்குரு மற்றும் சுக்தேவ் ஆகிய சுதந்திரப்போராட்ட வீரர்களுக்கு தியாகி அந்தஸ்து கொடுக்கப்படாததால் கால வரையற்ற உண்ணா நிலை போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்துள்ளனர். இந்த மூவரும், லாலா லஜாபாத் என்ற விடுதலைப் போராட்ட வீரரை அடித்துக்கொன்ற ஆங்கிலேய அரசின் துணை கண்காணிப்பாளர், சாண்டர்ஸை கொலை செய்ததால் 1931 ஆம் ஆண்டு  ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டனர். இந்த மூவருக்கும் சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகியும், தியாகி அந்தஸ்து கொடுக்கப்படவில்லை என்பதால், 87 வது … Read more

சியோமி பேக்பாக்ஸ் அறிமுகம்..!!

சீன நிறுவனமான சியோமி, இந்திய சந்தையை கைப்பற்றும் அதன் முயற்சிகளை இரட்டிப்பாக்கியுள்ளது என்பது போல் தெரிகிறது. அதன் ஒரு பகுதியாக, சியோமி இன்று அதன் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் சில புதிய அக்செசெரீஸ்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அக்செசெரீஸ்களின் பட்டியலில், சியோமி நிறுவனத்தின் மூன்று பேக்பாக்ஸ்களும் இடம்பெற்றுள்ளது. அவைகள் மொத்தம் மூன்று மாதிரிகளில் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு, சியோமி ஒரு பிஸ்னஸ் பேக்பாக்கை அறிமுகம் செய்ததும் அது நுகர்வோர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதும் குறிப்பிடத்தக்கது. எம்ஐ டிராவல் பேக்பாக் இதன் … Read more

சென்னை ஹோட்டலில் துப்பாக்கியால் சுட்டு ரகளை செய்த வழக்கறிஞர் கைது!

போலீஸார்  சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் ஏற்பட்ட தகராறில், துப்பாக்கியால் சுட்டு ரகளையில் ஈடுபட்ட வழக்கறிஞரை கைது செய்தனர். சென்னை அண்ணாநகரைச் சேர்ந்தவர் மாதவன். வழக்கறிஞரான இவருக்கு, காஞ்சிபுரம் மாவட்டம், கேளம்பாக்கம் – வண்டலூர் சாலையில் சொந்தமாக நிலம் உள்ளது. அதில் தோட்டம் அமைத்து பராமரித்து வருகிறார். இதற்காக இங்கு அடிக்கடி வந்து செல்வார் எனக் கூறப்படுகிறது. கேளம்பாக்கத்துக்கு வரும்போது அருகில் உள்ள தனியார் விடுதிகளில் அறை எடுத்து தங்கிச் செல்வார். இந்நிலையில் நேற்று … Read more

ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வு!

நேற்றை விட ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.11 அதிகரித்துள்ளது. 22 கேரட் தங்கம் இன்று ஒரு கிராமுக்கு ரூ.2,934 ஆக விற்பனையாகிறது. ஒரு சவரன் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ.23,472 ஆகும். 24 கேரட் தங்கம் 10 கிராமுக்கு ரூ.30,800க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.41.60 ஆகும். ஒரு கிலோ வெள்ளிக் கட்டி ரூ.41,600 ஆக விற்பனை செய்யப்படுகிறது.  மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

பாஜக உ.பி.யில் எதிர்கட்சி எம்எல்ஏக்களை வளைக்க திட்டம்?

இன்று நடைபெற்று வரும் தேர்தல்  மாநிலங்களவையில் பெரும்பான்மை பெற வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வரும் பாஜகவிற்கு மிக முக்கியமாகும். குஜராத்தை போல உத்தரப் பிரதேசத்திலும் எதிர்கட்சியை வெற்றி பெறவிடாமல் தடுக்கும் பொருட்டு அந்த கட்சிகளின் எம்எல்ஏக்களை வளைக்கும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. குஜராத்தில் மாநிலங்களவை தேர்தல் கடந்த ஆண்டு நேற்று நடைபெற்றது. காங்கிரஸ் வேட்பாளர் அகமது படேலை தோற்கடிக்க, காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்களை பாஜக இழுத்தது. இதனால் பெங்களூரு ரிசார்ட்டில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 44 … Read more

6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கா விட்டால், சுங்கச் சாவடிகளில் வரி செலுத்தாமல் செல்லும் போராட்டம் !

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் உச்சநீதிமன்றம் வழங்கிய 6 வார கால அவகாசத்திற்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கா விட்டால், சுங்கச் சாவடிகளில் வரி செலுத்தாமல் செல்லும் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார். போச்சம்பள்ளியில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, வேல்முருகன், மத்திய அரசுப்  பணிகளில் மறைமுகமாக வடநாட்டினருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருப்பதாகவும், இதனை உடனடியாக தடுத்திடவேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். காவிரி மேலாண்மை வாரியம் … Read more

அக்டோபர் மாதத்திற்கு சந்திராயன் திட்டம் தள்ளி வைப்பு!

இஸ்ரோ தலைவர் சிவன் பிள்ளை  சந்திராயன் 2 திட்டம் அக்டோபர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சந்திராயன் திட்டத்தில் நிபுணர்களின் ஆலோசனையின் அடிப்படையில் சில சோதனைகளை மேற்கொள்ளவிருப்பதாகவும், இது நிறைவடைந்த பின் அக்டோபர் மாதத்தில் சந்திராயன் விண்கலம் ஏவப்படும் என்றும் கூறினார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

ரவுடிகள் தமிழகத்தில் இருக்க முடியாமல் பிற மாநிலங்களுக்கு ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டதால் தான் ரவுடிகள் தமிழகத்தில் இருக்க முடியாமல் அடுத்த மாநிலத்திற்கு ஓடும் நிலையில் உள்ளனர் என தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இது தொடர்பாக பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ரவுடிகள் எல்லா ஆட்சியிலும் இருந்தார்கள் என்றும், ஆனால் தாங்கள் அவர்களை கண்டுபிடித்து கைது செய்துள்ளதாகவும் கூறினார். அப்போது குறிக்கிட்டு பேசிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர்  துரைமுருகன், எல்லா ஆட்சியிலும் ரவுடிகள் உள்ளனர் என்றும், ஆனால் கேக் வெட்டியது உங்கள் ஆட்சியில்தான்  என குறிப்பிட்டார். … Read more