70,000 அரசு ஊழியர்களின் வேலை ‘காலி’.? அர்ஜென்டினா அதிபர் அதிரடி.!

Argentina President Javier Milei

Argentina : அர்ஜென்டினா பொருளாதாரம் சரிவு காரணமாக அந்நாட்டில் 70 ஆயிரம் பேர் வேலை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது. அர்ஜென்டினாவின் புதிய ஜனாதிபதியாக ஜேவியர் மிலே (Javier Milei) கடந்த டிசம்பர் மாதம் பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்றது முதல் அந்நாட்டின் பொருளாதரம் சரிவை சந்தித்து வருகிறது. தனியார் நிறுவன ஊழியர்களின் ஊதியம் மட்டுமல்லாது அரசு ஊழியர்களின் நிலையும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என அந்நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வருகின்றன. நேற்று முன்தினம், நாட்டின் … Read more

பிஃபா உலகக்கோப்பை கால்பந்து தகுதிச்சுற்று.! பிரேசிலை வீழ்த்தியது அர்ஜென்டினா.!

Argentina

ஆண்களுக்கான பீஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் 2026ம் ஆண்டு நடைபெறவுள்ளது. கனடா, மெக்சிகோ மற்றும் அமெரிக்காவில், மொத்தம் 16 மைதானங்களில் நடைபெறவுள்ள இந்த தொடரில் 48 அணிகள் பங்கேற்று விளையாட உள்ளன. இப்போது இந்த தொடருக்கான தென் அமெரிக்க தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பிரேசில் மற்றும் அர்ஜென்டினா அணிகள் விளையாடின. பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் உள்ள மரக்கானா மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் தொடக்கத்தில் பிரேசில் அணியின் கையில் இருந்த … Read more

மெஸ்ஸி தங்கிய அறை, அருங்காட்சியகமாக மாற்றம்- கத்தார் பல்கலைக்கழகம்

கத்தாரில் மெஸ்ஸி தங்கிய அறையை அருங்காட்சியகமாக மாற்ற முடிவு செய்துள்ளதாக கத்தார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கத்தாரில் நடைபெற்ற ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை தொடரில் அர்ஜென்டினா அணி, சாம்பியன் பட்டம் வென்றது. இந்த உலகக்கோப்பை தொடர் முழுவதும் அர்ஜென்டினா அணி வீரர்கள் கத்தாரில் தங்கிய அறையைப் பகிர்ந்து கொண்ட கத்தார் பல்கலைக்கழகம் மெஸ்ஸி தங்கிய அறையை அருங்காட்சியமாக மாற்றப்போவதாக தெரிவித்துள்ளது. லியோனல் மெஸ்ஸி, இந்த உலகக்கோப்பை தொடரில் அதிகபட்ச கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் 7 கோல் அடித்து 2-வது … Read more

மெஸ்ஸியின் கால் தடங்கல் எங்கள் மைதானத்தில் பதிய வேண்டும்.! பிரேசிலில் இருந்து வந்த அழைப்பு.! 

அர்ஜென்டினா கேப்டன் மெஸ்ஸி தனது கால்தடங்களை பதிக்க வேண்டும் என பிரேசில் நாட்டில், உள்ள மரக்கானா ஸ்டேடியம் அழைப்பு விடுத்துள்ள்ளது. ஃபிபா உலக கோப்பை கால்பந்தாட்ட தொடரில் கோப்பையை தட்டி சென்ற பிறகு ஏற்கனவே புகழின் உச்சியில் இருந்த அர்ஜென்டினா கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸி தற்போது மேலும் உயரத்திற்கு சென்று விட்டார். அவருக்கு உலகெங்கும் பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், அவருக்கு பிரேசில் நாட்டில், உள்ள மரக்கானா ஸ்டேடியம் (Maracanã Stadium) அழைப்பு … Read more

கட்டுக்கடங்காத ரசிகர் கூட்டம்.! ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்ட அர்ஜென்டினா வீரர்கள்.!

அர்ஜென்டினாவில் கால்பந்தாட்ட வீரர்கள் உலக கோப்பையை வென்று அணிவகுத்து சென்றபோது கூட்டம் அதிகமானதால் ஹெலிகாப்டர் மூலமாக வீரர்கள் மீட்கப்பட்டனர்.  2022 ஃபிஃபா உலகக்கோப்பை தொடரில் பிரான்ஸ் நாட்டை 4-2 என்கிற பெனால்டி ஷூட் கோல் கணக்கில் சாம்பியன் பட்டத்தை வென்றது மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி.  உலக கால்பந்தாட்ட சாம்பியன் பட்டத்தை வென்று நாடு திரும்பிய வீரர்களை வரவேற்க்க அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்சில் மக்கள் வீதியெங்கும் திரண்டனர்.ரசிகர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த அவர்களை வாழ்த்தி வரவேற்றனர். … Read more

ரசிகர்கள் ஆர்பரிப்பில் மேளதாளங்கள் முழங்க அர்ஜென்டினா வீதியில் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு.!

உலகக்கோப்பை வென்று நாடு திரும்பிய அர்ஜென்டினா வீரர்களுக்கு அந்நாட்டு மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.  நடந்து முடிந்த ஃபிஃபா உலகக்கோப்பை தொடரில் பிரான்ஸ் நாட்டை 4-2 என்கிற பெனால்டி ஷூட் கோல் கணக்கில் சாம்பியன் பட்டத்தை வென்றது மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி. அர்ஜென்டினா மட்டுமல்லாது உலகமெங்கும் உள்ள மெஸ்ஸி ரசிகர்கள், கால்பந்தாட்ட ரசிகர்கள் இன்னும் கொண்டாடி வருகின்றனர். கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணி இன்று தங்களது சொந்த நாட்டிற்க்கு சென்றது. அங்கு , உலக … Read more

Karim Benzema retires: சர்வதேச போட்டிகளில் இருந்து பென்சிமா ஓய்வு!

பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் கரீம் பென்சிமா சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு. 2022 FIFA உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவிடம் பிரான்ஸ் தோல்வியடைந்த எதிரொலி காரணமாக நட்சத்திர வீரர் கரீம் பென்சிமா சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதனிடையே, உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் பிரான்ஸ் அணியை பெனால்டி ஷூட் அவுட் முறையில் வீழ்த்தி அர்ஜென்டினா அணி உலகக்கோப்பையை வென்றது. இதனால் பிரான்ஸ் அணியின் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். … Read more

National holiday:இன்று அர்ஜென்டினாவில் பொதுவிடுமுறை வெற்றியை கொண்டாட தயாராகும் மெஸ்ஸி !

கால்பந்து உலகக்கோப்பையை அர்ஜென்டினா வென்றதை அடுத்த இன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கத்தாரில் நடந்து முடிந்த உலகக்கோப்பை கால்பந்தின் இறுதி போட்டியில் அர்ஜென்டினா அணி பிரான்ஸை 4-2 என்று டை-பிரேக்கரில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் இன்று செவ்வாய்க்கிழமை பொது விடுமுறை அளித்து அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வெற்றிகொண்டாட்டமானது அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸில் கொண்டாடப்படுகிறது.இதில் மெஸ்ஸி தலைமையிலான  சாம்பியன் அர்ஜென்டினா கால்பந்து அணி கலந்து கொள்ள உள்ளது.

அன்பு மெஸ்ஸியே, உன் கால்களை நான் முத்தமிடுகிறேன்…புகழ்ந்து தள்ளிய மிஷ்கின்…!

உலகக் கோப்பை கால்பந்து 2022 -இன் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. அதில், அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதியது. இதில் அதிரடியாக விளையாடி மெஸ்ஸியின் அணியான அர்ஜென்டினா வெற்றிபெற்றது. இதனையடுத்து பலரும் மெஸ்ஸிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மிஷ்கின் டிவிட்டரில் மெஸ்ஸியை புகழ்ந்து தள்ளியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது ” சிறு பிராயத்தில் நான் விளையாடிய கால்பந்தாட்டத்தை மறந்து இன்று மீண்டும் மெஸ்ஸியின் மூலமாகப் புதிதாகப் … Read more

FIFA WorldCup2022: அர்ஜென்டினாவுடன் மோதுவது யார்? 2-வது அரையிறுதியில் இன்று பிரான்ஸ்-மொரோக்கோ மோதல்.! 

ஃபிஃபா உலகக்கோப்பையில் இரண்டாவது அரையிறுதியில் இன்று பிரான்ஸ் மற்றும் மொரோக்கோ அணிகள் மோதுகின்றன. கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை 2022 தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. 32 அணிகளுடன் தொடங்கிய இந்த உலகக்கோப்பை தொடர் இறுதிப்போட்டியை நெருங்கவுள்ளது. நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதியில் அர்ஜென்டினா அணி 3-0 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி முதல் அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இன்று நள்ளிரவு 12:30 மணிக்கு அல் பெய்த் ஸ்டேடியத்தில் நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில் நடப்பு … Read more