மெஸ்ஸி தங்கிய அறை, அருங்காட்சியகமாக மாற்றம்- கத்தார் பல்கலைக்கழகம்

கத்தாரில் மெஸ்ஸி தங்கிய அறையை அருங்காட்சியகமாக மாற்ற முடிவு செய்துள்ளதாக கத்தார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கத்தாரில் நடைபெற்ற ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை தொடரில் அர்ஜென்டினா அணி, சாம்பியன் பட்டம் வென்றது. இந்த உலகக்கோப்பை தொடர் முழுவதும் அர்ஜென்டினா அணி வீரர்கள் கத்தாரில் தங்கிய அறையைப் பகிர்ந்து கொண்ட கத்தார் பல்கலைக்கழகம் மெஸ்ஸி தங்கிய அறையை அருங்காட்சியமாக மாற்றப்போவதாக தெரிவித்துள்ளது. லியோனல் மெஸ்ஸி, இந்த உலகக்கோப்பை தொடரில் அதிகபட்ச கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் 7 கோல் அடித்து 2-வது … Read more

FIFA உலகக் கோப்பை: இந்தாண்டு அதிக கோல்கள் அடித்து சாதனை!

FIFA உலகக் கோப்பையில் அதிக கோல்கள் அடித்த சாதனை 2022ம் ஆண்டில் முறியடிப்பு. 2022-ஆம் ஆண்டுக்கான FIFA உலகக்கோப்பை தொடர் நவம்பர் மாதம் 20ம் தேதியில் இருந்து விறுவிறுப்பாக நடைபெற்று, நேற்றுடன் நிறைவு பெற்றது. கத்தாரில் நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் த்ரிலான இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி அர்ஜெண்டினா அணி சாம்பியன் பட்டம் வென்றது. இது அர்ஜென்டினா அணியின் மூன்றாவது சாம்பியன் பட்டம் என்பதால் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் கோலாகலமாக இந்த வெற்றியை … Read more

அர்ஜென்டினா வெற்றி கொண்டாட்டம்! கேரளாவில் இன்று இலவச பிரியாணி.!

அர்ஜென்டினாவின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் கேரளாவில் இன்று 1000பேருக்கு இலவச பிரியாணி அறிவித்த ஹோட்டல். கத்தாரில் நடந்த ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பையில், பிரான்ஸை வீழ்த்தி அர்ஜென்டினா சாம்பியன் பட்டம் வென்றது. அர்ஜென்டினாவின் இந்த வெற்றியை முன்னிட்டு உலகெங்கும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கேரளாவில் ரசிகர்கள் அர்ஜென்டினா வெற்றியை பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர். இதற்கு அடுத்தபடியாக கேரளாவின் திரிசூரில் உள்ள ராக்லாண்ட் ஹோட்டல் இன்று (திங்கள் கிழமை) 1000 பேருக்கு இலவச பிரியாணி வழங்குவதாக அறிவித்துளளது.

அன்பு மெஸ்ஸியே, உன் கால்களை நான் முத்தமிடுகிறேன்…புகழ்ந்து தள்ளிய மிஷ்கின்…!

உலகக் கோப்பை கால்பந்து 2022 -இன் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. அதில், அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதியது. இதில் அதிரடியாக விளையாடி மெஸ்ஸியின் அணியான அர்ஜென்டினா வெற்றிபெற்றது. இதனையடுத்து பலரும் மெஸ்ஸிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மிஷ்கின் டிவிட்டரில் மெஸ்ஸியை புகழ்ந்து தள்ளியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது ” சிறு பிராயத்தில் நான் விளையாடிய கால்பந்தாட்டத்தை மறந்து இன்று மீண்டும் மெஸ்ஸியின் மூலமாகப் புதிதாகப் … Read more

ஓய்வை அறிவித்தார் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி!

உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதி போட்டியுடன் ஓய்வு பெறுவதாக லியோனல் மெஸ்ஸி அறிவிப்பு. உலகக்கோப்பை கால்பந்து தொடருடன் ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி. உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதி போட்டியுடன் ஓய்வு பெறுவதாக அர்ஜென்டினா வீரர் லியோனல் மெஸ்ஸி அறிவித்துள்ளார். கத்தாரில் நடைபெற்று வரும் ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை 2022 தொடரின் முதல் அரை இறுதி போட்டியில், குரோஷியாவை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா முதல் அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. … Read more

#FIFAWorldCup: பிரேசில் 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி! 8வது முறையாக காலிறுதிக்கு முன்னேற்றம்!

பிரேசில் 4-1 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை தோற்கடித்து 8வது முறையாக ஃபிஃபா உலகக் கோப்பை காலிறுதிக்கு முன்னேறியது. ஃபிஃபா உலகக் கோப்பை 2022 தொடரின் 16வது சுற்றில் நேற்று நடைபெற்ற போட்டியில், ஐந்து முறை சாம்பியனான பிரேசில் அணி தோஹாவில் உள்ள ஸ்டேடியம் 974-இல் நடந்த 16-வது சுற்று ஆட்டத்தில் தென் கொரியாவை 4-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து, 8வது முறையாக ஃபிஃபா உலகக் கோப்பை காலிறுதிக்கு முன்னேறியது. பிரேசிலுக்காக வினிசியஸ் ஜூனியர், … Read more

#FIFAWorldCup2022: கேமரூனை வீழ்த்தியது சுவிட்சர்லாந்து!

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் கேமரூன் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது சுவிட்சர்லாந்து அணி.  FIFA உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் கேமரூன் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்து அணி வெற்றி பெற்றது. கத்தார் நாட்டில் 2022 ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் கடந்த 20-ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், 2022 FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடரில் குரூப் ஜி-யில் இடம்பெற்றுள்ள சுவிட்சர்லாந்து மற்றும் கேமரூன் அணிகள் … Read more

2022 கால்பந்து போட்டி; அரசு கேபிளில் கட்டணமின்றி கண்டுகளிக்கலாம் – அமைச்சர் மனோதங்கராஜ்

உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை அரசு கேபிள் டிவியில் கூடுதல் கட்டணம் ஏதுமின்றி கண்டுகளிக்கலாம் என அமைச்சர் அறிவிப்பு. கால்பந்து ரசிகர்களுக்கு திருவிழாவாக விளங்கும் ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் கடந்த 20–ஆம் தேதி தொடங்கியது. இந்த முறை 2022 ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி கத்தார் நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளை தனியார் கேபிள் சேனல், டிஸ் மற்றும் ஜியோ சினிமா உள்ளிட்ட ஒரு சில செயலிகளில் நேரலையாக ஒளிபரப்படுகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு அரசு … Read more

2022 உலகக்கோப்பையில் பங்கேற்க போர்ச்சுகல் தகுதி!

ஃபிஃபா 2022 கால்பந்து உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க தகுதி பெற்றது போர்ச்சுக்கல். 2022 ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்பதற்காக நடைபெற்ற தகுதி சுற்றில் வடக்கு மாசிடோனியாவை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றதன் மூலம் போர்ச்சுகல் அணி 2022 உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றது. கத்தாரில் அடுத்த வருடம் நடக்கவுள்ள ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடந்து கொண்டிருக்கின்றன. கத்தாரில் தோஹாவை சுற்றியுள்ள 8 மைதானங்களில் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இந்த ஆண்டு … Read more