FIFA உலகக் கோப்பை: இந்தாண்டு அதிக கோல்கள் அடித்து சாதனை!

FIFA உலகக் கோப்பையில் அதிக கோல்கள் அடித்த சாதனை 2022ம் ஆண்டில் முறியடிப்பு.

2022-ஆம் ஆண்டுக்கான FIFA உலகக்கோப்பை தொடர் நவம்பர் மாதம் 20ம் தேதியில் இருந்து விறுவிறுப்பாக நடைபெற்று, நேற்றுடன் நிறைவு பெற்றது. கத்தாரில் நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் த்ரிலான இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி அர்ஜெண்டினா அணி சாம்பியன் பட்டம் வென்றது.

இது அர்ஜென்டினா அணியின் மூன்றாவது சாம்பியன் பட்டம் என்பதால் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் கோலாகலமாக இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், FIFA உலகக் கோப்பையில் அதிக கோல்கள் அடித்த சாதனை 2022ம் ஆண்டில் முறியடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு FIFA உலகக் கோப்பையில் மொத்தம் 172 கோல்கள் அடிக்கப்பட்டன. முந்தைய சாதனையாக உலகக் கோப்பையில் 1998 மற்றும் 2014 ஆண்டுகளில் தலா 171 கோல்கள் அடிக்கப்பட்ட நிலையில், இந்தாண்டு FIFA உலகக் கோப்பையில் மொத்தம் 172 கோல்கள் அடித்து புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment