சால்ட் பே எப்படி உலகக் கோப்பையைத் தொட முடியும்! விசாரணை நடத்தும் FIFA.!

சால்ட் பே எப்படி ஆடுகளத்திற்கு வந்தார், எப்படி உலகக் கோப்பையைத் தொட்டார் என்பது குறித்து ஃபிஃபா விசாரிக்கிறது. ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் பிரான்ஸை வென்று அர்ஜென்டினா அணி, சாம்பியன் பட்டம் வென்றது. இந்த உலகக்கோப்பை கொண்டாட்டத்தில், பிரபல செஃப் ஆன சால்ட் பே என்றழைக்கப்படும் துருக்கியைச்சேர்ந்த நுஸ்ரத் கோக்சே, ஃபிஃபா விதியை மீறி உலகக்கோப்பையுடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படம் இன்ஸ்டாவில் பகிர்ந்தது சர்ச்சையை கிளப்பிய்த்து. இது குறித்து ஃபிஃபா, சால்ட் பே எவ்வாறு ஆடுகளத்திற்குள் நுழைந்தார், … Read more

FIFA WorldCup2022: அர்ஜென்டினாவுடன் மோதுவது யார்? 2-வது அரையிறுதியில் இன்று பிரான்ஸ்-மொரோக்கோ மோதல்.! 

ஃபிஃபா உலகக்கோப்பையில் இரண்டாவது அரையிறுதியில் இன்று பிரான்ஸ் மற்றும் மொரோக்கோ அணிகள் மோதுகின்றன. கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை 2022 தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. 32 அணிகளுடன் தொடங்கிய இந்த உலகக்கோப்பை தொடர் இறுதிப்போட்டியை நெருங்கவுள்ளது. நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதியில் அர்ஜென்டினா அணி 3-0 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி முதல் அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இன்று நள்ளிரவு 12:30 மணிக்கு அல் பெய்த் ஸ்டேடியத்தில் நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில் நடப்பு … Read more

FIFA WorldCup2022: ஆறாவது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்த, மெஸ்ஸியின் அர்ஜென்டினா.!

முதல் அரையிறுதியில் குரோஷியாவை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா முதல் அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை 2022 தொடரின் முதல் அரை இறுதி போட்டியில், இன்று அதிகாலை 12: 30 மணிக்கு லுசைல் ஸ்டேடியத்தில் மெஸ்ஸியின் அர்ஜென்டினா மற்றும் குரோஷியா அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் முதல் பாதியில் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி, 34 வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணிக்காக பெனால்டி முறையில் … Read more

விண்வெளிக்கு சென்றுவந்த உலகக்கோப்பை கால்பந்துகள்! ஸ்பேஸ்-எக்ஸ் வெளியிட்ட வீடியோ.!

ஃபிஃபா உலககோப்பை கால்பந்துகள் ஸ்பேஸ்-எக்ஸ் இன் உதவியுடன் விண்வெளிக்கு சென்று மீண்டும் கத்தாருக்கே வந்துள்ளன. கத்தாரில் நடந்துவரும் ஃபிஃபா உலககோப்பை தொடரின் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிக்கான அதிகாரப்பூர்வ கால்பந்துகள் எலான் மஸ்கின் ஸ்பேஸ்-எக்ஸ் உதவியுடன் விண்வெளிக்கு அனுப்பப்பட்டு மீண்டும் கத்தார் விமான சேவையின்மூலம் போட்டி நடக்கும் கத்தார் கால்பந்து மைதானத்துக்கே திரும்ப வந்துள்ளன. இது குறித்து ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனம் தனது ட்விட்டரில், ஃபிஃபா உலககோப்பை மற்றும் கத்தார் விமானசேவை ஆகியவற்றுக்கு நன்றி தெரிவித்துள்ளது. உலககோப்பை கால்பந்துகள் விண்வெளிக்கு … Read more

FIFA WorldCup2022: இறுதிப்போட்டிக்கு செல்வது யார்? அரையிறுதியில் மெஸ்ஸியின் அர்ஜென்டினா, குரோஷியா மோதல்.!

ஃபிஃபா உலகக்கோப்பையில் முதல் அரையிறுதிப்போட்டியில் அர்ஜென்டினா மற்றும் குரோஷியா அணிகள் மோதுகின்றன. கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை 2022 தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. 32 அணிகளுடன் தொடங்கிய இந்த உலகக்கோப்பை தொடர் தற்போது 4 அணிகளுடன் அரையிறுதி போட்டியை நெருங்கியுள்ளது. இன்று நள்ளிரவு 12:30 மணிக்கு நடைபெறும் முதல் அரையிறுதியில் மெஸ்ஸியின் அர்ஜென்டினா மற்றும் குரோஷியா அணிகள் லுஸைல் ஸ்டேடியத்தில் மோதுகின்றன. அர்ஜென்டினா மற்றும் குரோஷியா இரு அணிகளும் தங்களது காலிறுதியில் பெனால்டி முறையில் … Read more

FIFA WorldCup2022: நெதர்லாந்தை வீழ்த்தி மெஸ்ஸியின் அர்ஜென்டினா அரையிறுதிக்கு தகுதி.!

ஃபிஃபா உலகக் கோப்பை தொடரில் நெதர்லாந்தை 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா அரையிறுதிக்கு தகுதி பெற்றது. கத்தாரில் நடந்து வரும் கால்பந்து உலகக்கோப்பை தொடரின் இரண்டாவது கால் இறுதி ஆட்டத்தில் இன்று அதிகாலை 12 30 க்கு லுசைல் ஸ்டேடியத்தில் அர்ஜென்டினா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியில் 35 வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணியின் மொலினா ஒரு கோல் அடித்தார். முதல் பாதியின் முடிவில் அர்ஜென்டினா 1-0 என்ற கோல் … Read more

FIFA WorldCup2022: அரையிறுதிக்கு முன்னேறிய குரோசியா! 5 முறை சாம்பியன் பிரேசில் வெளியேறியது.!

ஃபிஃபா உலகக் கோப்பையில் முதல் காலிறுதியில் பிரேசிலை வீழ்த்தி குரோசியா அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. கத்தாரில் நடந்து வரும் கால்பந்து உலக கோப்பை 2022 தொடரின் காலிறுதி போட்டிகள் நேற்று தொடங்கின. முதல் போட்டியில் பிரேசில் மற்றும் குரோசியா அணிகள் இரவு 8:30 மணிக்கு எஜுகேஷன் சிட்டி ஸ்டேடியத்தில் மோதின. கோல் அடிப்பதற்கு இரு அணிகளும் கடுமையாக போராடின,இருந்தும் 90 நிமிடங்கள் முடியும் வரை இரு அணிகளும் கோல் இன்றி சமநிலையில் முடிந்தன.அதனால் வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் … Read more

FIFA WorldCup2022: காலிறுதிப்போட்டிகள் இன்று தொடக்கம்! முதல் போட்டியில் பிரேசில்-குரோஷியா பலப்பரிட்சை.!

ஃபிஃபா உலகக்கோப்பையில் இன்று காலிறுதிப்போட்டிகள் தொடங்குகின்றன. கத்தாரில் நடந்துவரும் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பையில் 16 அணிகள் மோதும் சுற்று நிறைவடைந்து, காலிறுதிப்போட்டிகள் இன்று தொடங்குகின்றன. 32 அணிகளுடன் 8 பிரிவுகளாக தொடங்கிய இந்த உலகக்கோப்பை தொடர் முக்கியமான கட்டத்தை நெருங்கியுள்ளது. 16 அணிகள் சுற்றிலிருந்து காலிறுதிப்போட்டிக்குள் 8 அணிகள் தகுதி பெற்றுள்ளன. பிரான்ஸ், போர்ச்சுகல், இங்கிலாந்து, அர்ஜென்டினா, பிரேசில், குரோஷியா, மொரோக்கோ, மற்றும் நெதர்லாந்து அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன. இன்று நடைபெறும் முதல் காலிறுதியில் பிரேசில் மற்றும் … Read more

FIFA WorldCup2022: ரொனால்டோ விளையாடாதது ஆட்டத்தின் யுக்தி- மேலாளர் சாண்டோஸ்

ஸ்விட்சர்லாந்துக்கு எதிராக ரொனால்டோ, விளையாடாதது அணியின் ஒருவகையான யுக்தி என்று மேலாளர் சாண்டோஸ் கூறியுள்ளார். ஃபிஃபா உலகக்கோப்பையின் 16 அணிகள் மோதும் சுற்றில் நேற்று போர்ச்சுகல் மற்றும் ஸ்விட்சர்லாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆடும் லெவனில் இடம்பெறவில்லை, இதனால் ரசிகர்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்தனர். எனினும் இந்த போட்டியில் போர்ச்சுகல் அணி 6-1 என்ற கோல் கணக்கில் ஸ்விட்சர்லாந்து அணியை வீழ்த்தியது. மேலும் ரொனால்டோவுக்கு பதிலாக இறங்கிய 21 வயது இளம் வீரர் … Read more

FIFA WorldCup2022: வரலாறு படைத்த மொரோக்கோ! ஸ்பெயினை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேற்றம்.!

ஃபிஃபா உலகக் கோப்பையில் மொரோக்கோ அணி, முதன்முறையாக  கால் இறுதிக்கு தகுதி பெற்று வரலாறு படைத்துள்ளது. ஃபிஃபா உலகக் கோப்பை ஆட்டத்தில் மொரோக்கோ அணி 3-0 என்ற கோல்கணக்கில் வலிமை வாய்ந்த ஸ்பெயின் அணியை வீழ்த்தி, கால்பந்து உலக கோப்பையின் வரலாற்றில் முதன்முறையாக காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை தொடரின், 16 அணிகள் மோதும் சுற்று ஆட்டத்தில் நேற்று இரவு 8:30 மணிக்கு மொரோக்கோ மற்றும் ஸ்பெயின் அணிகள் எஜுகேஷன் … Read more