மாற்றுத்திறனாளிகளின் வாகனங்களை பழுது நீக்க உதவி எண்கள் அறிவிப்பு..!

Tngovt

கடந்த சில நாட்களுக்கு முன் மிக்ஜாம் புயலின் கோரத்தாண்டவத்தால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்தது. அதிலும், சென்னையில் பெய்த கனமழை அங்கு பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தியது. அந்த வகையில் சேனையின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கி, மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. அதனை தொடர்ந்து மாநகராட்சி பணியாளர்கள், மீட்புக்குழுவினர் என ஆயிரக்கணக்கானோர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வந்தனர். பொங்கல் பண்டிகை – அரசு பேருந்துகளில் முன்பதிவு தொடக்கம்…! இந்த மழை வெள்ளத்தில் … Read more

பொங்கல் பண்டிகை – அரசு பேருந்துகளில் முன்பதிவு தொடக்கம்…!

Bus

பொதுவாக ஒவ்வொரு பண்டிகையின் போதும், அரசு போக்குவரத்து கழகம் சார்பில், சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். இவ்வாறு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதன் மூலம், பண்டிகை காலங்களில் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும். இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்பவர்களுக்கு அரசு விரைவுப் பேருந்துகளில் பயணிப்பதற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. இன்று முதல் அரையாண்டு பொதுத்தேர்வுகள் தொடக்கம்! போகி பண்டிகைக்கு … Read more

இன்று முதல் அரையாண்டு பொதுத்தேர்வுகள் தொடக்கம்!

கடந்த 11-ஆம் தேதியே அரையாண்டு தேர்வு தொடங்க இருந்தது. இந்த நிலையில், மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக அரையாண்டுத் தேர்வுகள் 2 நாட்கள் ஒத்திவைக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். புத்தகம் இல்லாமல் மாணவர்கள் தேர்வுக்கு படித்து தயாராக முடியாது என்பதால் அரையாண்டு தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், மாணவர்களுக்கு இன்று முதல் அரையாண்டு தேர்வு தொடங்கியுள்ளது. மிதக்கும் எண்ணையை எடுக்க தீவிர முயற்சி… தமிழக அரசு நடவடிக்கை.! அதன்படி, இன்று தொடங்கி டிசம்பர் 22-ம் … Read more

CBSE பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு..!

Odisha Public Exam

சிபிஎஸ்சி 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான சிபிஎஸ்சி +2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு பிப்.15ல் தொடங்கி ஏப்.2ம் தேதி வரை நடைபெறுகிறது. அமித்ஷா வரலாற்றை மாற்றி எழுதும் பழக்கம் கொண்டவர் – ராகுல் காந்தி அதேபோல், சிபிஎஸ்சி 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்.15ல் தொடங்கி மார்ச்.13 வரை நடைபெறுகிறது.

அமித்ஷா வரலாற்றை மாற்றி எழுதும் பழக்கம் கொண்டவர் – ராகுல் காந்தி

rahul gandhi

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறிய கருத்து குறித்து, ராகுல் காந்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், பண்டித நேரு இந்தியாவுக்காக உயிரைக் கொடுத்தார், அவர் பல ஆண்டுகளாக சிறையில் இருந்தார். அமித் ஷாவுக்கு வரலாறு தெரியாது. அவருக்கு வரலாறு தெரிய வேண்டும் என்று எதிர்பார்க்க கூடாது. ஏனெனில் அவர் அதை மாற்றி எழுதும் பழக்கம் கொண்டவர். காங்கிரஸ் எம்.பி. தீரஜ் … Read more

எண்ணெய் கழிவுகளை விரைந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் – தேசிய பசுமை தீர்ப்பாயம்

Ennore oil waste

சென்னை சுற்றுவட்டார புறநகர் பகுதியில் சில இடங்களில் இன்னும் மழைநீர் வடியாமல் காணப்படும் நிலையில், எண்ணெய் கழிவு கடலில் கலந்ததால் எண்ணூர் பகுதி மக்கள் மேலும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலையில், எண்ணெய் கழிவு கடலில் கலந்ததால் எண்ணூர் பகுதியில் மீன்கள் செத்து மிதந்தன. இதனால் மீனவர்கள் பெரிதும் பாதிப்படைந்தனர். இது குறித்து,உரிய ஆய்வு செய்ய தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஒரு குழுவை அமைத்தது. அதன் மூலம் இந்த எண்ணெய் கழிவு எங்கிருந்து வந்தது, இதற்கான … Read more

காங்கிரஸ் எம்.பி. தீரஜ் சாஹு வீட்டில் ரூ.300 கோடி க்கு அதிகமான பணம் பறிமுதல் – பிரதமர் மோடி விமர்சனம்

pm modi

கடந்த சில நாட்களுக்கு முன்பதாக காங்கிரஸ் எம்.பி. தீரஜ் சாகுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் நூற்றுக்கணக்கான மூட்டைகளில் கருப்பு பணம் மீட்கப்பட்டு உள்ளது. தீரஜ் சாஹூவுடன் தொடர்புடைய ஒடிசாவைச் சேர்ந்த மதுபான ஆலையின் பல தொழிற்சாலைகளில் இருந்து கிட்டத்தட்ட ரூ.300 கோடிக்கும் அதிகமான பணத்தை வருமான வரித்துறை பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. 10 நாள் சஸ்பென்ஸ் ஓவர்…. ராஜஸ்தான் மாநிலத்துக்கும் புதுமுக முதலமைச்சர்.! பாஜக அறிவிப்பு.!  இதுகுறித்து பாஜக … Read more

வராக்கடனா ? வஜாக்கடனா? பதில் சொல்லுங்கள் நிர்மலா சீதாராமன் அவர்களே..! – சு.வெங்கடேசன் எம்.பி

su venkatesan MP

கடந்த 9 ஆண்டுகளில் வராக் கடன் ரூ 10.42 லட்சம் கோடி. இதே காலத்தில் வசூலிக்கப்பட்ட வராக்கடன் ரூ 1.61 லட்சம் கோடி மட்டுமே. மீதம் 8.79 லட்சம் கோடி என்ன ஆனது? என மத்திய நிதியமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாடாளுமன்றத்தில் வங்கிக் கடன்கள் பற்றி நான் எழுப்பி இருந்த கேள்விக்கு ஒன்றிய நிதி இணையமைச்சர் பகவத் காரத் பதில் அளித்துள்ளார். 2014-15 இல் இருந்து … Read more

அங்கித் திவாரியை 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி..!

சொத்துகுவிப்பு தொடர்பான வழக்கில் இருந்து விடுவிக்க மருத்துவர் சுரேஷ் பாவிடம் லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டார். மருத்துவர் சுரேஷ் பாபுவிடம் அவர் மீதான வழக்கை முடித்து தருவதாக கூறி முதலில் ரூ.20 லட்சம் வாங்கிய நிலையில் மீதமுள்ள ரூ.31 லட்சத்தை வாங்கியபோது திண்டுக்கல்லில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் சிக்கினார். 15 மணி நேர விசாரணைக்கு பின்  திண்டுக்கல் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் அங்கித் திவாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆஜர்படுத்தினர். அமலாக்கத்துறை … Read more

இந்த 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

Today Chennai rain report

தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த 2 மாதங்களாக பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.  இந்த நிலையில், 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மிக்ஜாம் புயல் – தூய்மைப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிய முதல்வர்..! அதன்படி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில்  கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், டிச.16-ல் புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more