இந்த 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த 2 மாதங்களாக பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.  இந்த நிலையில், 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல் – தூய்மைப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிய முதல்வர்..!

அதன்படி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில்  கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், டிச.16-ல் புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு (டிச. 13, 14) லேசான முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் டிச.18 ஆம் தேதி ஓரிரு இடங்களில் மிதமான மலைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.