மாநாடு மெகா ஹிட்.! வட இந்தியாவில் நிரம்பி வழிந்த திரையரங்கங்கள்.! போன் போட்டு பாராட்டிய அட்லீ.!

மும்பையில் ஷாருக்கான் பட ஷூட்டிங்கில் இருந்த அட்லீ, மாநாடு படம் பார்க்க சென்றுள்ளார். அங்கு ரசிகர்களின் கூட்டத்தை பார்த்ததும் வெங்கட் பிரபுவுக்கு போன் செய்து பாராட்டியுள்ளார். ஆத்மன் சிலம்பரசன் நடித்து வெங்கட் பிரபு இயக்கி கடந்தவாரம் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் மாநாடு. ரிலீஸ் ஆகி கிட்டத்தட்ட 8 நாட்கள் ஆகியும் அதன் தாக்கம் இன்னும் ரசிகர்களிடம் இருந்து இன்னும் விலகவில்லை. இப்படம் திரையிட்ட அனைத்து இடங்களிலும் பெரும் லாபத்தை ஈட்டி வருகிறது. முதல் 3 நாளிலேயே … Read more

நாளை வெளியாகிறதா வலிமை இரண்டாவது பாடல்.! யுவன் – சித் ஸ்ரீராம் – தாமரை.!

நாளை வலிமை படத்தின் இரண்டாவது பாடல் வெளியாக அதிக வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. இந்த பாடலுக்கு யுவன் இசையமைக்க சித் ஸ்ரீராம் பாடல் பாடியுள்ளாராம். தாமரை இந்த பாடலை எழுதியுள்ளாராம். தல அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படம் தயாராகிவிட்டது. இந்த திரைப்படம் வரும் பொங்கல் தினத்த்தை முன்னிட்டு வெளியாக உள்ளது. இன்னும் தேதி முடிவு செய்யப்படவில்லை. அந்த தேதிக்காக ரசிகர்களும், தியேட்டர்காரர்களும் காத்துகொண்டு இருக்கின்றனர். இந்த திரைப்படத்தின் போஸ்டர்கள் மற்றும் நாங்க வேற மாறி … Read more

மீண்டும் களமிறங்கும் ஆலுமா டோலுமா மாஸ் காம்போ.! தல61 தெறிக்கவிடும் அப்டேட்.!

தல அஜித்தின் 61வது திரைப்படத்தை வினோத் இயக்குவதும், அதனை போனி கபூர் தயாரிக்க உள்ளதும் ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. அந்த படத்தில் அனிருத் இசையமைக்க அதிக வாய்ப்புள்ளதாம். கடந்த 2015ஆம் ஆண்டு சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்து கடும் மழையிலும் மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் வேதாளம். இந்த படத்தின் வெற்றிக்கு அனிருத்தின் ஆலுமா டோலுமா பாடலும், தீம் மியூசிக்கும் அதற்கு ஏற்ற தல அஜித்தின் மாஸான ஸ்க்ரீன் ப்ரெசென்ஸும் பெரிதும் உதவியது. தல அஜித் தற்போது … Read more

மாநாடு மாஸ் ஹிட்.! ‘நான் வீழ்வென்று நினைத்தாயோ.!’- தயாரிப்பாளரின் மாஸ் டிவீட்.!

எத்தனை இடர் வரினும் எதிர்த்து நின்று வெற்றி கொள்வோம். நான் வீழ்வேனென்று நினைத்தாயோ??! – மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஹேப்பி டிவீட். நேற்று இரவு திடீரென மாநாடு திரைப்படம் சில தவிர்க்க முடியாத காரணத்தால் ரிலீஸ் செய்ய முடியவில்லை. ஆதலால், ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என மாநாடு தயாரிப்பாளர் டிவீட் போட்டதும், சிம்பு ரசிகர்களுக்கு ஹார்ட் அட்டேக்கே வந்துவிட்டது. பல ரசிகர்கள் கண்ணீர் விட்டுவிட்டனர். நேற்று இரவு, நள்ளிரவு வரை மாநாடு நிதி பிரச்சனை … Read more

31 ஆண்டுகளுக்கு பிறகு ரகசியத்தை உடைத்த இளையராஜா.! வைரலாகும் வீடியோ.!

பேர் வச்சாலும் பாடல் உருவான விதம் குறித்து இளையராஜா பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.  இயக்குனர் சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1991-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மைக்கேல் மதனா காம ராஜன். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்திருந்தார். படத்திலிருந்து வெளியான அணைத்து பாடல்களும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தற்போது வரை மக்கள் பாடல்களை கேட்டுக்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற “பேர் வச்சாலும்” பாடலும் ரசிகர்களுக்கு … Read more

மெகா கூட்டணி.! பாலா – சூர்யா – யுவன் – அதர்வா – கீர்த்தி.!?

இயக்குனர் பாலாவின் அடுத்த திரைப்படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.  தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை படமாக கொடுப்பவர் இயக்குனர் பாலா. தான் இயக்கிய முதல் திரைப்படமான சேது படத்திலே பல விருதுகளை வென்றார். கடைசியாக இவரது இயக்கத்தில் வர்மா படம் வெளியானது. இந்த படத்தை தொடர்ந்து மிஷ்கின் இயக்கும் பிசாசு 2 படத்தை தயாரிக்கிறார். இந்த நிலையில், தற்போது இயக்குனர் பாலா அடுத்ததாக நடிகர் அதர்வா வை வைத்து ஒரு திரைப்படம் இயக்கவுள்ளதாகவும், அவருக்கு ஜோடியாக … Read more

மதுரைக்காரனாக மிரட்ட வருகிறார் தனுஷ்.! இயக்குனர் யார் தெரியுமா.?

நடிகர் தனுஷ் அடுத்ததாக பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்.  தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் தற்போது இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாறன் படத்திலும், இயக்குனர் மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் சென்னையில் விறு விருப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகவுள்ள நானே வருவேன் படத்தில் … Read more

வார்த்தைகளால் விவரிக்க முடியாதது உங்கள் அன்பு.! ட்விட்டரில் யுவன் நெகிழ்ச்சி.!

பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் இசையமைப்பாளர் யுவன் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.  தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஓருவர் யுவன் சங்கர் ராஜா. ஒரு ஹீரோவுக்கு இணையான ரசிகர்களை கொண்டே ஒரே இசையமைப்பாளர் என்றே இவரை கூறலாம். இவர் நேற்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடினார். அவரை விட அவரின் வெறித்தனமான இசை ரசிகர்கள் இணையத்தில் யுவனின் பிறந்தநாளை கொண்டாடி தீர்த்துவிட்டார். ட்விட்டரில் HBDBelovedYUVAN என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். ரசிகர்கள் மட்டுமின்றி, யுவானின் … Read more

சைமா விருதுகள் 2019 : தேர்வான 5 தமிழ் இசையமைப்பாளர்கள்.!

கடந்த 2019-ஆம் ஆண்டுக்கான சிறந்த இசையமைப்பாளர்கள் தேர்வான பட்டியலை சைமா வெளியிட்டுள்ளது. சினிமாதுறையில், சினிமா துறையில் சிறந்து விளங்கும் இயக்குனர்கள், நடிகர், நடிகைகள், இசையமைப்பாளார்கள், துணை கதாபாத்திரங்களில் என அனைவருக்கும் சைமா விருதுகள் வருடம்தோறும் வழங்கப்படுகிறது. அந்தவகையில் கடந்த 2019-ஆம் ஆண்டுக்கான சிறந்த படங்கள், நடிகர் நடிகைகளின் பட்டியலில் தேர்வானாகவர்களின் பட்டியல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இந்த நிலையில், அதைபோல் தற்போது கடந்த 2019-ஆம் ஆண்டுக்கான சிறந்த இசையமைப்பாளர்கள் தேர்வான பட்டியலை சைமா வெளியிட்டுள்ளது. … Read more

வலிமை தீம் எதிர்பார்த்ததை விட மாஸாக இருக்கும் – யுவன் ஷங்கர் ராஜா.!

வலிமை படத்தில் ரசிகர்கள் எதிர்பார்த்ததை விட மாஸ் ஆன தீம் இருக்கும் என இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.  இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இந்த படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கிறார்.  படத்திற்கான இறுதி கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் 5 நாட்கள் மட்டும் படமாக்கப்படவுள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். மேலும், கார்த்திகேயா, … Read more