சைமா விருதுகள் 2019 : தேர்வான 5 தமிழ் இசையமைப்பாளர்கள்.!

கடந்த 2019-ஆம் ஆண்டுக்கான சிறந்த இசையமைப்பாளர்கள் தேர்வான பட்டியலை சைமா வெளியிட்டுள்ளது.

சினிமாதுறையில், சினிமா துறையில் சிறந்து விளங்கும் இயக்குனர்கள், நடிகர், நடிகைகள், இசையமைப்பாளார்கள், துணை கதாபாத்திரங்களில் என அனைவருக்கும் சைமா விருதுகள் வருடம்தோறும் வழங்கப்படுகிறது. அந்தவகையில் கடந்த 2019-ஆம் ஆண்டுக்கான சிறந்த படங்கள், நடிகர் நடிகைகளின் பட்டியலில் தேர்வானாகவர்களின் பட்டியல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், அதைபோல் தற்போது கடந்த 2019-ஆம் ஆண்டுக்கான சிறந்த இசையமைப்பாளர்கள் தேர்வான பட்டியலை சைமா வெளியிட்டுள்ளது. இதில்  அனிருத் (பேட்ட) படத்திற்காகவும், டி இமான் (விஸ்வாசம்) படத்திற்காகவும், ஜிவி பிரகாஷ் ( அசுரன்) படத்திற்காகவும், ஏ ஆர் ரஹ்மான் (பிகில்)படத்திற்காகவும், யுவன் சங்கர் ராஜா ( பேரன்பு ) படத்திற்காகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சைமாவின் இணையதளத்தில் சென்று ரசிகர்களும், பொதுமக்களும் தங்களுக்கு விருப்பமான நடிகர்கள் இசையமைப்பாளர்களுக்கு வாக்களிக்கலாம். அதிகமான வாக்குகளை பெறும் இசையமைப்பாளருக்கு விருது வழங்கப்படும்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.