மருத்துவ கல்வி சேர்க்கையில் இந்த ஆண்டு கூடுதலாக 350 இடங்கள் பெறப்பட்டுள்ளது -அமைச்சர் விஜயபாஸ்கர்

மருத்துவ படிப்புகளுக்கான பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். இதன் பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், பிற மாநில மாணவர்கள் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்தவ கல்லூரிகளில் சேர்வதை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தற்போது தமிழகத்தில் 3,968 அரசு ஒதுக்கீட்டு இடங்களும் 852 நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களும் உள்ளது .மத்திய அரசின் ஒதுக்கீடாக 350 இடங்கள் இருக்கும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

இன்று முதல் அதிமுகவில் தொடர்ந்து செயல்படுவேன்-சட்டமன்ற உறுப்பினர் ரத்தினசபாபதி

இன்று முதல் அதிமுகவில் தொடர்ந்து செயல்படுவேன் என்று சட்டமன்ற உறுப்பினர் ரத்தினசபாபதி  தெரிவித்துள்ளார். ரத்தினசபாபதி உள்ளிட்ட 3 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.இன்று  அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ரத்தினசபாபதி முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்தார். தினகரன் ஆதரவாளர் என கருதப்பட்ட ரத்தினசபாபதி முதலமைச்சரை தலைமை செயலகத்தில் சந்தித்தார்.பின்னர் சபாநாயகர் தனபாலை சந்தித்தார். முதல்வர், சபாநாயகரை சந்தித்தபின்  சட்டமன்ற உறுப்பினர் ரத்தினசபாபதி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், தடுமாறிப்போய் இருந்த என்னை மீண்டும் அதிமுகவில் இணைத்த பெருமை அமைச்சர் விஜயபாஸ்கரைத்தான் சேரும். … Read more

நிதி ஆயோக் கணக்கீடு தவறானது-அமைச்சர் விஜயபாஸ்கர்

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது – தமிழகம் சுகாதாரத்துறையில் 3-வது இடத்திலிருந்து, 9-வது இடத்திற்கு சென்றது குறித்து பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார். நிதி ஆயோக் கணக்கீடு தவறானது . 99% தடுப்பூசி வழங்கி உள்ளோம். ஆனால் நிதி ஆயோக் 79% என தவறான கணக்கை கொடுத்துள்ளது. 20% பிரசவங்கள் வீட்டில் நடப்பதாக தவறான தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது .மத்திய அமைச்சருக்கு இதை சுட்டிக்காட்டி நேற்றே கடிதம் எழுதியுள்ளோம்.பட்டியலை மறுபரிசீலனை செய்ய நிதி ஆயோக் மற்றும் மத்திய அரசை … Read more

தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை -அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில்,மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்தை ஆய்வு செய்ய டெல்லி மற்றும் ஜப்பானில் இருந்து 8 பேர் கொண்ட தொழில் நுட்ப குழுவினர் வர உள்ளனர். தொழில்நுட்ப குழுவினர் 10-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை ஆய்வு செய்கின்றனர். தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை, இதே நிலை தொடர நடவடிக்கை எடுக்கப்படும் … Read more

நிபா வைரஸ் குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை – அமைச்சர் விஜயபாஸ்கர்

நிபா வைரஸ் குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று  அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சுகாதாரத்துறை  அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில்,தமிழகத்தில் நிபா வைரஸ் அறிகுறியுடன் இதுவரை யாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை, பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. அனைத்து அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நிபா சிறப்பு வார்டுகள் தொடங்கப்பட்டுள்ளது .அனைத்து மருந்துகளும் கையிருப்பில் உள்ளது. திருச்சி தனியார் மறுவாழ்வு மையத்தில் நடந்த சம்பவம் கண்டிக்கத்தக்கது, காப்பக உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகம் முழுவதும் … Read more

தமிழகத்தில் நிபா பரவாமல் தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை- அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் நிபா பரவாமல் தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கேரளாவில் நிபா வைரஸ் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், கேரள எல்லை ஓரம் இருக்கும் பகுதிகளை தீவிரமாக கண்காணிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனிடையே சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில்,தமிழகத்தில் நிபா பரவாமல் தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. நிபா வைரஸ் வௌவால்கள் மூலம் பரவுவதால் பழங்களை நன்கு கழுவி சாப்பிடவேண்டும் என்று … Read more

பன்றிக்காய்ச்சல் தடுக்க 20 லட்சம் மாத்திரைகள் இருப்பு……தயார் நிலையில் அரசு அமைச்சர்….!!!

பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்த  20 லட்சம் மாத்திரைகள் தயார் நிலையில் இருப்பதாகவும் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை  மற்றும் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் உள்ள காய்ச்சல் வார்டுகளில் அமைச்சர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெங்கு காய்ச்சலை தடுக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார் மற்றும் பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்த  20 லட்சம் மாத்திரைகள் தயார் நிலையில் இருப்பதாகவும் விஜயபாஸ்கர் தெரிவித்தார். தமிழ்நாடு மட்டுமல்லாமல் … Read more

“அரசு மருத்துவர் தனியாரில் பணியாற்ற தடை”இல்லை அமைச்சர்விஜயபாஸ்கர்..!!

அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள்தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிப்பதற்கு தடை இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்  தெரிவித்துள்ளார்.   இது குறித்து பேசிய அவர்தமிழகத்தில் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள், சிறப்பான பங்களிப்பை வழங்குவதால், அவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிப்பதற்கு தடை விதிக்கும் தேவை எழவில்லை மேலும் மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். DINASUVADU

“புதிய பதவி காட்டி கொடுக்காமல் இருக்க”..!சாடிய துரைமுருகன்..!!

தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கோவையில் பேட்டியளித்தார் அதில் குட்கா ஊழலில் தொடர்புடைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் பதவி கொடுக்கப்பட்டு உள்ளது. அது குறித்து உங்கள் கருத்து என்ன?என்று செய்தியாளர்கள் கேட்டனர். பதிலளித்த துரைமுருகன் பதவி கொடுக்க வில்லை என்றால் தங்களை காட்டிக்கொடுத்து விடுவார் என்ற பயத்தால்தான் அவருக்கு கட்சியில் இந்த பதவி வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் தமிழகத்தில் மின்தடை பற்றி பேசிய அவர் தமிழகத்தில் மின்தடையே இருக்காது என்று ஒரு அமைச்சர் சொல்லி … Read more

வானத்துல பறக்கும் 108- டும் இருக்கா..! நல்லா இருக்கு..!!ஆஸ்திரேலியாவில் அமைச்சர் விஜயபாஸ்கர்..!!

தமிழகத்தில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை  குறித்த தகவல் பரிமாற்றத்துக்காக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆஸ்திரேலியாவுக்கு அரசு முறைச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.சுகாதாரத்துறை சம்பந்தமான பல கோப்புகள் கையெழுத்தாகியுள்ளன. அந்நாட்டின் விக்டோரியா மகாணத்தில் விபத்துக்கால சிகிச்சை அமைப்பின் கீழ் செயல்பட்டு வரும் ஏர் ஆம்புலன்ஸ் சேவையை  விஜயபாஸ்கர் பார்வையிட்டார். ஹெலிகாப்டர் மற்றும் விமானங்கள் மூலமாக நோயாளிகளை  நேரத்தில் மருத்துவமனைகளுக்கு கொண்டு சேர்க்கும் ஏர் ஆம்புலன்ஸ் விமான சேவைப் பிரிவையும், … Read more