வேலூரில் இருந்து இன்று பிரிகிறது திருப்பத்தூர், ராணிப்பேட்டை..!

தமிழகத்தில் இருந்த மிகப்பெரிய மாவட்டமான வேலூரில் இருந்து  திருப்பத்தூர் , ராணிப்பேட்டை பிரிக்கப்பட்டு  மேலும் இரண்டு புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டு இந்த இரண்டு மாவட்டத்திற்கான மாவட்ட ஆட்சியர்கள் ,எஸ்.பிக்கள் நியமிக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக மாவட்டங்களில் நிர்வாக பணிகள் தொடங்கும் வகையில் இன்று தொடக்க விழா நடைபெறுகிறது. தமிழகத்தில் 35-வது மாவட்டமாக திருப்பத்தூரை அங்கு உள்ள டான்பாஸ்கோ மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் தொடக்க விழாவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கலந்து … Read more

சிறுமியை வன்கொடுமை செய்த முதியவருக்கு 10 ஆண்டு சிறை..!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்து உள்ள சேர்காடு பகுதியை சார்ந்த மோகன்தாஸ் (60|) பிஎஸ்என்எல் ஓய்வு பெற்ற ஊழியர்.இவர் கடந்த 2017-ம் பக்கத்து வீட்டு 5 வயது சிறுமிக்கு சாக்லேட் வாங்கி தருவதாக கூறி அழைத்து பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார். மேலும் வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது சொன்னால் கொலை செய்து விடுவதாக  மிரட்டியும் உள்ளார்.இதை தொடர்ந்து சிறுமியின் பெற்றோர்கள் காட்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் மோகன்தாஸை வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.இந்த … Read more

புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் ! பிரிக்கப்பட்ட தாலுகாக்கள் எவை ?

வேலூர்,காஞ்சிபுரம் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.அதன்படி இன்று தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அரசாணையில் வேலூர்,காஞ்சிபுரம் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்பட்டு, வேலூர்,திருப்பத்தூர்,ராணிப்பேட்டை என்று பிரிக்கப்பட்டுள்ளது. வேலூர் வருவாய் கோட்டங்கள் : வேலூர் குடியாத்தம் வேலூர் தாலுகாக்கள்: வேலூர் அணைக்கட்டு காட்பாடி குடியாத்தம் பேரணாம்பட்டு கே.வி.குப்பம் (புதிது)   திருப்பத்தூர் வருவாய் கோட்டங்கள் : திருப்பத்தூர் வாணியம்பாடி திருப்பத்தூர் தாலுகாக்கள் :  … Read more

புதிய மாவட்டங்கள்! அரசாணையை வெளியிட்ட தமிழக அரசு

தமிழகத்தில்  புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு. இதன்படி தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், வேலூரை பிரித்து வேலூர்,திருப்பத்தூர், ராணிப்பேட்டை என 3 புதிய மாவட்டங்களாகவும், நெல்லையை பிரித்து நெல்லை,தென்காசி என 2 மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது .காஞ்சிபுரத்தை பிரித்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது .இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இழப்பீடு வழங்கவில்லை – ஒரேநாளில் 10 அரசுப் பேருந்துகள் ஜப்தி

வேலூரில் இழப்பீடு வழங்காததால் 10 பேருந்துகளை ஜப்தி செய்துள்ளனர். கடந்த 1993-ஆம்  ஆண்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூரில்  கிரிஜாம்மாள் என்பரிடம் அரசு  போக்குவரத்து துறை 1 ஏக்கர் நிலத்தை வாங்கியது.ஆனால் இதற்கு உரிய இழப்பீட்டை போக்குவரத்துத்துறை வழங்கவில்லை.இதனைத்தொடர்ந்து கிரிஜாம்மாள் நீதிமன்றத்தை நாடினார்.இதில் இழப்பீடு தொகையாக ரூ.1.75 கோடி வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இழப்பீடு தொகையை வழங்காமல் போக்குவரத்துறை இழுத்தடித்தது.பின்பு பேருந்துகளை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.இந்தநிலையில் இன்று வேலூரில் உள்ள புதிய பேருந்து … Read more

வேலூரில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக நேற்று வானிலை மையம் அறிவித்தது .இதனைத்தொடர்ந்து மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க அரிபிக்கடலுக்கு செல்லவேண்டாம் எனவும் அறிவுத்தப்பட்டிருக்கிறது . இந்நிலையில் நேற்று முதல் தமிழகம் முழுவதும் பரவலாக மலை பெய்து வருகிறது  .வேலூரில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது .இதனால் வேலூரில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார் .

Breaking News : திருப்பத்தூர் , ராணிப்பேட்டை தனித்தனி மாவட்டமாக அறிவித்தார் -முதலமைச்சர் பழனிச்சாமி !

73 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று காலை ஜார்ஜ் கோட்டைக்கு வந்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி போலீசார் அணி வகுப்பை ஏற்றுக்கொண்டு.  முதல்வராக பதவியேற்று எடப்பாடி பழனிசாமி 3-வது முறையாக ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் கொடி ஏற்றினார். பின்னர் பேசிய முதலமைச்சர் ,வேலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டையை தனித்தனி மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது.இந்த 2 புதிய மாவட்டங்களையும் சேர்ந்து தமிழகத்தில் மொத்தமாக 37 மாவட்டங்களாக உயர்ந்து உள்ளது. மேலும் கே .வி … Read more

வேலூர் தேர்தலில்  திமுகவிற்கு வெற்றியும் இல்லை, அதிமுகவுக்கு தோல்வியும் இல்லை-அமைச்சர் கடம்பூர் ராஜூ

வேலூர் தேர்தலில்  திமுகவிற்கு வெற்றியும் இல்லை, அதிமுகவுக்கு தோல்வியும் இல்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த வேலூர் மக்களவை தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 485 340 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.8141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக கூட்டணி வேட்பாளர் சண்முகம் 477199 வாக்குகள் பெற்று  தோல்வியை தழுவினார். இந்த நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கோவில்பட்டியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், வேலூர் தேர்தலை பொறுத்த வரை … Read more

வேலூர் மக்களவை தேர்தலில் வெற்றி !ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற கதிர் ஆனந்த்

வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.இதற்கான வாக்கு எண்ணிக்கை பெற்று நடைபெற்றது.தொடக்க முதலே அதிமுக கூட்டணி வேட்பாளர் சண்முகம் முன்னிலை பெற்று வந்தார்.பின்னர் இருவரும் மாறி மாறி முன்னிலை வகித்து வந்தனர்.இறுதியாக திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்  485 340 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.8141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார் இந்த நிலையில் மக்களவை தேர்தலில் வேலூர் தொகுதியில் திமுக சார்பில் வெற்றி பெற்ற வேட்பாளர் கதிர் ஆனந்த் சென்னை அண்ணா அறிவாலயத்தில் … Read more

#BREAKING : இறுதிக்கட்ட வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து திமுக முன்னிலை

இன்று வேலூர் மக்களவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.வாக்கு எண்ணிக்கை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில்  திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்  முன்னிலையில் உள்ளார். வாக்கு எண்ணிக்கையின் முன்னிலை நிலவரம்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்                              –  4,83,099  வாக்குகள்  பெற்றுள்ளார். அதிமுக கூட்டணி  வேட்பாளர் ஏ.சி. சண்முகம்  –  4,75,395  வாக்குகள்  பெற்றுள்ளார். நாம் தமிழர் … Read more