#BREAKING: உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை வழங்கியது ஸ்வீடன் அரசு!

ராணுவ உதவிகளை ஸ்வீடன் அரசு வழங்கியது என்று உக்ரைன் அதிபர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஸ்வீடன் அரசு தங்களுக்கு ராணுவ உதவிகளை வழங்கியுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். தொழில்நுட்ப ரீதியிலான உதவிகளையும் ஸ்வீடன் அரசு செய்து கொடுத்துள்ளதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ரஷ்ய அதிபர் புடினுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைப்போம் என்றும் ஆவேசமாக குறிப்பிட்டுள்ளார். முன்னதாக நேட்டோ கூட்டமைப்பை சேர்ந்த நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்க நாங்கள் தயாராக … Read more

#BREAKING: தாக்குதலை நிறுத்தினால் உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் – ரஷ்யா அறிவிப்பு!

உக்ரைன் ராணுவம் சண்டையை நிறுத்தினால் நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயார் என ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் அறிவிப்பு. உக்ரைன் உடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் அறிவித்துள்ளார். உக்ரைனுடன் இரண்டாம் நாளாக ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில், உக்ரைன் ராணுவம் தாக்குதலை நிறுத்தினால் நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். உக்ரைனில் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய படைகள், உக்ரைன் … Read more

போருக்கு நடுவில் ரஷ்யாவிடம் காஷ்மீர் பிரச்னையை எழுப்பிய பாகிஸ்தான் பிரதமர்!

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து வரும் நிலையில், ரஷ்யாவிடம் காஷ்மீர் பிரச்னையை எழுப்பினார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் தனது அமைச்சரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளுடன் இரண்டு நாள் பயணமாக (பிப்ரவரி 23-24) ரஷ்யா சென்றார். 23 ஆண்டுகளில் பாகிஸ்தான் பிரதமர் ஒருவர் மாஸ்கோவிற்கு மேற்கொள்ளும் முதல் உத்தியோகபூர்வ பயணம் இதுவாகும். உக்ரைன் மீது போர் தொடுக்க அறிவித்ததை தொடர்ந்து, நேற்று மூன்று மணிநேர சந்திப்பு கிரெம்ளில் நடந்தது. இருதரப்பு உறவுகளை … Read more

#BREAKING: உச்சக்கட்டத்தில் போர் – கதிர்வீச்சு அளவு அதிகரிப்பு.. உக்ரைன் தலைநகரை நெருங்கும் ரஷ்யா!

செர்னோபில் அணுமின் நிலைய தளத்தில் இருந்து கதிர் வீச்சு அளவும் அதிகரித்துள்ளது என்று உக்ரைன் அணுசக்தி நிறுவனம் எச்சரிக்கை. உக்ரைனில் நேற்று அதிகாலை முதல் இன்று அதாவது தற்போது வரை தொடர்ந்து வான்வெளி மற்றும் நேரடி ராணுவ படைகள் மூலம் ரஷ்யா தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் உக்ரைன் மற்றும் ரஷ்ய ராணுவ வீரர்கள் ஏராளமானோர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தலைநகர் கீவில் இடைவிடாது ஏவுகணை தாக்குதல்கள் நடப்பதாகவும், பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் ரஷ்யா தொடர்ந்து … Read more

#BREAKING: இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் – ரஷ்ய அதிபர் புடின் உறுதி

உக்ரைனில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உறுதி அளித்துள்ளார். உக்ரைனில் இரண்டாவது நாள் இன்றும் தொடர்ந்து வான்வெளி மற்றும் நேரடி ராணுவ படைகள் மூலம் ரஷ்யா தாக்குதலை மேற்கொண்டு வருகிறது.  இந்த நிலையில், உக்ரைனிலுள்ள மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று ரஷ்ய அதிபர் புடின் உறுதியளித்துள்ளார். நேற்று இரவு தொலைபேசியில் பேசிய ரஷ்ய அதிபர், பிரதமர் மோடியுடம் உறுதியளித்துள்ள தகவலை தற்போது ரஷ்யாவே வெளியிட்டுள்ளது. … Read more

#BREAKING: தமிழக மாணவர்களின் செலவை அரசே ஏற்கும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்கள் தமிழ்நாடு திரும்புவதற்கான பயணச் செலவை தமிழ்நாடு அரசே ஏற்றுக் கொள்ளும் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு. உக்ரைனில் சிக்கியுள்ள தமிழ்நாட்டு மாணவர்கள் தாய் நாடு திரும்புவதற்கான செலவை அரசே ஏற்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரஷ்ய இராணுவம் உக்ரைன் நாட்டுக்குள் புகுந்து, இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் சூழ்நிலையில், தமிழ்நாட்டைச் சார்ந்த சுமார் 5,000 மாணவர்கள், பெரும்பாலும் தொழில்முறை கல்வி … Read more

உக்ரைன் – ரஷ்யா 2ம் நாள் போர் – நிதி உதவி அளிக்க தயார் என உலக வங்கி அறிவிப்பு!

உக்ரைனில் போர் பதற்றம் நிறைந்த சூழலில் உடனடி நிதி உதவி அளிக்க தயார் என உலக வங்கி அறிவித்துள்ளது. உக்ரைன் மீது போர் தொடுக்க நேற்று அதிகாலை ரஷ்ய அதிபர் புதின் உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து, பலமணிநேரமாக வான்வெளி தாக்குதல் நடத்தி வந்த ரஷ்யா, நேரடியாக ராணுவ படைகள் மூலம் தாக்குதலை மேற்கொண்டது. உக்ரைன் மீது இடைவிடாது தாக்குதல் நடத்தி வருவதால் உயிர் பிழைப்பதற்காக உக்ரைன் மக்கள் அங்குமிங்கும் அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. லுஹான்ஸ்க்கில் 2 நகரங்களை … Read more

தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களை விரைந்து மீட்க வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

உக்ரைன் நாட்டில் ரஷ்யா இராணுவம் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், அங்கு சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்கக்கோரி முதலமைச்சர் கடிதம். உக்ரைனில் சிக்கியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களை பாதுகாப்பாக மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், இன்று அதிகாலையில் ரஷ்யா, உக்ரைனுக்குள் புகுந்துள்ளது என்ற ஊடக செய்திகள் குறித்து வெளியுறவுத்துறை உடனடி கவனத்தை ஈர்க்க விழைவதாகவும். … Read more

#BREAKING: ரஷ்யா – உக்ரைன் போர் எதிரொலி – ராக்கெட் வேகத்தில் தங்கம் விலை உயர்வு!

உக்ரைன் – ரஷ்யா போரால் இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,240 அதிகரித்துள்ளது. உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி ரஷ்யா உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்த வரும் உலக பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்து வருகிறது. அந்தவகையில், இன்று காலை சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.864 உயர்ந்து, ரூ.38,616 க்கு விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.108 அதிகரித்து, … Read more

ரஷ்யாவுடனான உறவை துண்டித்தது உக்ரைன்!

தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ரஷ்யாவுடனான தூதரக ரீதியிலான உறவை துண்டித்தது.  உக்ரைன் மீது போர் தொடுக்க இன்று காலை ரஷ்ய அதிபர் புடின் உத்தரவு பிறப்பித்ததை அடுத்து, வான்வெளி மற்றும் நேரடியான ராணுவ தாக்குதல் என இரண்டிலும் தற்போது ரஷ்யா ஈடுபட்டு வருகிறது. பல மணிநேரமாக இடைவிடாத தாக்குதலை ரஷ்யா நடத்தி வருகிறது. இதில் 100க்கும் மேற்பட்ட வீரர்கள், 10க்கும் மேற்பட்ட பொதுமக்கள் என உயிரிழந்ததாக கூறப்படுகிறது. உக்ரைனில் உள்ள 2 நகரங்களையும் கைப்பற்றியதாக ரஷ்யா … Read more