தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களை விரைந்து மீட்க வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

உக்ரைன் நாட்டில் ரஷ்யா இராணுவம் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், அங்கு சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்கக்கோரி முதலமைச்சர் கடிதம்.

உக்ரைனில் சிக்கியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களை பாதுகாப்பாக மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், இன்று அதிகாலையில் ரஷ்யா, உக்ரைனுக்குள் புகுந்துள்ளது என்ற ஊடக செய்திகள் குறித்து வெளியுறவுத்துறை உடனடி கவனத்தை ஈர்க்க விழைவதாகவும். தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழில்முறை படிப்புகள் பயிலும் சுமார் 5,000 மாணவர்கள் மற்றும் தமிழ்நாட்டில் இருந்து குடியேறியவர்கள் உக்ரைனில் சிக்கித் தவித்து வருகிறார்கள்.

உக்ரைனில் உள்ள தமிழக மாணவர்களை சிறப்பு விமானம் மூலம் மீட்க வேண்டும். வந்தே பாரத் மிஷன் போன்ற சிறப்பு விமானங்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு 24 மணி நேர உதவி மையத்தை திறந்துள்ளது. உக்ரைனில் உள்ள தமிழர்களின் குடும்பங்களை மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைக்க சிறப்பு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார்கள். தமிழ்நாட்டுக்கென ஓர் இணைப்பு அலுவலரை இந்திய அரசு நியமிக்க பரிந்துரைக்கிறேன் என்றும் வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்