#BREAKING: தாக்குதலை நிறுத்தினால் உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் – ரஷ்யா அறிவிப்பு!

உக்ரைன் ராணுவம் சண்டையை நிறுத்தினால் நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயார் என ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் அறிவிப்பு.

உக்ரைன் உடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் அறிவித்துள்ளார். உக்ரைனுடன் இரண்டாம் நாளாக ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில், உக்ரைன் ராணுவம் தாக்குதலை நிறுத்தினால் நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய படைகள், உக்ரைன் தலைநகர் கீவ்-வை நெருங்கி வருகிறது. அங்கு ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. அச்சம் காரணமாக ஏராளமானோர் அண்டை நாடுகளுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர்.

நேற்று முழுவதும் உக்ரைனில் கிழக்கு பகுதிகளில் உள்ள ராணுவ தளங்கள், விமான தளங்களை துல்லியமாக குறிவைத்து ரஷ்ய விமானப்படை குண்டுகளை வீசியது. இன்று காலை முதல் தலைநகர் கீவ்-இல் இருக்கக்கூடிய ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி ரஷ்ய படைகள் முன்னேறி வருகிறது. இந்த தாக்குதலுக்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்து வரும் சூழலில், தற்போது உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.