அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றம்… இந்தியர்களுக்கு 3ஆம் இடம்.!

illegal immigrants

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் எண்ணிக்கையில் இந்தியர்கள் மூன்றாவது இடத்தில் உள்ளனர் என்றும் சுமார் 7,25,000 இந்தியர்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறி வசித்து வருவதாகவும் பியூ ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில் கண்டறிந்துள்ளது. இதுதொடா்பாக அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள ‘ப்யூ’ ஆய்வு ஆராய்ச்சி மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், அமெரிக்காவில் 6.4 மில்லியன் (64 லட்சம்) பேர் சட்டவிரோதமாக குடியேறியுள்ளனர். இதில், இந்தியர்கள் மட்டும் 7,25,000 பேர் சட்டவிரோதமாக குடியேறி அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். சட்டவிரோத குடியேற்றத்தில் இந்தியர்கள் … Read more

கத்தாரில் 8 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிப்பு – இந்தியா அதிர்ச்சி!

death penalty

கத்தாரில் கைது செய்யப்பட்டு, காவலில் உள்ள 8 இந்தியர்கள் வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது. இந்திய கடற்படையில் பணியாற்றி ஓய்வுபெற்ற 8 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கு உளவு பார்த்த புகாரில் கைதான 8 இந்தியர்களுக்கு மரண தண்டனையை கத்தார் நீதிமன்றம் விதித்துள்ளது. 8 இந்தியர்களும் பணி புரிந்த நிறுவனம் நீர்முழ்கி கப்பல்கள் தொடர்பான திட்டத்தில் இணைந்திருந்தது. உளவு பார்த்ததாக குற்றச்சாட்டப்பட்டுள்ள 8 இந்தியர்களும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் தனிமை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சமயத்தில், … Read more

இந்தியர்களுக்கு 3,000 இங்கிலாந்து விசாக்களை வழங்க ரிஷி சுனக் ஒப்புதல்!

G20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியை சந்தித்த பிறகு இந்தியர்களுக்கு 3,000 இங்கிலாந்து விசாக்களை வழங்க ரிஷி சுனக் ஒப்புதல். G20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியை சந்தித்த பிறகு இந்தியர்களுக்கு 3,000 இங்கிலாந்து விசாக்களை வழங்க அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக் ஒப்புதல் அளித்துள்ளார். இந்தோனேசியாவிலுள்ள பாலியில் ஆஸ்திரேலியா, இந்தியா, பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா உள்ளிட்ட 20 நாடுகளை கொண்ட ஜி20 மாநாடு நடைபெற்று வருகிறது. ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, மூன்று … Read more

பாகிஸ்தானுக்கு உயர்கல்வி பயில செல்ல வேண்டாம் – UGC & AICTE கூட்டறிக்கை!

பாகிஸ்தானில் உயர்கல்வி படித்தால், இந்தியாவில் வேலைவாய்ப்பு பெறவோ, படிப்பைத் தொடரவோ முடியாது. இதுதொடர்பாக UGC & AICTE வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், உயர் கல்வியைத் தொடர பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இதனால், பாக்கிஸ்தானின் எந்தவொரு பட்டப்படிப்பு கல்லூரி/கல்வி நிறுவனத்தில் சேர்க்கை பெற விரும்பும் எந்தவொரு இந்தியரும் மற்றும் இந்தியாவின் வெளிநாட்டுக் குடிமகனும், பாகிஸ்தானில் பெற்ற கல்வித் தகுதிகளின் அடிப்படையில் (எந்தப் பாடத்திலும்) இந்தியாவில் வேலை வாய்ப்பு பெறவோ அல்லது உயர்கல்வி படிப்பை தொடரவோ தகுதி பெற … Read more

#BREAKING: உக்ரைனில் உள்ள இந்தியர்கள் அனைவரும் வெளியேறுக – தூதரகம் திடீர் அறிவிப்பு

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற அங்குள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. மனிதாபிமான அடிப்படையில் வெளியேற கொடுக்கப்பட்டுள்ள அவகாசத்தை உக்ரைனில் உள்ள இந்தியர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. ரயில் உள்ளிட்ட எதாவது, ஒரு போக்குவரத்து சேவையை பயன்படுத்தி இந்தியர்கள் அனைவரும் வெளியேறுங்க என்றும் இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வந்த நிலையில், போர் பகுதிகளில் இருந்து மக்கள் பாதுகாப்பாக மீட்க, மனிதாபிமான அடிப்படையில் உக்ரைனில் … Read more

இந்தியர்களுக்கு உதவ மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கோரிக்கை!

உக்ரைன் எல்லையில் உள்ள இந்தியர்களுக்கு உதவ மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கோரிக்கை. ரஷ்யா – உக்ரைன் இடையே இடைவிடாத போர் நடந்து வரும் நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. அதன்படி, ஆபரேஷன் கங்கா திட்டத்தின் மூலம் ருமேனியாவில் இருந்து விமானம் மூலம் இந்தியர்களை மீட்டு வருகின்றனர். அந்த வகையில், ஹங்கேரியின் புடாபெஸ்டில் இருந்து 240 இந்தியர்கள் மூன்றாவது விமானத்தில் இன்று காலை மும்பை வந்தனர். ருமேனியாவில் இருந்து … Read more

உக்ரைனில் இருந்து தமிழ்நாடு மாணவர்கள் 16 பேர் மீட்பு!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், உக்ரைனில் இருந்து 16 தமிழர்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். உக்ரைனில் சிக்கி இருந்த தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் 16 பேர் மீட்கப்பட்டுள்ளனர். உக்ரைனில் இருந்து ஹங்கேரி, ருமேனியா வந்த தமிழ்நாட்டை 17 மாணவர்கள் இந்தியா அழைத்து வரப்படுகின்றனர். ருமேனியாவில் இருந்து 5 மாணவர்களும், ஹங்கேரியில் இருந்து 11 மாணவர்களும் விமானம் மூலம் டெல்லி அழைத்துவரப்படுகின்றனர். உக்ரைனில் இருந்து டெல்லி மற்றும் மும்பைக்கு விமானத்தில் வந்துசேரும் 16 மாணவர்களை தமிழகம் அழைத்துவர … Read more

#BREAKING: இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் – ரஷ்ய அதிபர் புடின் உறுதி

உக்ரைனில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உறுதி அளித்துள்ளார். உக்ரைனில் இரண்டாவது நாள் இன்றும் தொடர்ந்து வான்வெளி மற்றும் நேரடி ராணுவ படைகள் மூலம் ரஷ்யா தாக்குதலை மேற்கொண்டு வருகிறது.  இந்த நிலையில், உக்ரைனிலுள்ள மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று ரஷ்ய அதிபர் புடின் உறுதியளித்துள்ளார். நேற்று இரவு தொலைபேசியில் பேசிய ரஷ்ய அதிபர், பிரதமர் மோடியுடம் உறுதியளித்துள்ள தகவலை தற்போது ரஷ்யாவே வெளியிட்டுள்ளது. … Read more

பண்டோரா ஆவணம் : வெளிநாடுகளில் சொத்துக்களை குவித்த இந்தியர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர்!

பண்டோரா பேப்பர்ஸ் எனும் ஆவணம் வெளியாகியுள்ள நிலையில், வெளிநாடுகளில் சொத்துக்களை குவித்த 300 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கரும் இடம் பெற்றுள்ளார். உலக அளவில் வெளிநாடுகளில் சொத்து வாங்கி குவித்தவர்கள் குறித்து கடந்த 2015 ஆம் ஆண்டு பனாமா பேப்பர்ஸ் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போதும் பண்டோரா பபர்ஸ் எனும் ஆவணம் வெளியாகியுள்ளது. சர்வதேச புலனாய்வு பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு மூலம் இந்த ஆவணத்தில் உள்ள பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நிதி வழங்கும் 14 … Read more

#BREAKING : ஆப்கானிஸ்தானில் 150-க்கும் மேற்பட்ட இந்தியர்களை தலிபான்கள் கடத்தியதாக தகவல்…!

ஆப்கானிஸ்தானில் 150-க்கும் மேற்பட்ட இந்தியர்களை, தலிபான்கள் கடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை பிடித்தது முதல் அங்கிருந்து இந்தியர்களை மீட்கும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தியர்கள் மட்டுமல்லாது, மற்ற நாட்டினரும் அங்கிருந்து தப்பிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் 150-க்கும் மேற்பட்ட இந்தியர்களை, தலிபான்கள் கடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. காபூல் விமான நிலையம் அருகே காத்திருந்த இந்தியர்களை, நேற்று நள்ளிரவு 1 மணியளவில் தலிபான்கள் கடத்தியதாக ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஆனால், ஆப்கானிஸ்தான் … Read more