குட்நியூஸ்…இனி 5 வயதுக்குட்பட குழந்தைகளுக்கு இலவச பயணம்;உடனே அமல் – தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் முதல்வர் ஸ்டாலின், 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.அதில்,அனைத்து மகளிருக்கும் சாதாரண கட்டண நகரப்பேருந்துகளில் இலவச பயணம் என்பதும் ஒன்று.அதன்படி,நகர பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.இதனையடுத்து,பெண்களை தொடர்ந்து திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவரது உதவியாளர்களும் நகரப்பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம் எனவும் முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார். இதனிடையே,கடந்த மே 5 ஆம் தேதி,தமிழக சட்டப்பேரவையில் போக்குவரத்துத்துறையின் மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு பிறகு பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர்:” 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் அனைத்து வகை … Read more

38 ஆண்டுகளுக்குப் பிறகு…கலைஞர் சிலை இன்று திறப்பு – தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் மடல்!

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலையை,துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு இன்று திறந்து வைக்கிறார். சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் ரூ.1.17 கோடி செலவில் சுமார் 16 அடி உயரத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களுக்கு சிலை அமைக்கப்பட்டுள்ள நிலையில், கருணாநிதி சிலையை துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு திறந்து  வைக்கிறார்.இந்த நிகழ்வு இன்று (28-ஆம் தேதி) மாலை 5.30 மணியளவில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் … Read more

#Breaking:10 புதிய பாடத்திட்டங்கள்;பழைய செமஸ்டர் கட்டணங்களே வசூல் – அமைச்சர் பொன்முடி முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் பாலிடெக்னிக் மாணவர்கள் சேர்க்கைக்கான அட்டவனையை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டுள்ளார்.மேலும்,இது தொடர்பாக,செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கூறியதாவது: “தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர ஜூலை 1 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.மேலும்,புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 13 பாலிடெக்னிக் கல்லூரிகளில் இந்த ஆண்டு 10 புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும். நீட் தேர்வுக்கு பின்னரே பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெறும்.இது தொடர்பான அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும். பொறியியல் கலந்தாய்வு ஆன்லைன் மூலமாகவே நடைபெறும்.பொறியியல் கல்லூரிகளில் பழைய செமஸ்டர் கட்டணங்களே … Read more

38 ஆண்டுகளுக்குப் பிறகு…”சரித்திரத்தில் தனக்கான இடம்” – தொண்டர்களுக்கு முதல்வர் மடல்!

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலையை,துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு நாளை திறந்து வைக்கிறார். சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் ரூ.1.17 கோடி செலவில் சுமார் 16 அடி உயரத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களுக்கு சிலை அமைக்கப்பட்டுள்ள நிலையில், கருணாநிதி சிலையை துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு திறந்து  வைக்கிறார்.இந்த நிகழ்வு நாளை (28-ஆம் தேதி) மாலை 5.30 மணியளவில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் … Read more

#Breaking:சற்று முன்…அதிகரிக்கும் கொரோனா தீவிர கண்காணிப்பு தேவை – மரு.செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை!

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.இந்நிலையில்,மகாராஷ்டிரா,கேரளா, டெல்லி ஆகிய மாநிலங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுக்க தீவிர கண்காணிப்பு மற்றும் எச்சரிக்கை தேவை என மாவட்ட ஆட்சியாளர்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில்,”கல்வி நிறுவனத்தின் கூட்டு பரவலைத் தொடர்ந்து,திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலமாகவும் கொரோனா பரவுகிறது.அந்த வகையில் செங்கல்பட்டு,திருவள்ளூர்,காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் கொரோனா பரவல் உள்ளது.இதனால்,சென்னையில் அடையாறு,அண்ணாநகர்,பெருங்குடி, கோடம்பாக்கம் … Read more

#Breaking:உடலுக்கு கேடு…இதற்கு மேலும் ஓராண்டு தடை – தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!

உடலுக்கு கேடு விளைவிக்கும் குட்கா,பான் மசாலா,புகையிலைப் பொருட்களுக்கான தடையை மேலும் ஓராண்டு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.ஏற்கனவே விதிக்கப்பட்ட தடைகள் மே 23 ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்த நிலையில்,தற்போது குட்கா,பான் மசாலா,புகையிலைப் பொருட்கள் தயாரித்தல்,விநியோகித்தல் ஆகியவற்றுக்கு மேலும் ஓராண்டு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே,தமிழகத்தில் குட்கா,பான் மசாலா,புகையிலைப் பொருட்களுக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு முதலே தடை விதிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.      

பிரதமரை மேடையில் வைத்து முதல்வர் ஸ்டாலின் கேட்ட முக்கிய கோரிக்கைகள்!

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் முதல் முறையாக பிரதமர் மோடி நேற்று தமிழகம் வந்தார்.அவருக்கு விமான நிலையத்தில்,அமைச்சர்கள் துரைமுருகன்,கே.என்.நேரு. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வரவேற்பளித்தனர்.அதனை தொடர்ந்து,விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐ.என்.எஸ்.அடையாறு தளம் வந்தடைந்த பிரதமர் மோடியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வரவேற்றார். இதனை தொடர்ந்து சாலை மார்க்கமாக பிரதமர் மோடி, நிகழ்ச்சி நடக்கும் நேரு ஸ்டேடியத்திற்கு வந்தடைந்தார்.இந்த நிகழ்ச்சி மேடையில்,பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின்,ஆளுநர் ஆர்.என்.ரவி அமர்ந்தனர்.இதனையடுத்து,ரூ.31,500 கோடி மதிப்புள்ள … Read more

#Justnow:இளைஞர் திறன் திருவிழா – இன்று தொடங்கி வைக்கும் முதல்வர் ஸ்டாலின்!

சென்னையில் இன்று (மே 25-ஆம் தேதி) இளைஞர் திறன் திருவிழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைக்கிறார்.அதிக வேலைவாய்ப்பு உள்ள தொழில்களை இளைஞர்கள் அறிந்துகொள்ளும் வகையில் இளைஞர் திறன் திருவிழா நடத்தப்படுகிறது. மேலும்,திறன் மேம்பாடு குறித்து விழிப்புணர்வு மற்றும் தகவல்களை பெற உதவும் வகையிலும் திருவிழா நடத்தப்படுகிறது என தகவல் தெரிவிக்கப்படுகிறது.இத்திருவிழாவானது மாநிலத்தின் 388 வட்டாரங்களிலும் ஊரக வளர்ச்சி மற்றும் தொழிலாளர்கள் நலன் – திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் நடத்திடும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னை ராணி … Read more

‘கல்பனா சாவ்லா’ விருது – தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு

2022-ம் ஆண்டு வழங்கப்படவுள்ள ‘கல்பனா சாவ்லா’ விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என தமிழ்நாடு அரசு அறிவிப்பு. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், துணிவு மற்றும் வீர சாகசச் செயல்களுக்கான “கல்பனா சாவ்லா விருது” ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதலமைச்சர் அவர்களால், சுதந்திரதின விழாவின்போது வழங்கப்படுகிறது. இந்த விருதில், ரூ.5 லட்சத்திற்கான வரைவு காசோலை, சான்றிதழ் மற்றும் பதக்கம் அடங்கும். தமிழ்நாட்டைச் சேர்ந்த துணிச்சலான மற்றும் வீர சாகசச் செயல் புரிந்த பெண் விண்ணப்பதாரர் மட்டுமே இவ்விருதினைப் பெறத் தகுதியுள்ளவர். … Read more

#Monkeypox: குரங்கு காய்ச்சல் – தமிழக மருத்துவத் துறை செயலர் கடிதம்!

குரங்கு அம்மை பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழக மருத்துவத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம். உலக நாடுகளில் கொரோனா தொற்று அச்சுறுத்தல் ஏற்படுத்தி வரும் நிலையில், மறுபக்கம் மேற்கத்திய நாடுகளில் புதிதாக மங்கி பாக்ஸ் என அழைக்கப்படும் குரங்கு அம்மை பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, போர்ச்சுக்கல், ஸ்பெயின், சுவீடன், இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா உள்ளிட்ட 12 நாடுகளில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை பரவியுள்ளதாக உலக … Read more