மகளீர் இலவச பேருந்து – இந்த செய்தி வதந்தி : அமைச்சர் சிவசங்கர்

மகளிர் இலவச பேருந்தில் விருப்பப்பட்டால் கட்டணம் என்பது ‘வதந்தி’ என அமைச்சர் சிவசங்கர் ட்வீட்.  அமைச்சர் பொன்முடி, ஒரு மேடையில் ஓசியில் பெண்கள் பேருந்தில் பயணம் செய்வதாக கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனை தொடர்ந்து மூதாட்டி ஒருவர், நான் இலவசமாக பயணம் செய்யமாட்டேன். பணம் கொடுத்து தான் பயணம் செய்வேன் என கூறி நடத்துனரிடம் வாக்குவாதம் செய்த வீடியோ இணையத்தில் வைரலானது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், … Read more

‘MK பாரதி… MK ஸ்டாலின்’ – இன்றிலிருந்து ஒவ்வொரு குழந்தைக்கு இரண்டு தாய் – அமைச்சர் அன்பில் மகேஷ்

ஒவ்வொரு குழந்தைக்கும் உணவளித்து புது ஜகத்தினை உருவாக்குவோம் என்று செய்துகாட்டுபவர் MK ஸ்டாலின் என அமைச்சர் அன்பில் மகேஷ் புகழாரம்.  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மதுரை ஆதிமூலம் பிள்ளை தெருவில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை அழித்திடுவோம் என்றார் MK பாரதி….மகாகவி பாரதி… ஒவ்வொரு … Read more

அரசு திட்டத்தின் பிளஸ், மைனஸை ஆராய்ந்து அரசுக்கு சொல்ல வேண்டும் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

அனைத்து மாவட்ட வளர்ச்சியை திராவிட நாடு கொள்கையின் முக்கியமான குறிக்கோள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு.  சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள திட்டக் குழு அலுவலகத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மாநில திட்டக் குழுவின் 3-வது ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், குழுவின் துணைத் தலைவர் பேராசிரியர் ஜெயரஞ்சன், முழுநேர, பகுதி நேர உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர். இக்கூட்டத்தில், இலக்கு நிர்ணயிப்பது, கண்காணிப்பு, மதிப்பீடு, கொள்கைக்கான ஆலோசனை வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது பேசிய அவர், … Read more

முழுமையான பிங்க் நிறமாக மாறும் பெண்களுக்கான அரசு பேருந்துகள்…!

பெண்கள் இலவசமாக பயணிக்கும் பேருந்துகள் முழுவதுமாக பிங்க் நிறத்திற்கு மாற்றம்.  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தில் பெண்கள் கட்டணம் இல்லாமல் இலவசமாக பேருந்தில் பயணிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதனை தொடர்ந்து பெண்கள் இலவசமாக பயணித்து வந்த நிலையில், தமிழகத்தில் கட்டணப் பேருந்தா அல்லது இலவச பேருந்தா என்பதை அறிந்து கொள்ளும் வகையில் மகளிர் இலவசமாக பயணிக்கும் பேருந்துகளை பிங்க் நிறத்தில் வண்ணம் பூசி முதல் கட்டமாக 60 பேருந்துகள் நடைமுறைக்கு வந்தது. இந்த பேருந்துகளின் முன்பக்கம் … Read more

செஸ் ஒலிம்பியாட் – சென்னை to மாமல்லபுரம் வரை இலவச பேருந்து..!

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம், சென்னை முதல் மாமல்லபுரம் வரை இலவச பேருந்துகளை இயக்க உள்ளது சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் மாமல்லபுரத்தில் ஒருபுறம் தீவிரமாக நடைபெற்று வரும் … Read more

குட்நியூஸ்…இனி 5 வயதுக்குட்பட குழந்தைகளுக்கு இலவச பயணம்;உடனே அமல் – தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் முதல்வர் ஸ்டாலின், 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.அதில்,அனைத்து மகளிருக்கும் சாதாரண கட்டண நகரப்பேருந்துகளில் இலவச பயணம் என்பதும் ஒன்று.அதன்படி,நகர பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.இதனையடுத்து,பெண்களை தொடர்ந்து திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவரது உதவியாளர்களும் நகரப்பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம் எனவும் முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார். இதனிடையே,கடந்த மே 5 ஆம் தேதி,தமிழக சட்டப்பேரவையில் போக்குவரத்துத்துறையின் மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு பிறகு பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர்:” 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் அனைத்து வகை … Read more