#Breaking:10 புதிய பாடத்திட்டங்கள்;பழைய செமஸ்டர் கட்டணங்களே வசூல் – அமைச்சர் பொன்முடி முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் பாலிடெக்னிக் மாணவர்கள் சேர்க்கைக்கான அட்டவனையை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டுள்ளார்.மேலும்,இது தொடர்பாக,செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கூறியதாவது:

“தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர ஜூலை 1 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.மேலும்,புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 13 பாலிடெக்னிக் கல்லூரிகளில் இந்த ஆண்டு 10 புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்.

நீட் தேர்வுக்கு பின்னரே பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெறும்.இது தொடர்பான அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும். பொறியியல் கலந்தாய்வு ஆன்லைன் மூலமாகவே நடைபெறும்.பொறியியல் கல்லூரிகளில் பழைய செமஸ்டர் கட்டணங்களே வசூலிக்கப்படும்.AICET யின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை “,என்று தெரிவித்துள்ளார்.

மேலும்,பேசிய அமைச்சர்:”நீட் தேர்வுக்கு விலக்கு வேண்டும் என்று பிரதமரிடம் நேரில் எடுத்துரைத்த ஒரே முதல்வர் ஸ்டாலின் அவர்கள்தான். மேலும்,தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கை ஏற்றுக்கொள்ளப்படாது, தமிழகத்தில் அதற்கு இடமில்லை.மாறாக,மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்க முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார்”,என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment