#Breaking:இன்று 16 மாவட்டங்களில் மிரட்டப் போகும் கனமழை – வானிலை மையம் எச்சரிக்கை!

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதன்படி,கள்ளக்குறிச்சி,பெரம்பலூர்,அரியலூர், கடலூர், திருச்சிராப்பள்ளி, சேலம், நாமக்கல், நீலகிரி,கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் டெல்டா (தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை) மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும்,தமிழ்நாடு,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அடித்த நான்கு நாட்களுக்கு இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.

சென்னை நகரம் மற்றும் சுற்றுப்புறத்திற்கான உள்ளூர் முன்னறிவிப்பு:

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 39°C மற்றும் 29°C ஆக இருக்கும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.

Leave a Comment