சென்னை மாவட்டத்தை விரிவாக்கும் பணி துவக்கம்…!!

காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள கிராமங்களை சென்னை மாநகராட்சியுடன் இணைக்க திட்டம் துவங்கியுள்ளது. காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் 67 வருவாய் கிராமங்களைச் சேர்த்து 122 வருவாய் கிராமங்களுடன் சென்னை மாவட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அரசு செய்திக்குறிப்பில் வடசென்னை, மத்தியசென்னை, தென்சென்னை ஆகிய 3 வருவாய் கோட்டங்கள் 16 வட்டங்களை உள்ளடக்கி சென்னை மாவட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தற்போது சென்னையிலுள்ள 57 இடங்களுடன் மேலும் 67 கிராமங்கள் இணைக்கப்பட்டு விரிவாக்கப்பட்டுள்ளன. இந்தத் … Read more

2018ஆம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டை துவங்கி வைத்த அமைச்சர் விஜயபாஸ்கர்…!

  இந்த 2018ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை தச்சங்குறிச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.இங்கு நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சுமார் 300க்கும் மேற்பட்ட காளைகள், அப்போட்டியில் சுமார் 100க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். முதலமைச்சர் அறிவுரையின்படி தமிழகத்தில் இந்தாண்டு தடையின்றி ஜல்லிக்கட்டு நடைபெறும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

பொதுமக்கள் கருத்து தெரிவிக்க கால அவகாசத்தை நீட்டிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை…!

உள்ளாட்சி அமைப்புகளின் பொறுப்புகளுக்கான புதிய வரைவுப்பட்டியல் குறித்து, பொதுமக்கள் கருத்து தெரிவிக்க கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தி வருகிறார்.  

புத்தாண்டையொட்டி சென்னையில் 51 இடங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவை தயார் நிலையில் நிறுத்தப்படும்

புத்தாண்டையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் 51 இடங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவை தயார் நிலையில் நிறுத்தப்படும் என முன்னெச்சரிக்கை நிகழ்சிகளை ஏற்பாடு செய்துள்ளார் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

மதுபானங்களை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்வதை தடுக்க உத்தரவிடக் கோரி வழக்கு…!

தமிழகத்தில் உள்ள அரசு மதுபானக்கடைகளில் மதுபானங்களை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்வதை தடுக்க உத்தரவிடக் கோரி வழக்கு ஜனவரி 5 ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.