ஓய்வூதியதாரர்களுக்கு 14 % அகவிலைப்படி உயர்வு – ஓபிஎஸ் முக்கிய வேண்டுகோள்!

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியதாரர்களுக்கு கடந்த ஜனவரி 1,2022 முதல் வழங்க வேண்டிய 14% அகவிலைப்படியை உடனடியாக வழங்கிட வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.மேலும், இதுதொடர்பாக,தனது அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: ஆட்சிக்கு முன்பு அளித்த வாக்குறுதி: “தி.மு.க. அரசு ஆட்சிக் கட்டிலில் அமருவதற்கு முன்பு “பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும்”, “அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றுவோருக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்”, “80 வயதுக்கு மேல் … Read more

மே 25ல் இளைஞர் திறன் திருவிழாவை துவக்கி வைக்கும் முதலமைச்சர்!

சென்னையில் மே 25-ஆம் தேதி இளைஞர் திறன் திருவிழாவை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடக்கி வைக்கிறார். அதிக வேலைவாய்ப்பு உள்ள தொழில்களை இளைஞர்கள் அறிந்துகொள்ளும் வகையில் இளைஞர் திறன் திருவிழா நடத்தப்படுகிறது. திறன் மேம்பாடு குறித்து விழிப்புணர்வு மற்றும் தகவல்களை பெற உதவும் வகையிலும் திருவிழா நடத்தப்படுகிறது என தகவல் தெரிவிக்கப்படுகிறது. சென்னை ராணி மேரி கல்லூரியில் நடைபெறும் விழாவில் அமைச்சர் கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடப்படுகிறது.

விவசாயிகளுக்கு நற்செய்தி…முதல் முறை;மேட்டூர் to கடைமடை – திறந்து வைக்கும் முதல்வர் ஸ்டாலின்!

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து நாளை (24-ஆம் தேதி) தண்ணீர் திறக்கப்படும் என்று முதல்வர் அறிவிப்பு. சேலம் மாவட்டம் மேட்டூர் அணை ஜூன் 12-ஆம் தேதிக்கு பதில் இந்த ஆண்டு முன்கூட்டியே நாளை (மே 24-ஆம் தேதி) திறக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து நாளை செவ்வாய்க்கிழமை அன்று தண்ணீர் திறக்கப்படும் என்று அறிவித்துள்ளது விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் அமைந்துள்ளது.முதல் முறையாக கோடை காலத்தில் டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் … Read more

குட்நியூஸ்…இனி இவர்களுக்கும் 6 மாதம் மகப்பேறு விடுப்பு;ஊதிய உயர்வு – அமைச்சர் மா.சுப்பிரமணியன் முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கடந்த ஆண்டு ஜூலை 1 முதல் மகப்பேறு விடுப்புக்கான கால அளவவானது தேர்தல் அறிக்கையில் கூறியவாறு 1 வருடமாக உயர்த்தப்பட்டது.இந்த விடுப்பை பிரசவத்துக்கு முன்,பின் என பிரித்து அரசு ஊழியர்கள் எடுத்துக் கொள்ளவும்,விடுப்பு சமயத்தில் அவர்களுக்கு முழு சம்பளம் வழங்கவும் அனுமதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து,அரசு ஊழியர்களுக்கு குழந்தை பிறந்தவுடன் இறந்தாலும்,குழந்தை பிறந்து சிறிது காலம் கழித்து இறந்து விட்டாலும் அவர்களுக்கும் 365 நாட்களுக்கு மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும் என தமிழக அரசு … Read more

நியமன உத்தரவு.. தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

நியமன உத்தரவுகள் இல்லாமல் தமிழக கோவில்களில் சட்டவிரோதமாக செயல் அலுவலர்களாக பணியில் உள்ளவர்களை நீக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணையின்போது, நியமன உத்தரவுகள் இல்லாமல் தமிழக கோவில்களில் சட்டவிரோதமாக செயல் அலுவலர்களாக பணியில் உள்ளவர்களை நீக்க கோரிய வழக்கில் 8 வாரங்களில் தமிழக அரசு, அறநிலையத்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அமைச்சர் எடுத்த அதிரடி நடவடிக்கை.. 2 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்!

குடும்ப அட்டைகளில் இருந்த 12 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன என அமைச்சர் சக்கரபாணி தகவல். கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய உணவு மற்றும் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி, தமிழகத்தில் 2 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கப்பட்டுள்ளது. இதுபோன்று உயிரிழந்த பிறகும் குடும்ப அட்டைகளில் இருந்த 12 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. புதிய குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு 15 நாட்களில் புதிய அட்டை வழங்கப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் 7 ஆயிரம் ரேஷன் கடைகள் வாடகைக் கட்டிடத்தில் … Read more

திமுகவினர் திருந்தவே இல்லை – டிடிவி தினகரன்

திமுகவினர் திருந்தவே இல்லை என ஓராண்டு திமுக ஆட்சி குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சனம். திருவண்ணாமலையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழகத்தில் மறுபடியும் மின்தடை நிகழ்ந்து வருகிறது. விடியல் ஆட்சியில் இருந்த தமிழகம்தான் உருவாகியுள்ளது. திமுகவினர் திருந்தவே இல்லை என ஓராண்டு திமுக ஆட்சி குறித்து விமரித்தார். அம்மா கொண்டுவந்த திட்டங்கள் எதுவும் இல்லை. தாலிக்கு தங்கம் திட்டம் இல்லை, அம்மா உணவகங்கள் மூடப்பட்டு … Read more

#BREAKING: விவசாயிகளுக்கு நற்செய்தி.. மே 24ல் மேட்டூர் அணை திறப்பு – முதலமைச்சர் அறிவிப்பு

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து வரும் 24-ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என்று முதல்வர் அறிவிப்பு. சேலம் மாவட்டம் மேட்டூர் அணை ஜூன் 12-ஆம் தேதிக்கு பதில் முன்கூட்டியே மே 24-ஆம் தேதி திறக்கப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து வரும் 24-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று தண்ணீர் திறக்கப்படும் என்று அறிவித்துள்ளது விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் அமைந்துள்ளது. முதல் முறையாக கோடை காலத்தில் டெல்டா … Read more

பச்சைத் துரோகம் செய்யும் திமுக அரசு.. இவர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும்! – சீமான்

தூய்மைப் பணியாளர்களின் போராட்டக் கோரிக்கைகளை ஏற்று உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என சீமான் கோரிக்கை. இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை பெருநகரக் குடிநீர் வாரியத்தில் தூய்மை பணிபுரியும் பணியாளர்களின் பணி நிரந்தரம் உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாமல் காலம் கடத்திவரும் திமுக அரசின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. மக்களுக்கு உயிர் காக்கும் நல்ல குடிநீர் வழங்குவதற்கான பணிகளைச் செய்யும் தொழிலாளர்கள், அடிப்படை … Read more

#BREAKING: சிறப்பு ஊட்டச்சத்து திட்டத்தை துவக்கி வைத்தார் முதலமைச்சர்!

ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு சிறப்பு திட்டம் தொடக்கம். ஊட்டியில் சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து தரும் திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் துவக்கி வைத்தார். கோவை மற்றும் உதகை மாவட்டங்களில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துக் கொள்வதற்காக முதலமைச்சர் முக ஸ்டாலின் அங்கு சென்றுள்ளார். இதுபோன்று நேற்றைய தினம் உதகையில் 124-ஆவது மலர் கண்காட்சியை துவக்கி வைத்த அவர், இன்றும் பல்வேறு அரசு நலத்திட்டங்களை தொடக்கி வைக்கிறார். அதில் ஒரு பகுதியாக, நீலகிரி மாவட்டம் உதகையில் … Read more