திருச்சியில் அடுத்த மாதம் விசிக மாநாடு- திருமாவளவன் அறிவிப்பு..!

VCK Leader Thirumavalavan

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ‘வெல்லும் ஜனநாயகம் மாநாடு’ திருச்சியில் ஜனவரி 26-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் முதல்வரை சந்தித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தென்மாவட்டங்களில்  ஏற்பட்ட வெள்ளம் பாதிப்பால் டிசம்பர் 29 இல் நடக்க இருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநாடு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ‘வெல்லும் ஜனநாயகம் மாநாடு’ திருச்சியில் ஜனவரி 26ம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார். ‘வெல்லும் ஜனநாயகம் மாநாடு’ … Read more

இறுதி மூச்சு உள்ளவரை இந்துதுவாத்தை எதிர்த்தவர் அம்பேத்கர்.! திருமாவளவன் பேச்சு.!

தன் கடைசி மூச்சு உள்ளவரை இந்துத்துவாவை எதிர்த்தவர் அம்பேத்கர். அவர்களால் அம்பேத்கரை கொண்டாட முடியாது. என பேசியிருப்பார் விசிக தலைவர் திருமாவளவன்.    விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக நடைபெற்ற கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசினார். அப்போது, அம்பேத்கர் பற்றியும், இந்துத்துவப்பற்றியும் பேசினார். அவர் பேசுகையில், ஒரே நேரத்தில் 10 லட்சம் பேரை பௌத்தராக மாற்றிய பெருமை கொண்டவர் அம்பேத்கர் இல்லை. 10 லட்சம் இந்துக்களை பௌத்தர்களாக மாற்றிய பெருமை கொண்டவர் அம்பேத்கர். … Read more

மதவாத அமைப்பான ஆர்எஸ்எஸூம், சிபிஎம், சிபிஐ, விசிகவும் ஒன்றா? – திருமாவளவன் கேள்வி

ஆர்எஸ்எஸூம் சிபிஎம், சிபிஐ, விசிகவும் ஒன்றா? மனித சங்கிலிக்கு ஏன் அனுமதி மறுப்பு? என திருமாவளவன் கேள்வி. மதவாத அமைப்பான ஆர்எஸ்எஸூம் அரசியல் கட்சிகளான சிபிஐ (எம்), சிபிஐ மற்றும் விசிகவும் ஒரே வகையானவையா?, ஆர்எஸ்எஸைக் காரணம் காட்டி சமூகநல்லிணக்க மனித சங்கிலி அறப்போராட்டத்துக்கு அனுமதி மறுப்பது சரியா? என கேள்வி எழுப்பி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அக்டோபர் 02  காந்தியடிகளின் பிறந்தநாளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஊர்வலத்துக்கு … Read more

முதல்வருக்கு எமது நெஞ்சார்ந்த நன்றி – விசிக தலைவர் திருமாவளவன்

அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாக அறிவித்த முதல்வருக்கு தொல் திருமாவளவன் நன்றி. அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14-ஆம் தேதி இனி சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் விதி 110-இன் கீழ் முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்தார். முதல்ரவரின் இந்த அறிவிப்பிற்கு பேரவையில் இருந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உள்பட பலரும் வரவேற்பு அளித்தனர். அந்தவகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், … Read more

60 கி.மீ.க்கு இடையில் உள்ள சுங்கச்சாவடிகள் மூடப்படும் – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு!

60 கிலோ மீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி மட்டுமே செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு. தேசிய நெடுஞ்சாலைகளில் 60 கிலோ மீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி மட்டுமே செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஒன்றுக்கு மேற்பட்ட சுங்கச்சாவடிகள் இருக்குமானால் 3 மாதத்திற்குள் அகற்றப்படும் எனவும் டெல்லி நாடாளுமன்ற மக்களவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருமான, எம்பியுமான தொல். திருமாவளவன் இதுதொடர்பாக கோரிக்கை வைத்த நிலையில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் … Read more

#ElectionBreaking: விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்கீடு.!

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 6 தொகுதிகளில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்கீடு. திமுக கூட்டணியில் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், தற்போது அக்கட்சிக்கு பானை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. ஒதுக்கப்பட்ட 6 தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பானை சின்னத்தில் போட்டியிடுகிறது. அதன்படி, வானூர் (தனி), செய்யூர் (தனி), காட்டுமன்னார் கோயில் (தனி), அரக்கோணம் (தனி), நாகப்பட்டினம், திருப்போரூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது. … Read more

அனைத்துமே நாடகம்., இதை இப்படி செய்தால் மட்டுமே உண்மையை அறிய முடியும் – திருமாவளவன்

தமிழக அரசின் இடஒதுக்கீடு, கடன் தள்ளுபடி அனைத்துமே தேர்தல் நாடகம் என்று விசிக தலைவர் திருமாவளவன் விமர்சனம் செய்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், வன்னியர் சமுதாயத்திற்கு 20% உள் ஒதுக்கீடு கேட்ட பாமக நிறுவனர் ராமதாஸ் 10.5% வழங்கியதற்கு ஒப்புக்கொண்டுள்ளார். அப்படியென்றால் மீதமுள்ள 9.5% மக்களுக்கு இடஒதுக்கீடு வேண்டாம் என்ற முடிவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வந்துவிட்டாரா? என்றும் இது எந்த அடிப்படையில் ஒப்புக்கொள்ளப்பட்டது எனவும் … Read more

தமிழகத்தில் கூட்டணியில் இணைவதே பெரிய போராட்டம் – தொல் திருமாவளவன்

தமிழக அரசுயலில் கூட்டணி அமைப்பதே பெரிய போராட்டம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை அசோக் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விசிக தலைவர் தொல் திருமாவளவன், தமிழகத்தில் இரு கட்சிகளும் கூட்டணிக்கு அழைக்கக்கூடிய இடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இருப்பதாகவும் கூறியுள்ளார். எங்களை பிடிக்காதவர்கள் 2, 3 சீட்டுகள் என்பார்கள், அவர்கள் கூட்டணியில் சேர்வதற்கே தகுதி இல்லாதவர்களாக இருப்பார்கள் என குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டு அரசியலை பொறுத்தளவில் கூட்டணியில் இணைவது என்பதே ஒரு … Read more

ரஜினி – கமல் சந்திப்பு அரசியல் தாக்கம் ஏற்படாது – திருமாவளவன்

ரஜிகாந்த் – கமல்ஹாசன் சந்திப்பால், அரசியலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று விசிக தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், ரஜிகாந்த் – கமல்ஹாசன் சந்திப்பால், அரசியலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என கூறிய அவர், ஒருபுறம் அவ்வையார், மறுபுறம் திருக்குறள் படிக்கிறார், இன்னொரு பக்கம் தமிழர்களின் உரிமை பறிக்கப்படுகிறது என கூறியுள்ளார். மேலும், சிபிஎஸ்இ 8ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் … Read more

அண்ணாவுக்கு பாரத ரத்னா விருது தரவேண்டும் – திருமாவளவன்

பேரறிஞர் அண்ணாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கி சிறப்பிக்க வேண்டும் என்று வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். இன்று பேரறிஞர் அண்ணாவின் 52-ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இவரது நினைவு தினத்திற்கு அரசியல் தலைவர்கள் பலர் நினைவிடத்துக்கு சென்றும், அண்ணாவின் உருவப்படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தி புகழாரம் சூட்டி வருகின்றனர். அந்தவகையில், பேரறிஞர் அண்ணாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கி சிறப்பிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார். பேரறிஞர் அண்ணாவின் … Read more