திருச்சியில் அடுத்த மாதம் விசிக மாநாடு- திருமாவளவன் அறிவிப்பு..!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ‘வெல்லும் ஜனநாயகம் மாநாடு’ திருச்சியில் ஜனவரி 26-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் முதல்வரை சந்தித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தென்மாவட்டங்களில்  ஏற்பட்ட வெள்ளம் பாதிப்பால் டிசம்பர் 29 இல் நடக்க இருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநாடு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ‘வெல்லும் ஜனநாயகம் மாநாடு’ திருச்சியில் ஜனவரி 26ம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார். ‘வெல்லும் ஜனநாயகம் மாநாடு’ நடக்கும் தேதியை உறுதி செய்வதற்காக முதல்வரை சந்தித்தோம். இந்த மாநாட்டில்  முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளார்.

மேலும், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் சமூகத்த்ததை சார்ந்த அரசு அதிகாரிகளுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக தனி சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. மின் நுகர்வோர்கூட்டமைப்பின் சார்பில் சில முக்கியமான கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.  முதல்வர் அவற்றை பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளார். தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன.

பாதிக்கப்பட்ட இடங்களில் முதல்வரின் அறிவுறுத்தலின் பெயரில் 10-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் மீட்பு பணிகள் மற்றும் நிவாரண பணிகளை செய்து வருகின்றனர். தமிழக அரசு இந்த போர்க்கால நடவடிக்கையை விடுதலை சிறுத்தைகள் கட்சி பாராட்டுகிறது. தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். தமிழக அரசு விடுத்த கோரிக்கையை ஏற்று, சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கும் 21,000 கோடி பேரிடர் நிவாரண நிதியாக வழங்க வேண்டுமென கோரிக்கை வைக்கிறோம் என தெரிவித்தார்.

author avatar
murugan