ஜனவரி 8 முதல் 16 வரை கல்வி நிலையங்களுக்கு விடுமுறை – முதல்வர் அறிவிப்பு!

ஜனவரி 8 முதல் 16 வரை கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தெலங்கானா முதல்வர் அறிவிப்பு. தெலுங்கானா மாநிலத்தில் அனைத்து கல்வி நிலையங்களுக்கு ஜனவரி 8-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை அறிவித்துள்ளார். ஓமைக்ரான் வகை கொரோனா தொற்று பரவல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை மையப்படுத்தி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கொரோனாவை சமாளிக்க … Read more

தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜ் உடல்நிலை சீராக உள்ளது – அப்போலோ மருத்துவமனை அறிக்கை!

ஹைதராபாத் கேபிள் பாலத்தில் சென்றபோது விபத்து ஏற்பட்ட நடிகர் சாய் தரம் தேஜ் உடல்நிலை சீராக உள்ளது என மருத்துவமனை அறிவிப்பு. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள துர்காம்சேரு கேபிள் பாலத்தில் நடிகர் சாய் தரம் தேஜ் ஸ்போர்ட்ஸ் பைக்கில் சென்றபோது விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சுயநினைவில்லாமல் இருந்த தரம் தேஜ் உடனடியாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த நிலையில், பைக் விபத்தில் படுகாயமடைந்த தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜ்-யின் உடல்நிலை … Read more

தெலுங்கானா: வெள்ளத்தில் கார் அடித்து செல்லாமல் பாதுகாத்த உரிமையாளர்..!#video

தெலுங்கானாவில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் கார் அடித்து செல்லாமல் இருப்பதற்காக காரின் உரிமையாளர் செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சிர்சில்லா நகரத்தில் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி பல மக்கள் பாதிப்படைந்துள்ளனர். அங்கு ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் ஏராளமான வாகனங்கள் அடித்து சென்றுள்ளது. இதனால் கார் வைத்திருக்கும் ஒருவர், தனது காரை வெள்ளம் அடித்து செல்லாமல் இருப்பதற்காக காரின் நான்கு முனைகளிலும் கயிற்றால் கட்டி அதனை அவரது வீட்டின் மேல்கூரையில் உள்ள … Read more

#BREAKING: தெலுங்கானாவில் நாளை பள்ளிகளை திறக்க தடை – உயர் நீதிமன்றம் உத்தரவு!

தெலுங்கானாவில் நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்ற அரசின் உத்தரவுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் தடை விதித்து. தெலுங்கானாவில் நாளை முதல் 8, 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க அம்மாநில அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில் தெலுங்கானாவில் நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்ற அரசின் உத்தரவுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனாவின் அபாயத்தைக் கருத்தில் கொண்டு, பள்ளிகளை இப்போதைக்குத் திறக்க வேண்டாம் … Read more

தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு 50% தள்ளுபடி..!

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு 50% தள்ளுபடி என அறிவித்த தெலுங்கானாவை சேர்ந்த கடை உரிமையாளர். தெலுங்கானாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கொரோனா தடுப்பூசி செலுத்துமாறு அரசு மக்களை அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் தெலுங்கானாவை சேர்ந்த அலங்காரப்பொருள் கடை உரிமையாளர் ஒருவர் வித்தியாச அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது, ரக்சா பந்தன் விழாவை முன்னிட்டு பலரும் அலங்கார பொருட்கள், ராக்கி, பரிசுகள் ஆகியவற்றை வாங்க வருவார்கள். அவர்களில் கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் உள்ளவர்களுக்கு … Read more

தெலுங்கானா வாகன சோதனையில் 7.30 கோடி மதிப்புள்ள 3,650 கிலோ போதை பொருள் பறிமுதல்…!

தெலுங்கானாவில் நடந்த வாகன சோதனையில் 7.30 கோடி மதிப்புள்ள 3,650 கிலோ போதை பொருள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  தெலுங்கானாவில் உள்ள பத்ராத்ரி கொத்தகுடெம்  என்னும் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியே வந்த சந்தேகத்துக்குரிய இரண்டு லாரிகளை வழிமறித்த போது, லாரி ஓட்டுனர்கள் முன்னுக்குப்பின் முரணான பதிலை அளித்துள்ளனர். எனவே, போலீசார் சந்தேகம் அடைந்து வாகனத்தில் சோதனை செய்துள்ளனர். அப்பொழுது மரிஜுவானா என்ற 3,650 கிலோ எடை கொண்ட போதைப்பொருள் அந்த லாரிகளில் … Read more

தேர்தலில் பணப்பட்டுவாடா: தெலுங்கானா பெண் எம்.பி.க்கு சிறை தண்டனை விதிப்பு!

மக்களவைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்த விவகாரம் தொடர்பாக தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி (டிஆர்எஸ்) கட்சியின் எம்.பி. மாலோத் கவிதாவுக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் (TRS) தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் சார்பாக அம்மாநிலத்தில் மஹ்பூபாபாத் தொகுதியில் போட்டியிட்டு மாலோத் கவிதா வெற்றி பெற்றார். இதில், தேர்தல் நடத்தை விதிகளை மீறி வாக்காளர்களுக்கு பணம்பட்டுவாடா செய்ததாக புகார் எழுந்துள்ளது. இதனைத்தொடர்ந்து, மாலோத் கவிதா (Kavitha Maloth) மற்றும் அவரது உதவியாளர் … Read more

டெஸ்லா போட்டியாளரான ட்ரைடன் நிறுவனம் தெலுங்கானாவில் ரூ.2,100 கோடி முதலீடு;25,000 புதிய வேலைவாய்ப்புகள்…!

டெஸ்லா போட்டியாளரான ட்ரைடன் (ஈ.வி) தெலுங்கானாவில் ரூ.2,100 கோடி முதலீடு செய்வதால் 25,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என அமைச்சர் கே.டி.ராமராவ் தெரிவித்துள்ளார். எலோன் மஸ்க் தலைமையிலான டெஸ்லா நிறுவனத்தின் முக்கிய போட்டியாளரான அமெரிக்காவைச் சேர்ந்த மின்சார வாகனங்கள் தயாரிப்பு நிறுவனமான ட்ரைடன் (ஈ.வி) ,தெலுங்கானா மாநிலத்தின் சங்கரெட்டி மாவட்டத்தில் 1,100 கோடி ரூபாய் முதலீட்டில் தனது உற்பத்தி ஆலையை நிறுவ மாநில அரசாங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இது தொடர்பாக,தெலுங்கானா தகவல் தொழில்நுட்ப மற்றும் தொழில்துறை அமைச்சர் … Read more

கொரோனா தொற்று குறைந்துள்ளதால் ஊரடங்கை முழுமையாக வாபஸ் பெற தெலுங்கானா அமைச்சரவை முடிவு!

தெலுங்கானாவில் தற்பொழுது கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ளதால் ஊரடங்கை முழுவதுமாக வாபஸ் பெற அம்மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே நாட்டிலுள்ள பல மாநிலங்களிலும் கடுமையான கட்டுப்பாடுகளுடனான ஊரடங்கு விதிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை முடிவடைந்துள்ள நிலையில் பல மாநிலங்களில் கொரோனாவின் தாக்கம் குறைய தொடங்கியுள்ளது. எனவே ஒவ்வொரு மாநிலங்களிலும் ஆங்காங்கு உள்ள நிலைமைக்கேற்ப ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் … Read more

இப்படியும் இருப்பார்களா?…மருமகளை கட்டிப்பிடித்த கொரோனா மாமியார்..!

நாடு முழுவதும் கொரோனா தொற்று பல பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தெலங்கானாவில் மருமகளை ஓடிவந்து மாமியார் கட்டிபிடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாசத்தால் அல்ல, தான் மட்டும் தனிமையில் அவதிப்படணுமா? என்ற எண்ணத்தில் கொரோனா பாதித்த மாமியார் செய்த செயல் இது. தெலங்கானா மாநிலத்தில் ராஜண்ணா சிர்சில்லா மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இவருடைய வயது 20. கொரோனாவின் தாக்கத்தால் இவரின் சகோதரி இவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்கு இந்த பெண்ணுக்கு உரிய … Read more