பரவலாக பெய்துவரும் மழை காரணமாக நெல்லை மாவட்டம் காரையார், மணிமுத்தாறு அணைகளின் நீர்மட்டம் உயர்வு!

பரவலாக பெய்துவரும் மழை காரணமாக நெல்லை மாவட்டத்தில்  காரையார், மணிமுத்தாறு அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. 143 அடி உயரமுள்ள காரையார் அணையின் நீர்மட்டம் 64 அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து வினாடிக்கு இரண்டாயிரத்து 667 கனஅடியாக இருக்கிறது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 104 அடியாக உயர்ந்துள்ளது. இதேபோல், 84 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 69 அடியாக அதிகரித்துள்ளது. அணைக்கு வரும் தண்ணீரின் அளவு 58 கனஅடியாக உள்ளது. மாவட்டத்தில் உள்ள கடனாநதி, ராமநதி … Read more

25 புதிய துணை மின் நிலையங்கள் பல்வேறு மாவட்டங்களில் அமைக்கப்படும் !முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி

முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி,  சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டார். தமிழகத்தின் மின்நிறுவுதிறன் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், இன்றும் என்றும் தமிழகம் மின்மிகை மாநிலமாக திகழும் எனவும் எடப்பாடி பழனிசாமி கூறினார். புதிய துணை மின்நிலையங்கள் அமைப்பது பற்றிய அறிவிப்புகள் வெளியிட்ட அவர், பல்வேறு மாவட்டங்களில் 5 ஆயிரத்து 68 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 25 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும் என்றார். புதிய எரிசக்தி கொள்கை உருவாக்கப்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்தார். ஊரகப் … Read more

தமிழக சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் அதிக நேரம் பேசுவதாலும் தர்மசங்கடம்!சபாநாயகர் தனபால்

சபாநாயகர் தனபால் ,தமிழக சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் அதிக நேரம் பேசுவதாலும், துணை கேள்விகளாலும், தமது நிலைமை தர்மசங்கடமாக இருப்பதாக ஆதங்கம் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் அமைச்சர்களிடம் கேள்வி கேட்கும் சில உறுப்பினர்கள், அதன்பின்னர் துணை கேள்விகளையும் கேட்பதாகக் கூறினார். ஒரு சிலருக்கு துணை கேள்விக்கு அனுமதித்து, மற்றவர்களுக்கு நேரம் கருதி அனுமதிக்காத நிலை வரும்போது உறுப்பினர்கள் தம்மீது வருத்தப்படுவதாக கூறிய தனபால், இதுபோன்ற நிலையால் தமக்கு தர்மசங்கடம் ஏற்படுவதாகவும், இதை உறுப்பினர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். … Read more

12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஏப்ரல் 19ம் தேதி வெளியாகும்! அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

2018-19 ம் ஆண்டுக்கான 12-ம் வகுப்பு தேர்வுகள் 2019 மார்ச் 1ல் தொடங்கி மார்ச் 19ம் தேதி வரை நடைபெறும் என்று  பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும்  11 ம் வகுப்பு தேர்வுகள் 2019 மார்ச் 6-ல் நடைபெறும் .+1, +2 மொழிப்பாடங்களுக்கான தேர்வுகள் ஒரே தேர்வாக மாற்றப்பட்டுள்ளன. 10ஆம் வகுப்புகளுக்கு முன்கூட்டியே பொதுத்தேர்வு முடிவுகள் வரும் ஆண்டு வெளியிடப்படும் .10 வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் 14-ல் தொடங்கி மார்ச் 29-ம் தேதி வரை நடைபெறும் … Read more

சொந்த செலவில் சொந்தமாக டாய்லட் கொண்டு வந்த வடகொரியா அதிபர்!அது கூட எதிரிகள் கைக்கு சென்றுவிடக்கூடாது!உஷாராக இருந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்!

சிங்கப்பூரில் நடந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்,அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்  இடையிலான சந்திப்புக்கு வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. குறிப்பாக வடகொரிய அரசு அதிபர் கிம் ஜாங் சொந்தமாக ரெடிமேட் டாய்லட் எடுத்து வந்து அதைத்தான் பயன்படுத்தினார். இதுபோன்ற பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. ஐநாவின் பொருளாதார தடைக்கும் எச்சரிக்கைக்கும் கட்டுப்படாமலும், அமெரிக்காவின் மிரட்டலுக்கும் பணியாமலும் வடகொரியா தொடர்ந்து அணு ஆயுதச் சோதனையும், ஹைட்ரஜன் குண்டு சோதனையும் நடத்தி வந்தது. … Read more

ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் கோரிக்கையை நிறைவேற்ற ஆசையாக இருக்கிறது!ஆனால் எங்களிடம் பணமில்லை! மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ,ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் கோரிக்கையை நிறைவேற்ற மனமிருக்கிறது ஆனால் பணமில்லை என்று கூறியுள்ளார். சென்னை எண்ணூரில் தீ விபத்தில் எரிந்து நாசமான குடிசைகளை அவர் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், தாமரை இல்லாமல் இலை இல்லை என்றும் இலை தள்ளாடி கொண்டிருப்பதாக கூறுபவர்கள் கற்பனை உலகத்தில் இருப்பதாக விமர்சித்தார். மக்கள் மனதில் தாமரைக்கோ, சூரியனுக்கோ அல்லது புதிய கட்சிகளுக்கோ ஒருபோதும் இடமிருக்காது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். மேலும் செய்திகளுக்கு … Read more

BREAKING NEWS:வட கொரியாவில் அணு ஆயுதங்கள் முழுமையாக ஒழிக்கப்படும்!அதிரடி அறிவிப்பை வெளியிட்ட வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்

அமெரிக்கா மற்றும் வடகொரியா அதிபர்கள் இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு உலகமே ஆவலோடு உற்று நோக்கி காத்திருந்த நிலையில் நடைபெற்றுள்ளது..ஞாயிற்றுக்கிழமை பகலில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சிங்கப்பூர் வந்தடைந்தார். அதேநாள் இரவு அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் சிங்கப்பூர் வந்து சேர்ந்தார். இருவரும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சிங்கப்பூரில் வெவ்வேறு இடங்களில் தங்கியிருந்தனர். இவர்களது சந்திப்பிற்காக, சென்டோசா தீவு மிகுந்த நேர்த்தியுடன் தயாரானது. இதனைத் தொடர்ந்து, இன்று காலை தாங்கள் தங்கியிருந்த ஹோட்டல்களில் இருந்து, கிம் … Read more

ஜாக்டோ ஜியோ போராட்டம் குறித்து, சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம்!

 ஜாக்டோ ஜியோ போராட்டம் குறித்து, சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை முதலமைச்சர் அழைத்து பேசி, கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று  ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். முன்னதாக  பழைய பென்சன் திட்டத்தை கொண்டுவரவேண்டும், 7-வது ஊதியக்குழுவில் மறுக்கப்பட்ட 21 மாத நிலுவை தொகையை அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் சங்க கூட்டமைப்பான  ஜாக்டோ-ஜியோ சார்பில் சென்னை எழிலகத்தில் காலவரையற்ற … Read more

பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்!இனி ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்படும்! பள்ளிக்கல்வித்துறை செங்கோட்டையன்

பள்ளிக்கல்வித்துறை செங்கோட்டையன் ,அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகளை தொடங்கி, தனியார் பள்ளி மோகத்தை குறைக்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில், கேள்வி நேரத்தின்போது பேசிய திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதைத் தடுக்க, அரசு என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 14 வகையான இலவச பொருட்கள் வழங்கப்படுவதாகவும், அரசு பள்ளியில் … Read more

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு வரவேண்டும்!அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அழைப்பு

அமெரிக்கா மற்றும் வடகொரியா அதிபர்கள் இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு உலகமே ஆவலோடு உற்று நோக்கி காத்திருந்த நிலையில் நடைபெற்றுள்ளது..ஞாயிற்றுக்கிழமை பகலில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சிங்கப்பூர் வந்தடைந்தார். அதேநாள் இரவு அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் சிங்கப்பூர் வந்து சேர்ந்தார். இருவரும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சிங்கப்பூரில் வெவ்வேறு இடங்களில் தங்கியிருந்தனர். இவர்களது சந்திப்பிற்காக, சென்டோசா தீவு மிகுந்த நேர்த்தியுடன் தயாரானது. இதனைத் தொடர்ந்து, இன்று காலை தாங்கள் தங்கியிருந்த ஹோட்டல்களில் இருந்து, கிம் … Read more