“சொத்து பங்கீட்டில் ஆண்களுக்கு நிகரான உரிமை பெண்களுக்கும் உண்டு”- உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

சொத்து பங்கீட்டில் ஆண்களுக்கு நிகரான சம உரிமை பெண்களுக்கும் உண்டு என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பெண்களுக்கு சொத்து உரிமையில் சம பங்கு வழங்குவது தொடர்பாக டெல்லி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு, இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 2005 ஹிந்து சொத்தூரிமை திருத்தச் சட்டத்தின் கீழ், ஆண்பிள்ளைகளுக்கு வழங்குவது போல பெண்பிள்ளைகளுக்கும் சொத்தில் சம உரிமை உண்டு என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

பி.எஸ்-4 ரக விமானங்களை விற்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு! – உச்சநீதிமன்றம் அதிரடி!

கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, தீவிரமாக கடைபிடிக்கப்படுகிறது. வரும் ஏப்ரல் வரை இந்த ஊரடங்கு நீட்டிக்க உள்ளது. இதனால் மக்கள் அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள் தவிர மற்றவை திறக்க அனுமதியில்லை. மக்களும் அத்தியாவசியம் தவிர மற்ற எதற்கும் வெளியில் வர அனுமதி இல்லை.  இந்நிலையில், சுற்றுசூழலுக்கு மாசு ஏற்படுத்துவதாக கூறி ஏற்கனவே பி.எஸ்-4 ரக வாகனங்களை வரும் ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து விற்க … Read more

இன்று வெளியான அயோத்தி தீர்ப்பு !வழக்கு கடந்த வந்த பாதை…

நிலம் கொண்டாடுவதில் பிரச்சினை : உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய  2.77 ஏக்கர் நிலத்தை உரிமை கொண்டாடுவதில் பிரச்சினை இருந்தது. அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு : நில பிரச்சினை காரணமாக ,2010-ஆம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றம் அந்த நிலத்தை, ராம் லல்லா, நிர்மோஹி அஹாரா, சன்னி வக்பு வாரியம் ஆகிய மூன்று தரப்பினரும் சரி சமமாக பிரித்துக்கொள்ள தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு : இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.இந்த … Read more

பாபர் மசூதி காலி இடத்தில் கட்டபடவில்லை! அங்கே ஒரு கட்டிடம் இருந்துள்ளது! – உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

நாடே பரபரப்பாக காத்துகொண்டு இருந்த அயோத்தி வழக்கின் தீர்ப்பு இன்று அளிக்கபட உள்ளது. இந்த தீர்ப்பை உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு  வாசித்து வருகின்றனர். அதில் சர்ச்சைக்குரிய இடத்தில் கட்டப்பட்ட பாபர் மசூதி காலி இடத்தில் கட்டப்படவில்லை. எனவும், மேலும், அங்கு அந்த இடத்தில ஒரு கட்டிடம்  இருந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக தொல்லியல் துறை தரவுகள் தெரிவிப்பதாவும் தீர்ப்பில் வாசிக்கப்பட்டு வருகின்றனர்.

சிதம்பரத்தின் மனுவை தள்ளுபடி செய்யவேண்டும்!உச்சநீதிமன்றத்தில் சிபிஐ மனு

சிதம்பரத்தின் மனுவை உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யவேண்டும் என்று  சி.பி.ஐ.  தரப்பில் பதில்  மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ கைது செய்ததற்கு எதிராக சிதம்பரம் தரப்பில் மனு  தாக்கல் செய்யப்பட்டது.இந்த நிலையில் ப.சிதம்பரத்தின் மனுவை உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யவேண்டும் என்று  சி.பி.ஐ.  தரப்பில் பதில்  மனு ஓன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சி.பி.ஐ. கைது செய்ததை எதிர்த்து சிறப்பு நீதிமன்றத்தில் தான் ப.சிதம்பரம் மனுத் தாக்கல் செய்திருக்க வேண்டும்  என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிதம்பரத்தை திகார் சிறைக்கு அனுப்ப உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

சிதம்பரத்தை திகார் சிறைக்கு அனுப்ப சிபிஐக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. சிபிஐ காவலை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில்  தொடர்ந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில்  விசாரணைக்கு வந்தது.அதில் சிதம்பரம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் வாதாடினார். அப்பொழுது அவர் வாதிடுகையில், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில்  சிதம்பரத்தை வீட்டுக்காவலில் வேண்டுமானாலும் வைத்து விசாரித்துக் கொள்ளுங்கள். சிபிஐ வழக்கில் நீதிமன்ற காவலுக்கு உத்தரவிடாதபடி தடை விதிக்க வேண்டும் .ஆனால் திகார் சிறைக்கு சிதம்பரத்தை அனுப்பிவிடாதீர்கள் என்று வாதிட்டார்.மேலும் வீட்டுக்காவலில் வைப்பது … Read more

8 வழிசாலைக்கு தடை விதிக்க முடியாது! உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்!

சேலம் – சென்னை இடையிலான 8 வழிச்சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டது. இந்த 8 வழிச்சாலை திட்டத்திற்க்காக பல மரங்கள் அழிக்கப்பட்டன, விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இதற்க்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பின. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வழக்கில் இன்று மத்திய அரசானது, ‘ சுற்றுசூழல் துறையில் இருந்து அனுமதி வழங்கப்பட்ட பிறகே, பணிகள் தொடங்கும். 8 வழிசாலைக்கு தடை விதிக்க முடியாது ‘ எனவும் பதில் அளித்தது.

8 வழிச்சாலை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் ஆகஸ்ட் 8இல் மீண்டும் விசாரணை!

மத்திய அரசானது, 10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் சென்னை – சேலம் இடையே பசுமை வழிச்சாலை அமைக்க திட்டமிட்டு இருந்தது. இந்த சாலையானது, பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்கள் ஆக்கிரமித்து உருவாகும்படி அமைந்தது. இதனால் இந்த சாலை அமைக்க மக்கள் தற்போது வரை எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.   இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் விவசாய நிலங்களை அரசு,  கையகப்படுத்துவதை எதிர்த்து நில உரிமையாளர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் சார்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டது. கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி சென்னை- சேலம் … Read more

ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முதலமைச்சர் குமாரசாமி மனு தாக்கல்

நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்ற ஆளுநரின் வலியுறுத்தலுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முதலமைச்சர் குமாரசாமி மனு தாக்கல் செய்துள்ளார். மதியம் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என முதலமைச்சர் குமாரசாமிக்கு கர்நாடக ஆளுநர் கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில் ஆளுநரின் வலியுறுத்தலுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முதலமைச்சர் குமாரசாமி மனு தாக்கல் செய்துள்ளார்.இன்று மதியம் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற ஆளுநரின் அறிவுறுத்தலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது மனுவில்,சட்டமன்ற நடவடிக்கைகளில் ஆளுநர் … Read more

எம்எல்ஏக்களின் ராஜினாமாக்களை ஏற்க கூறி உச்சநீதிமன்றம் உத்தரவிட முடியாது! – கர்நாடக சபாநாயகர் பதிலடி!

கர்நாடக சட்டமன்ற அரசியல் களம் தற்போது பரபரப்பாக இயங்கி வருகிறது. இதுவரை கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் 16 பேர் தங்களது ராஜினாமாவை அளித்துள்ளனர். மேலும் இரண்டு சுயேச்சை எம்எல்ஏக்கள் அரசுக்கு ஆதரவாக கொடுத்த வாக்கை வாபஸ் பெற்றுள்ளனர். இந்த விவகாரத்தில் கர்நாடக சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என 10 எம்எல்ஏக்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரித்த நீதிபதி கூறுகையில், ‘ கர்நாடகா சபாநாயகர் இந்த ராஜினாமாக்கள் குறித்த இன்றே … Read more