8 வழிசாலைக்கு தடை விதிக்க முடியாது! உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்!

சேலம் – சென்னை இடையிலான 8 வழிச்சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டது. இந்த 8 வழிச்சாலை திட்டத்திற்க்காக பல மரங்கள் அழிக்கப்பட்டன, விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இதற்க்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பின.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வழக்கில் இன்று மத்திய அரசானது, ‘ சுற்றுசூழல் துறையில் இருந்து அனுமதி வழங்கப்பட்ட பிறகே, பணிகள் தொடங்கும். 8 வழிசாலைக்கு தடை விதிக்க முடியாது ‘ எனவும் பதில் அளித்தது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.