பி.எஸ்-4 ரக விமானங்களை விற்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு! – உச்சநீதிமன்றம் அதிரடி!

கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, தீவிரமாக கடைபிடிக்கப்படுகிறது. வரும் ஏப்ரல் வரை இந்த ஊரடங்கு நீட்டிக்க உள்ளது. இதனால் மக்கள் அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள் தவிர மற்றவை திறக்க அனுமதியில்லை. மக்களும் அத்தியாவசியம் தவிர மற்ற எதற்கும் வெளியில் வர அனுமதி இல்லை. 

இந்நிலையில், சுற்றுசூழலுக்கு மாசு ஏற்படுத்துவதாக கூறி ஏற்கனவே பி.எஸ்-4 ரக வாகனங்களை வரும் ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து விற்க கூடாது என உச்சநீதிமன்றம் 2018ஆம் ஆண்டே உத்தரவிட்டிருந்தது.

ஆனால், தற்போது கொரோனா முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்திருப்பதால், தற்போது, பி.எஸ்.4 ரக வாகனங்களை விற்பனை செய்யமுடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் லட்சக்கணக்கான இருசக்கர வாகனங்கள், 15 ஆயிரத்திற்கும் அதிகமான கார்கள், 10 ஆயிரத்திற்கும் அதிகமான வணிக வாகனங்கள் என விற்கமுடியாமல் தேங்கி இருக்கிறது. இதனால், 6,300 கோடி தேக்கம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. 

இதனை குறித்து வியாபாரிகள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி அமர்வு, ஊரடங்கு காலம் முடிந்த பிறகு 10 நாட்கள் பிஎஸ்-4 ரக விமானங்களை விற்பதற்கு கால அவகாசத்தை நீட்டித்துள்ளது. மேலும், பி.எஸ்-4 ரக வாகனங்களை டெல்லி போன்ற பெரு நகரங்களில் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.