திமுக ஆட்சி அமைந்த பிறகும் எந்தச் சூழலிலும் நச்சு ஆலை ஸ்டெர்லைட் திறக்கப்படாது – முக ஸ்டாலின்

ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக திறக்கலாம் என்ற முடிவு தற்காலிகமானதுதான் என்று முக ஸ்டாலின் நிலைப்பாடு. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் தற்காலிகமாக 4 மாதங்களுக்கு ஆக்சிஜன் மட்டும் தயாரிக்க அனுமதி வழங்கி, முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து, முக ஸ்டாலின் திமுகவின் நிலைப்பாட்டை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம், அதற்கான மின்சாரத்தை வழங்கலாம் என தமிழக … Read more

இரட்டைவேடம் போட்டதால், அவர்களை நம்ப மக்கள் தயாராக இல்லை – டிடிவி தினகரன்

ஸ்டெர்லைடில் ஆக்சிஜன் மட்டும் அடுத்த 4 மாதங்களுக்கு நடைபெறுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என டிடிவி தினகரன் அறிக்கை. ஸ்டெர்லைட் ஆலையில் 4 மாதங்களுக்கு மட்டும் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கு அனுமதி அளித்திருக்கும் சூழலில், அந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு மட்டுமின்றி உயர்நீதிமன்றமும் கண்காணிக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் ஏற்கனவே உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை வெளி மாநிலங்களுக்கு அனுப்பாமல் இங்குள்ள நோயாளிகளுக்கு … Read more

#BREAKING: ஸ்டெர்லைட்டை ஆக்சிஜன் உற்பத்திக்காக திறக்கலாம் – 5 தீர்மானங்கள் நிறைவேற்றம் – தமிழக அரசு

ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் தயாரிப்பு தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றம். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடர்பாக இன்று சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டுமே ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்கலாம் என ஒருமனதாக முடிவெடுத்து 5 தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளித்து நிறைவேற்றப்பட்டது. அதன்படி, உச்சநீதிமன்ற உத்தரவின்படி தூத்துக்குடி வேதாந்தா நிறுவனத்தில் அமைந்துள்ள பிராண வாயு உற்பத்தி மற்றும் அதைச் … Read more

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முற்பட்டால் தமிழகம் மீண்டும் போர்க்களமாக மாறும் – சீமான் எச்சரிக்கை

ஸ்டெர்லைட்டை திறக்க முற்பட்டால் தமிழகம் போர்க்களமாக மாறும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை. இதுகுறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கொரோனா இரண்டாவது அலை ஏற்படுத்தியிருக்கும் பேரிடர் காலச்சூழலைப் பயன்படுத்திக் கொண்டு, ஆக்சிஜன் தட்டுப்பாட்டைப் போக்குவதாகக் கூறி நாசகார ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க நடக்கும் முயற்சிகள் பேரதிர்ச்சி தருகின்றன. மக்களின் உயிருக்கும், மண்ணின் நலத்துக்கும் தீங்கு விளைவிக்கிற, நச்சு … Read more

#BigBreaking: ஸ்டெர்லைட் ஆலை – 4 மாதத்திற்கு அனுமதி – அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு.!

ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு தற்காலிக அனுமதி அளிக்க அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடர்பாக இன்று சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில், அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ், தேமுதிக, சிபிஎம், சிபிஐ மற்றும் பாமகவுக்கு பங்கேற்றிருந்தனர். இந்த கூட்டத்தில் ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டுமே ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்கலாம் என பெரும்பாலான கட்சிகள் கருத்து … Read more

#BREAKING: ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டும் அனுமதிக்கலாம் – பெரும்பாலான கட்சியினர் கருத்து!!

ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டுமே ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்கலாம் என அனைத்து கட்சி கூட்டத்தில் பெரும்பாலான கட்சிகள் கருத்து. சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில், அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ், தேமுதிக, சிபிஎம், சிபிஐ மற்றும் பாமகவுக்கு பங்கேற்றுள்ளனர். ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்கலாமா என்பது குறித்து அனைத்து கட்சி கூட்டத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. அப்போது, ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டுமே ஸ்டெர்லைட் … Read more

#breaking: ஸ்டெர்லைட் ஆலை திறக்கமடுமா? – முதல்வர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது!!

ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக முதல்வர் பழனிசாமி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது. சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியுள்ளது. முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் கூட்டத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி, அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ், தேமுதிக, சிபிஎம், சிபிஐ மற்றும் பாமகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்கலாமா என்பது குறித்து அனைத்து கட்சி கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது. … Read more

#BREAKING: தூத்துக்குடியில் மீண்டும் துப்பாக்கிசூட்டை விரும்பவில்லை – தமிழக அரசு

ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசே ஏற்று நடத்தலாமே என தலைமை நீதிபதி யோசனை தெரிவித்துள்ளார்.  ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டும் திறக்க அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கறிஞர் கூறியிருந்தார். இதற்கு தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது என்று கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இதையடுத்து, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜனை உற்பத்தி செய்வது தொடர்பாக அம்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் கருத்துகேட்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது, மக்கள் பெரும்பாலானோர்  … Read more

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு அனுமதிக்காது – தூத்துக்குடி ஆட்சியர்

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜனை உற்பத்தி செய்வது தொடர்பாக அம்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் கருத்துகேட்பு கூட்டம். தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டும் திறக்க அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கறிஞர் கூறியிருந்தார். இதையடுத்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது என்று கடும் எதிர்ப்பு தெரிவித்து, இவ்வழக்கு இன்று மீண்டும் … Read more

வெற்றி! வெற்றி! ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை- தூத்துக்குடியில் வெடி வெடித்து கொண்டாட்டம்.!

சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து தூத்துக்குடியில் மக்கள் வெடி வெடித்து கொண்டாட்டம். தூத்துக்குடியில் கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22ல் நடைபெற்ற ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிசூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்ததை அடுத்து 28 ஆம் தேதி ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது  ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்றும் ஆலையை மீண்டும் திறக்க வேதாந்தா நிறுவனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையை … Read more