துப்பாக்கிச்சூடு; தமிழக அரசு அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது – பாமக நிறுவனர் ராமதாஸ்

துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை. துப்பாக்கிச்சூடு தொடர்பாக குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படாது என்று தமிழக அரசு அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி 13 பேரை கொலை செய்த காவலர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கைகள் மட்டுமே எடுக்கப்படும். குற்றவியல் நடவடிக்கை … Read more

ஸ்டெர்லைட் ஆதரவு போராட்ட வழக்கு – இடைக்காலத்தடை விதித்த உயர்நீதிமன்றம் கிளை

ஸ்டெர்லைட்டில் தொடர்ந்து ஆக்சிஜன் தயாரிக்க அனுமதிகோரி போராடியவர்கள் மீதான வழக்குகளை விசாரிக்க இடைக்காலத்தடை விதித்த நீதிமன்றம். தூத்துக்குடி ஸ்டெர்லைட் அலையில் தொடர்ந்து ஆக்சிஜன் தயாரிக்க அனுமதிகோரி போராடியவர்கள் மீதான வழக்குகளை விசாரிக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை இடைக்காலத்தடை விதித்துள்ளது. சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் பதில் மனு தாக்கல் செய்யவும் மதுரை இல்லை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையின் துணைத்தலைவர் சுமதி உள்பட பலர் தாக்கல் செய்த வழக்கில் இடைக்காலத்தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மக்களின் வாழ்வை அழித்துத்தான் நிகழவேண்டும் என்றால், அது பிள்ளைக்கறி கேட்பதற்கு ஒப்பானது – கமல்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்றிட, சட்டசபையில் சிறப்பு தீர்மானம் உடனடியாக இயற்றப்பட வேண்டும் என கமல்ஹாசன் அறிக்கை. இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பேரழிவை உருவாக்கும் திட்டங்களும், தொழிற்சாலைகளும் ஏன் வளரும் நாடுகளில் உருவாக்கப்படுகின்றன? என ஒரு செனட் சபை உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு, ‘மூன்றாம் உலக நாடுகளில்தான் உயிர்களின் விலை மலிவானது’ என்று பதில் வந்தது. ஐரோப்பாவில் இயற்கை வளங்களைச் சீரழிக்கும் ஒரு திட்டம் வரும் என்றால் அதற்கு மிகப்பெரிய … Read more

#BREAKING: மூலப் பொருட்களை விற்க அனுமதி தேவை – வேதாந்தா நிறுவனம்

ஸ்டெர்லைட் ஆலைக்குள் உள்ள ரூ.200 கோடி மூலப்பொருட்களை விற்பனை செய்ய வேதாந்தா நிறுவனம் அனுமதி கோரியுள்ளது. இதுதொடர்பாக வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கு விசாரணையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்குள் உள்ள ரூ.200 கோடிக்கும் மேற்பட்ட மூலப்பொருட்கள் இருக்கிறது என்றும் மூலப்பொருட்களை எடுத்து விற்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும் எனவும் வேதாந்தா நிறுவனம் தரப்பு வாதமாக முன்வைத்தது. இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வேதாந்தா வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க … Read more

ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டிய அவசியம் இல்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்திற்கு ஆக்சிஜன் தேவை இருப்பதால் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி. சென்னை மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் சீரமைக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்தபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் சமீபத்தில் தினந்தோறும் 3,000 பேர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஏன் உடனடியாக மூட வேண்டும் என்கிறீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார். கொரோனா மூன்றாவது அலை உருவாகும் என மருத்துவ வல்லுநர்கள் கூறப்படும் நிலையில், … Read more

மே 11 முதல் ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் கிடைக்கும் – அமைச்சர் தங்கம் தென்னரசு

ஸ்டெர்லைட் மூலம் தமிழகத்திற்கு 31 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கிடைக்கும் என்று தொழித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். நாளை முதல் முழு ஊரடங்கு அமலில் வரவுள்ளதால் தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிகர்களுடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனை மேகொண்டார். தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிகர்களுக்கு ஏற்படும் பாதிப்பு, தேவை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. வரும் 24ம் தேதிக்கு பிறகு மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தும் நிலை ஏற்படாது என்றும் மீண்டும் முழு ஊரடங்கு நிலை … Read more

#BREAKING: தற்காலிக அனுமதிக் காலம் முடிந்ததும் ஆலைக்கு முழுமையாகச் சீல் வைக்கப்படும் – முக ஸ்டாலின்

தமிழக தேவைக்கேற்ப ஆக்சிஜனை பகிர்ந்தளிக்க பிரதமர் மோடி முன்வர வேண்டும் என்று முக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆக்சிஜன் உற்பத்திக்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆலையில் தயாரிக்கப்படும் ஆக்சிஜன் மத்திய தொகுப்பில் ஒப்படைக்க வேண்டும் என்றும் தேவையின் அளவை புரிந்து மத்திய அரசே வழங்கும் எனவும் தெரிவித்திருந்தது. ஸ்டெர்லைட்டில் தயாரிக்கும் ஆக்சிஜன் தமிழகத்துக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்து, உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. … Read more

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை இயக்க தமிழக அரசு வழிசெய்து விட்டது – வைகோ

ஸ்டெர்லைட் ஆலையை இயக்குவதற்கு தமிழக அரசு வழிவகை செய்துவிட்டது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றசாட்டு. ஆக்சிஜன் உற்பத்திக்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆக்சிஜன் உற்பத்தியை கண்காணிக்க 5 பேர் கொண்ட நிபுணர் குழுவை தேசிய சுற்றுசூழல் பொறியியல் ஆய்வு மையம் தேர்வு செய்யும் என தெரிவித்திருந்தது. ஆக்சிஜன் விநியோகத்தில் தமிழகத்திற்கு முன்னுரிமை வழங்க முடியாது, அளவை மத்திய அரசே முடிவு செய்யும் என்றும் தேவைப்படும் ஆக்சிஜன் குறித்து … Read more

#BREAKING: தமிழகத்திற்கு முன்னுரிமை மறுப்பு… ஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவு.!!

ஆக்சிஜன் உற்பத்திக்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவு. ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை தற்காலிகமாக 4 மாதங்களுக்கு திறக்க நேற்று முதல்வர் தலைமையிலான நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் ஒருமித்த கருத்தோடு முடிவு எடுத்து திறப்பதற்கான 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு ப்ராமணபத்திரம் பத்திர தாக்கல் செய்துள்ளது. இதனையடுத்து, ஸ்டெர்லைடில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி வழங்குவது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு … Read more

#BREAKING: ஸ்டெர்லைட் ஆக்சிஜனை நாங்களே பிரித்து கொடுப்போம்.. தடுக்கக்கூடாது – மத்திய அரசு

ஸ்டெர்லைட்டில் உற்பத்தி செய்யப்படவுள்ள ஆக்சிஜனை எங்களுக்கு தரவேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் செய்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி வழங்குவது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது, ஆக்சிஜன் அலகுகளை தவிர தாமிரம் உட்பட வேறு எந்த அலகுகளையும் ஸ்டெர்லைட் இயக்கக்கூடாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை எங்களிடம் தான் ஒப்படைக்க வேண்டும் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வாதம் வைத்துள்ளது. … Read more