திமுக மாநில சுயாட்சி மாநாடு:தேசிய தலைவர்களை அழைக்க முடிவு?

திமுக  சென்னையில் ஆகஸ்ட் 10-ம் தேதி மாநில சுயாட்சி மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தி,மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி,டெல்லி முதலமைச்சர்  கெஜ்ரிவால்,தேசியவாத காங்கிரஸ் தலைவர்  சரத்பவார்,தேசிய மாநாடு கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா ஆகிய தேசிய தலைவர்களை அழைக்க முடிவு என தகவல் வெளியாகியுள்ளது.தேசிய தலைவர்களுக்கு மாநாடு தொடர்பான அழைப்பு கடிதத்தை  திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

உயர்நீதிமன்ற மதுரை கிளை நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குனர் பதிலளிக்க உத்தரவு!

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில்  +2 படித்தவர்களை வேலைக்கு அமர்த்தக்கோரி வழக்கு ஓன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்டுள்ளது.இது தொடர்பாக வழக்கு ஓன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்டது.இதில் குறைவான கல்வி தகுதி உடையவர்களை  வேலைக்கு நியமிப்பதாக புகார் தெரிவித்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள்  மதுரை நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குனர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகை வீட்டுக்கு கொலை மிரட்டல்!அதிர்ச்சியில் குடுபத்தினர்…!

பிரபல பாலிவுட் நடிகை ஆயிசா தாகியாவுக்கு அடிக்கடி கொலை மிரட்டல்கள் வருவதாக ஆயிசா தாகியா கணவர் பார்ஹான் ஆஷ்மி போலீசிடம் புகார் அளித்துள்ளார். பிரபல பாலிவுட் ஆயிசா தாகியா ஒரு குழந்தைக்கு தாய் ஆவார்.இவருக்கும் இவரது குடும்பத்தினருக்கும் அடையாளம் தெரியாத தொழிலதிபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் இதை போலீசிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை என்றும் புகார் ஒன்றை அளித்துள்ளார். இந்த புகார் குறித்து மும்பை போலீஸ் உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி ட்விட்டரில் சரமாரியாக பதிவுகளை பதிவிட்டுள்ளார்.

பாவ மன்னிப்பு கேட்கவந்த பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை:பாதிரியார்கள் 4 பேர் மீது வழக்குப்பதிவு!

கேரளாவில் உள்ள கோட்டயம் அருகில் பாவ மன்னிப்பு கேட்கவந்த பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட பாதிரியார்கள் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் மிரட்டப்பட்டதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். முன்னதாக  கேரளாவில் கோட்டயத்தில் பாலியல் குற்றச்சாட்டு கூறிய கன்னியாஸ்திரிக்கு எதிராக பிஷப்பும் போலீசில் புகார் செய்தார். இடமாற்றம் செய்ததால் பழிவாங்க பாலியல் புகார் கூறியதாக கன்னியாஸ்திரி மீது பாதிரியார் குற்றச்சாட்டினார். 2014 முதல் 4 ஆண்டுகள் பிஷப் பிரான்கோ … Read more

கேரளாவில் இந்திய மாணவர் சங்கத்தின்  மாணவர் படுகொலை!மாணவர்கள் இன்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்!

கேரள மாநிலம்  கொச்சி மஹாராஜா கல்லூரியில் இந்திய மாணவர் சங்கத்தின்  மாணவர் படுகொலைக்கு எதிராக கேரள மாநில மாணவர்கள் இன்று வகுப்புகளை புறக்கணித்துள்ளனர். கேரள மாநில கல்வித் துறையில், மாணவர் அமைப்புகள் மிகவும் வலுவாக உள்ளன. பெரும்பாலும் இந்த அமைப்புகளில் அடிக்கடி சண்டை நிகழ்வுகளும் நிகழும். கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை வரவேற்பதற்காக மகாராஜா கல்லூரியில்  இந்திய மாணவர் சங்கத்தினர் மற்றும் கேம்பஸ் பிரேண்ட்  முன்னணியின் மாணவர்கள் பிரச்சாரம் செய்துள்ளனர். கேம்பஸ் அமைப்பால் எழுதப்பட்ட சுவர் விளம்பரங்களில்,  இந்திய … Read more

தனிப்பட்ட நலனுக்கானது அல்ல பசுமை வழிச்சாலை திட்டம்! அமைச்சர் ஜெயக்குமார்

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், பசுமை வழிச்சாலை திட்டம் தனிப்பட்ட நலனுக்கானது அல்ல என்று  தெரிவித்துள்ளார். சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் பசுமை வழிச்சாலை திட்டத்தில் தமிழக அரசு சர்வாதிகாரி போல் நடந்து கொள்வதாக எம்.பி. கனிமொழி பேசி இருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த ஜெயக்குமார், பொதுமக்களுக்காகவே சாலைத் திட்டம் கொண்டு வரப்படுவதாகவும், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை பெருக்க வேண்டியது அரசின் கடமை என்றும் தெரிவித்தார்.

ஒரே போட்டியில் குவியல் குவியலாக சாதனை படைத்த இந்திய அணி!

 இந்திய அணி,இந்தியா ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டத்திலேயே ஆப்கானிஸ்தான் அணியை எளிதாக வீழ்த்தி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் இந்திய அணி மிகக்குறைந்த பந்துக்கள் வீசி மாபெரும் வெற்றிபெற்ற டெஸ்ட் போட்டிகளில் இந்த டெஸ்ட் போட்டி முதலிடத்தை பிடித்துள்ளது. குறைந்த பந்துக்கள் வீசி இந்திய அணி வெற்றிபெற்ற மேலும் சில போட்டிகளின் விவரங்கள் இதோ 399 பந்துக்கள், இந்தியா vs ஆப்கானிஸ்தான், பெங்களூரு, 2018* 554 பந்துக்கள், … Read more

ஏழு பேர் சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக பதவியேற்பு!

இன்று சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்ட ஏழு கூடுதல் நீதிபதிகள்  பதவியேற்றுக் கொண்டனர். சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளையோடு சேர்த்து மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 75 ஆகும். ஆனால் தற்போது 56 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர்.புதிதாக ஏழு நீதிபதிகளை நியமிக்க சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான மூத்த நீதிபதிகள் குழு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் குழுவுக்கு பரிந்துரை செய்தது. அதன்படி வழக்கறிஞர்களாக பணிபுரிந்துவரும் பி.டி.ஆஷா, எம்.நிர்மல்குமார், சுப்ரமணியபிரசாத், என்.ஆனந்த் வெங்கடேஷ், ஜி.கே.இளந்திரையன், கிருஷ்ணன் ராமசாமி, … Read more

இன்ஃபோசிஸ் துணை நிறுவனர் நந்தன் நிலேகனி சொத்துக்களில் பாதியை அறக்கட்டளைக்கு வழங்குகிறார்!

ஏழை மக்களுக்கான பில்கேட்ஸ் அறக்கட்டளைக்கு இன்ஃபோசிஸ் துணை நிறுவனர் நந்தன் நிலேகனி உள்பட 3 இந்திய வம்சாவளியினர் தங்களது ஆஸ்தியில் பாதியை  நன்கொடையாக அளிக்க முன்வந்துள்ளனர். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் பில்  கேட்ஸ் அவரது மனைவி மெலிண்டா கேட்ஸ் ஆகியோர் தங்களது சொத்துக்களில் பாதிக்கும் மேற்பட்ட பகுதியை பில் அன்டு மெலிண்டா கேட்ஸ் என்ற அறக்கட்டளையைத் தொடங்கி அதற்கு வழங்கினர். இதைத் தொடர்ந்து இந்தியா, கனடா, சவுதி அரேபிய நாடுகளைச் சேர்ந்த உலக பணக்காரர்கள் பலரும் இதே … Read more

காலா திரைப்படத்தை வெளியிட அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை!மக்கள் வேண்டாம் என நினைத்தால் காலா படம் வேண்டாம்!கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி அதிரடி

திரைப்படத்தை வெளியிட அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை, மக்கள் வேண்டாம் என நினைத்தால் அரசு தலையிடாது என்று  கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி திட்ட வட்டமாக தெரிவித்துள்ளார். மேலும்  கர்நாடகாவில் காலா படத்தை வெளியிடக்கூடாது என்ற கோரிக்கை பற்றி பரிசீலித்து வருகிறேன். கன்னட திரைப்பட வர்த்தகசபை காலா படத்தை வெளியிடக்கூடாது என மனு அளித்துள்ளது. காலா கர்நாடகாவில் வெளியாக கன்னட மக்களுக்கு விருப்பமில்லை என மனுவில் கூறியுள்ளனர் என்று கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார். முன்னதாக  கடந்த 2016ஆம் ஆண்டு … Read more